நிதித்துறை செயலாளர் உதயசந்திரன் ஐ.ஏ.எஸ். தாயார் லீலாவதி மறைவு! முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்!
சென்னை: நிதித்துறை செயலாளர் உதயசந்திரன் ஐ.ஏ.எஸ். தாயார் லீலாவதி மறைவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் ஸ்டாலின் விடுத்துள்ள இரங்கல் பதிவு வருமாறு;
''தமிழ்நாடு அரசின் நிதித்துறை முதன்மைச் செயலாளர் திரு.த.உதயச்சந்திரன் இ.ஆ.ப., அவர்களின் அன்னையார் திருமதி. லீலாவதி அவர்கள், உடல்நலக் குறைவால் மறைவெய்தினார் என்ற செய்தியறிந்து மிகவும் வருந்தினேன்.

அவரது மறைவால் வாடும் திரு.உதயச்சந்திரன், அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.'' இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மிகவும் ஏழ்மையான குடும்ப பின்னணியிலும் மகனின் கல்விக் கனவுக்கு தடை போடாதவர் லீலாவதி. ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மத்தியிலேயே கறார் பேர்வழி என்று பெயரெடுத்த உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ். தனது அம்மா லீலாவதியின் சொல்பேச்சு மீறாதவர்.
வயது மூப்பு காரணமாக கடந்த சில மாதங்களாகவே உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அம்மாவை கவனமுடன் கவனித்து வந்தார் உதயசந்திரன் ஐ.ஏ.எஸ்.

பொருளாதாரத்தில் பின் தங்கிய குடும்பமாக இருப்பினும் உதயசந்திரனை அவரது இஷ்டம் போல் படிக்க வைத்தவர் அவரது தாயார் லீலாவதி. பள்ளிப்படிப்பை முடித்து கல்லூரியில் சேர்ந்த உதயசந்திரன் ஐ.ஏ.எஸ். க்கு கல்விக்கட்டணம் செலுத்த போதிய வசதி இல்லாததால் தேசியமயமாக்கப்பட்ட வங்கியை அனுகிய போது, அவருக்கு வங்கி மேலாளரால் கல்விக்கடன் மறுக்கப்பட்டிருக்கிறது.
அதன் வேதனையும், வலியும், உதயச்சந்திரனுக்கு நன்றாகவே தெரியும் என்றதால் தான் என்னவோ, இவர் ஈரோடு மாவட்ட ஆட்சியராக இருந்தபோது ஒரே மாதத்தில் 8,000 பேருக்கு கல்விக்கடன் கொடுக்க நடவடிக்கை எடுத்தார்.












Click it and Unblock the Notifications