ஒரு அடிதானே காட்டாறு ஓடுதுனு அலட்சியம் வேண்டாம்.. அனிமேஷன் வீடியோவுடன் எச்சரிக்கும் ஐபிஎஸ்
சென்னை: ஒரு அடி அளவில்தானே சாலையின் குறுக்கே காட்டாறு ஓடுகிறது என நினைத்து வாகனங்களில் கடந்து செல்ல முயற்சித்தால் அது மிகப் பெரிய ஆபத்தில் முடியும் என ஐபிஎஸ் அதிகாரி டாக்டர் ஆர் ஸ்டாலின் வீடியோவுடன் விளக்கமளித்துள்ளார்.
Recommended Video
சமூகவலைதளங்கள் பெருகிவிட்ட நிலையில் உலக அதிசயங்கள், ஆபத்துகள், பாராட்டத்தகுந்தவைகள், கவனிக்கத்தக்கவை உள்ளிட்டவைகளை பெரும்பாலும் பலர் ஷேர் செய்து வருகிறார்கள்.
அந்த வகையில் ஐபிஎஸ் அதிகாரி ஸ்டாலின் பல்வேறு வீடியோக்களையும் தகவல்களையும் வெளியிட்டு வருகிறார். ஒரு பிரத்யேக நாற்காலியை காட்டி இந்த நாற்காலிகளை தோட்ட பகுதியில் போட்டு உட்கார்ந்துவிட்டு உள்ளே எடுத்து வரும் போது ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என ஒரு வீடியோ போட்டிருந்தார்.

ஜாக்கிரதை
அப்படி ஜாக்கிரதையாக எடுத்து வராவிட்டால் என்ன நடக்கும் என்பதையும் சொல்லி அதில் மறைந்திருந்த பாம்பை காட்டினார். அது போல் மழைக்காலங்களில் ஷூக்களை போடும் போது பார்த்து போட வேண்டும். இல்லாவிட்டால் விஷ ஜந்துகள் அதில் குடிபுகுந்துவிடும் என்பதையும் ஆதாரத்துடன் வீடியோ மூலம் விளக்கியுள்ளார்.

அஜாக்கிரதை
சிறிய சிறிய அஜாக்கிரதைகளால் நிறைய பேர் தங்களது வாழ்க்கையை இழந்துள்ளார்கள். இது போன்ற எச்சரிக்கைகள் அடுத்தவர்களுக்கு நிச்சயம் பயன்படும். அந்த வகையில் தற்போது அவர் ஒரு அனிமேஷன் வீடியோவை வெளியிட்டுள்ளார். அதாவது சாலையில் ஒரு கார் சென்று கொண்டிருக்கிறது.

சாலையின் குறுக்கே காட்டாற்று வெள்ளம்
அப்போது திடீரென சாலையின் குறுக்கே காட்டாற்று வெள்ளம் ஏற்படுகிறது. அது ஒரு அடி அளவுக்கு வரத் தொடங்கியுள்ளது. சரி ஒரு அடித்தானே அதற்குள் சாலையை கடக்கலாம் என நினைத்து அந்த கார் பயணிக்கிறது. அப்போது நீரின் வேகத்தால் திசை மாறப்பட்டு அடித்துச் செல்லப்படுகிறது.

சிக்கும் கார்
ஒரு உடைந்த மரத்தின் கிளையின் அடியில் கார் சிக்கிக் கொள்கிறது. அந்த உடைந்த மரத்தின் தண்டு காரை அழுத்தி மூழ்கடித்துவிடுகிறது. அதாவது தண்ணீரின் ஆற்றலுடன் எப்போதும் விளையாட கூடாது என்பதைத்தான் ஐபிஎஸ் அதிகாரி ஸ்டாலின் தெரிவித்து வருகிறார். சிறிய காரை அடித்துச் செல்ல 12 அங்குல தண்ணீர் போதுமானது என்றும் பெரிய வாகனங்களை அடித்துச் செல்ல 18 முதல் 24 அங்குல தண்ணீர் போதுமானது என்றும் தெரிவித்துள்ளார்.

வெள்ள காலங்களில் பாதிப்பு
மேலும் ஆண்டுதோறும் வெள்ள காலங்களில் பாதிக்கும் மேற்பட்ட இறப்புகள் இது போன்று அஜாக்கிரதையால் ஏற்படுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அது போல் மழைக்காலங்களில் தரைப்பாலங்களில் வெள்ள நீர் செல்லும். அதன் வேகம் குறித்து கவலைப்படாமல் மக்கள் அதை கடக்க முற்படுவதை நாம் பார்த்துள்ளோம்.












Click it and Unblock the Notifications