பதவி பறிபோகும்! திமுக மாவட்டச் செயலாளர்களுக்கு ஸ்டாலின் கொடுத்த ஷாக்! ''நான் காலி.. இப்ப நான் காலி''
சென்னை: நாடாளுமன்றத் தேர்தலில் திமுக வேட்பாளர் தோற்றால் மாவட்டச் செயலாளர் பதவி பறிபோகும் என கடுமையான முறையில் எச்சரிக்கை விடுத்திருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.
அதேபோல் தொகுதி பார்வையாளர்களுக்கு சரியாக ஒத்துழைப்பு கொடுக்காத மாவட்டச் செயலாளர்கள் மாற்றப்படுவீர்கள் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார். முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் 1ஆம் தேதியான இன்று திமுக தொகுதி பார்வையாளர்கள்/ மாவட்டச் செயலாலர்கள் கூட்டம் காணொலி வாயிலாக நடைபெறும் என துரைமுருகன் அறிவித்திருந்தார்.

காணொலி மூலம் நடக்கும் கூட்டம் தானே, வழக்கம் போல் அறிவுரைகள் கூறிவிட்டு கூட்டம் கலைக்கப்படும் என்ற நினைப்பில் வந்து அமர்ந்த பலருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் பேச பேச வியர்த்துக் கொட்டியிருக்கிறது. தொகுதிப் பார்வையாளர்களுக்கு பல மாவட்டச் செயலாளர்கள் சரியாக ஒத்துழைப்பு தருவதில்லை என புகார் வந்திருப்பதாக கூறியவர், இனியும் இப்படி ஒரு புகார் வரும் பட்சத்தில் மாற்றம் உறுதி என்பதை புரிய வைத்தார்.
மேலும், எல்லாவற்றுக்கும் மேலக நாடாளுமன்றத் தேர்தலில் திமுக வேட்பாளர் தோற்றால் மாவட்டச் செயலாளர் பதவியை பறித்துவிடுவேன் என்பதை மிக ஓபனாக கூறி எச்சரித்துள்ளார். இதனால் சம்பிரதாய கூட்டம் என எண்ணி வந்தவர்களுக்கு பெரும் அதிர்ச்சியையும், கலக்கத்தையும் கொடுத்தது.
நாடாளுமன்றத் தேர்தலில் 40க்கு 40 தொகுதிகளை வெல்ல வேண்டும் என்பதில் முதலவர் ஸ்டாலின் மிக உறுதியாக உள்ளார் என்பது இதிலிருந்தே தெரிகிறது. இதனிடையே கட்சியின் தொண்டர்களையும், கீழ்மட்ட நிர்வாகிகளையும் அணுசரித்துச் செல்ல வேண்டியது பற்றியும் அட்வைஸ் அளித்திருக்கிறார்.
கோஷ்டிப் பூசலை மனதில் வைத்துக் கொண்டு நாடாளுமன்றத் தேர்தலில் யாரேனும் வேலையை காட்டினால் அப்போதிருக்கிறது கச்சேரி என்பதை சூசகமாக உணர்த்தியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
மொத்தத்தில் திமுக மாவட்டச் செயலாளர்களுக்கும், அமைச்சர்களுக்கும், கட்சியில் பொறுப்பில் உள்ளவர்களுக்கும் நாடாளுமன்றத் தேர்தல் அக்னிப் பரீட்சையாக அமைந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
-
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications