'தி எலிபேன்ட் விஸ்பெரரஸ்' இயக்குநருக்கு ரூ.1 கோடி ஊக்கத்தொகை! ஆஸ்கர் வென்றதற்கு கவுரவித்த ஸ்டாலின்!
ஆஸ்கர் வென்ற இளம் பெண் இயக்குநருக்கு ரூ.1 கோடி ஊக்கத் தொகை வழங்கிய முதல்வர் ஸ்டாலின்.
சென்னை: ஆஸ்கர் வென்ற 'தி எலிபேன்ட் விஸ்பெரரஸ்' குறும்படத்தின் இயக்குநர் கார்த்திகி கொன்சால்வ்ஸ்க்கு ரூ.1 கோடி ஊக்கத்தொகைக்கான காசோலையை முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் வழங்கினார்.
ஆஸ்கார் விருது பெற்று உலக அளவில் தமிழ்நாட்டிற்கு பெருமை தேடித் தந்த ஆவணப்படம் "தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ்" என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான விவரம் வருமாறு;

கார்த்திகி கொன்சால்வ்ஸ்
அப்போது, இயக்குநர் செல்வி. கார்த்திகி கொன்சால்வ்ஸ், தான் பெற்ற ஆஸ்கார் விருதினை முதலமைச்சரிடம் காண்பித்து வாழ்த்துப் பெற்றார். முதுமலை யானைகள் முகாமில் எடுக்கப்பட்ட ஆவணப் படமான "தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ்" ஆவணப் படத்திற்கான குறும்படப் பிரிவில் ஆஸ்கார் விருதை வென்றுள்ளது. இக்குறும்படத்தை செல்வி. கார்த்திகி கொன்சால்வ்ஸ் இயக்கியுள்ளார். தமிழ்நாடு வனத்துறையின் பராமரிப்பாளர்களால் இளம் யானைக் குட்டிகள் வளர்க்கப்படும் முறையை இந்தப் படம் விவரிக்கிறது.

தி எலிபேன்ட் விஸ்பெரரஸ்
தமிழ்நாட்டின் முதுமலை புலிகள் காப்பகத்தில் அமைந்துள்ள தெப்பக்காடு யானைகள் முகாமில் பணியாற்றி வரும் பொம்மன் மற்றும் பெல்லி ஆகிய யானை பராமரிப்பாளர்களால் ஆறு மாத வயதில் முகாமிற்கு கொண்டு வரப்பட்ட "ரகு" யானைக் குட்டியை மேற்படி பராமரிப்பாளர்கள் எவ்வாறு கவனத்துடன் பராமரித்தார்கள் என்பதை ஆவணப்படம் காட்டுகிறது. இப்படம் அதே முகாமில் காப்பாளர்களால் வளர்க்கப்பட்ட மற்றொரு யானைக் குட்டியான "அம்மு" பராமரிக்கப்பட்ட கதையையும் விவரிக்கிறது.

“ஆஸ்கார்” விருது
இந்த ஆவணப்படம் சினிமா துறையில் மிக உயரிய விருதான "ஆஸ்கார்" விருதை வென்றுள்ளதுடன் தமிழ்நாட்டிற்கு பெருமையையும் சேர்த்துள்ளது. இந்த ஆவணப்படம் மூலம், யானைகளை பாதுகாப்பது குறித்த தமிழ்நாடு வனத்துறையின் பணி உலக கவனத்தை ஈர்த்துள்ளது. இதை அங்கீகரிக்கும் வகையில், முதலமைச்சர் ஸ்டாலின், தமிழ்நாடு அரசின் வனத்துறைக்கு பெருமை ஏற்படுத்தியதற்காக, ஆஸ்கார் விருது பெற்ற ஆவணப்படமான "தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ்" படத்தினை உருவாக்கிய செல்வி.கார்த்திகி கொன்சால்வ்ஸ்க்கு பாராட்டுச் சான்றிதழும், ரூ.1 கோடிக்கான காசோலையும் இன்று வழங்கினார்.

91 யானைப் பாகன்கள்
முன்னதாக முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த 15ஆம் தேதி அன்று ஆதரவற்ற யானைக் குட்டி "ரகு"வின் பராமரிப்பாளர்களான பொம்மன் மற்றும் பெல்லி ஆகியோருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் காசோலை மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். மேலும், முதலமைச்சர் அறிவிப்பிற்கிணங்க, முதுமலை புலிகள் காப்பகத்தின் தெப்பக்காடு யானைகள் முகாம் மற்றும் ஆனைமலை புலிகள் காப்பகத்தின் கோழிகம்முத்தி யானைகள் முகாமில் பணிபுரியும் 91 யானைப் பாகன்கள் மற்றும் காவடிகளுக்கு மானியமாக முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா 1 லட்சம் ரூபாய் வீதம் வழங்கப்பட்டுள்ளது.
-
அட.. இதை கவனிச்சீங்களா? தமிழகத்திலேயே 2 குடும்பம் மட்டும்தான்! திமுகவில் களமிறங்கும் தந்தை - மகன்கள் -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
DMK: 3 அமைச்சர்களுக்கு சீட் இல்லை.. ஸ்டாலின் அறிவித்த திமுக வேட்பாளர் பட்டியலில் ஷாக்! -
பெண்கள், படித்தவர்களுக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்..டாக்டர் பட்டம் பெற்றவர்கள் மட்டும் இத்தனை பேரா? -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
Election Exclusive: வரம் கொடுத்த சாமி தலையில் கை வைத்த பிரேமலதா.. திமுக தொகுதிகளை கேட்டு அடம்! குட்டையைக் குழப்பு காங்.! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications