திமுக உண்ணாவிரதம்! சர்க்கரை வியாதியால் அவதிப்படும் சீனியர்களுக்கு விதிவிலக்கு கொடுத்த ஸ்டாலின்!
சென்னை: நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும் ஆளுநர் ரவியை கண்டித்தும் திமுக சார்பில் நாளை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் நிலையில், சர்க்கரை வியாதியால் அவதிப்படும் நிர்வாகிகளுக்கு விதிவிலக்கு கொடுத்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.
அந்த வகையில் நாளைய தினம் பல இடங்களிலும் சீனியர் அமைச்சர்களும், நிர்வாகிகளும் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கி வைக்கவும், முடித்து வைக்கவும் மட்டுமே செல்லவுள்ளார்கள்.

அந்த வகையில் துரைமுருகன், கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, முத்துசாமி, ஆர்.எஸ்.பாரதி, ஜெகத்ரட்சகன், திண்டுக்கல் ஐ.லியோனி, ராஜகண்ணப்பன் உள்ளிட்ட இன்னும் சில அமைச்சர்களும், நிர்வாகிகளும் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கி வைக்கவும், முடித்து வைக்கவும் மட்டும் செல்லவுள்ளார்கள்.
இது தொடர்பாக திமுக தலைமைக்கழகம் விடுத்துள்ள அறிவிப்பு வருமாறு;
தமிழ்நாட்டு மாணவர்களின் மருத்துவராகும் கனவைச் சிதைத்து - அவர்களின் உயிரைப் பறிக்கின்ற உயிர்க்கொல்லியாக உருவெடுத்துள்ள நீட் தேர்வைத் திணிக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசு - ஆளுநரைக் கண்டித்தும், நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும் தி.மு.கழகத்தின் இளைஞர் அணி - மாணவர் அணி - மருத்துவ அணி சார்பில், தமிழ்நாடு முழுவதும் மாவட்டத் தலைநகரங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் கழக மாநிலங்களிலும் நாளை மாபெரும் உண்ணாவிரத அறப்போர் நடைபெற உள்ளது.
காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ள இந்த உண்ணாவிரத அறப்போரில் அந்தந்த மாவட்டங்களில் உள்ள மாணவ - மாணவியர், அவர்களின் பெற்றோர், கல்வியாளர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள், கலந்து கொள்கிறார்கள்.
நீட் தேர்வுக்கு எதிரான ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் மனநிலையைப் பிரதிபலிக்கும் வகையில் தன்னார்வலர்களும் பொது மக்களும் தங்களின் மேலான கருத்துகளை எடுத்துரைப்பார்கள். அந்தந்த மாவட்டத்தில் உள்ள மாவட்ட - ஒன்றிய - நகர - பகுதி - பேரூர் - வார்டு - கிளை உள்ளிட்ட கழகங்களின் நிர்வாகிகள், சட்டமன்ற உறுப்பினர்கள, அணிகளின் நிர்வாகிகள் என அனைவரும் கலந்து கொள்கிறார்கள். உண்ணாவிரத அறப்போராட்டப் பணிகளை இளைஞர் அணி - மாணவர் அணி - மருத்துவ அணிகளின் மாவட்ட அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் ஒருங்கிணைக்கிறார்கள்.
சென்னையில் வள்ளுவர் கோட்டம் அருகே நடைபெறும் உண்ணாவிரத அறப்போராட்டத்தில் கழக இளைஞர் அணி செயலாளரும் மாண்புமிகு அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கலந்துகொள்கிறார்கள். இந்த அறப்போராட்டத்தை கழக பொதுச் செயலாளர், அமைச்சர் துரைமுருகன் தொடங்கிவைக்கிறார்கள்.
அமைச்சர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அணிகளின் தலைவர்கள், இணை - துணை தலைவர்கள், இணை - துணை செயலாளர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் உள்பட உண்ணாவிரத அறப்போராட்டத்தில் கலந்துகொள்பவர்களின் விவரம் தலைமைக் கழக ஒப்புதலோடு அறிவிக்கப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications