“பிடிஆரே சொல்றாரு.. நிர்வாகத் திறனற்ற பொம்மை முதலமைச்சர் தான் ஸ்டாலின்” - எடப்பாடி அட்டாக்!
சென்னை: ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் முதலீடுகள் குறைந்து வருவதாகவும், விளம்பர வெற்றிகளில் மிதக்கும், நிர்வாகத் திறனற்ற பொம்மை முதலமைச்சராக ஸ்டாலின் இருக்கிறார் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில், "பொம்மை முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களே, உலக நாடுகளுக்கு முதலீட்டை ஈர்க்கச் செல்கிறேன் என்று கூறி சுற்றுலா சென்று, தமிழ்நாடு "நம்பர் ஒன்" மாநிலம் என்று வெற்று விளம்பரங்களில் உயர்த்திப் பிடிக்கும் உங்கள் குடும்ப ஆட்சி, அந்நிய முதலீடுகளில் (FDI) மாநிலத்தை பின்னடைவின் பிடியில் தள்ளியுள்ளது என்பதை தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான துறையின் (DPIIT) 2024-25 நிதியாண்டு தரவுகள் அம்பலப்படுத்துகின்றன.

'ஆட்சிக்கு வந்தவுடன் முதலீட்டை ஈர்க்கிறேன்' என்று பொம்மை முதலமைச்சர் 2022-ல் துபாய் மற்றும் ஐக்கிய அரேபிய எமிரேட்ஸ் நாடுகளுக்குச் சென்று ஈர்த்த முதலீடுகள் என்ன ? லூலூ மால், நோபுள் ஸ்டீல் என தொடக்கமே ஏமாற்று மாடல்தான்.. 2023-ல் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகள், 2024 பிப்ரவரியில் ஸ்பெயின், 2024 செப்டம்பரில் அமெரிக்கா சுற்றுப் பயணம் என்று விளம்பரங்கள் செய்து, 4 முறை வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டு ஈர்த்த முதலீடுகள் எவ்வளவு ?
எனது தலைமையிலான அம்மாவின் அரசில் (2016-29, 2 லட்சம் கோடி முதலீட்டில் செமி கண்டக்டர் தொடர்பான தொழில் நிறுவனங்கள் அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, பலனளிக்கும் நேரத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. விடியா திமுக-வின் அலட்சியம் காரணமாக இத்தொழிற்சாலைகள் குஜராத் மற்றும் அள்ளாம் மாநிலங்களுக்கும் சென்றுவிட்டன.
இவ்வாறு பிற மாநிலங்கள் சர்வதேச முதலீடுகளையும், தொழில் வளர்ச்சியையும் திறம்பட பயன்படுத்தி முன்னேறும்போது தமிழகம் பொம்மை முதலமைச்சர் ஸ்டாலினின் மெத்தனமான மற்றும் அலட்சியமான ஆட்சியால் பின்தங்கி பொருளாதார வாய்ப்புகளை இழந்து வருகிறது.
மத்திய அரசு, கடலோர மாவட்டங்களின் தொழில் வளர்ச்சிக்கு இந்த ஆண்டு பத்திய பட்ஜெட்டில் ரூ. 1.50 லட்சம் கோடி ஒதுக்கியுள்ளது. தொழில் வளர்ச்சிக்கான திட்டங்கள் குறித்து மத்திய அரசு சிங்கப்பூர் துணைப் பிரதமருடன் நடத்திய பேச்சுவார்த்தையின்போது ஆத்திரா, குஜராத் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த அரசுகளின் பிரதிநிதிகளும் பங்கேற்று, அவர்களது கடலோர மாவட்டங்களின் துறைமுகங்களை மேம்படுத்துவதற்கும், தொழில் வளர்ச்சிக்கும் பல திட்டங்கள் தீட்டியுள்ளன.
ஆனால், விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசு தனது அலட்சியத்தால் தமிழக கடலோர மாவட்டங்களின் துறைமுகங்களை மேம்படுத்தவும், தொழில் வளர்ச்சியை மேம்படுத்தவும் எந்தவித முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை. விடியா திமுக ஸ்டாலின் பாடல் ஆட்சி, ஒரு சுய தம்பட்ட அரசு என்பதற்கு பல உதாரணங்கள் உள்ளன.
இந்தியாவிலேயே உற்பத்தி மதிப்பில் 9.69 சதவீதம் அடைந்து முதலிடம் பிடித்துவிட்டதாக தம்பட்டம் அடித்து, கோட்டு சூட்டுடன் தமிழகத்தில் உள்ள அனைத்து தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ்களிலும் அதிக அளவில் அரசுப் பணத்தை வீணடித்து முதல் பக்கத்தில் விளம்பரப்படுத்திக்கொண்ட ஒரே முதலமைச்சர் விடியா திமுக-வின் பொம்மை முதலமைச்சர் ஸ்டாலினாகத்தான் இருக்கும்.
விடியா திமுக அரசு வெற்று விளம்பரங்கள் மூலம் உண்மைகைளை மறைக்கும் அரசு என்பதை தமிழக மக்கள் நன்றாகவே உணர்ந்துள்ளனர். நான்காண்டுகளில் தமிழகத்தை அனைத்துத் துறைகளிலும் பின்னுக்குத் தள்ளி, கடன் வாங்குவதில் நாட்டிலேயே முதன்மை மாநிலமாக்கியதுதான் பொம்மை முதலமைச்சர் ஸ்டாலினின் சாதனை.
இந்தச் சாதனையை பல கோடி அரசு செலவில் விளம்பரப்படுத்துவது வேதனை. இரு நாட்களுக்கு முன்பு விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், மதுரையில் இந்திய தொழில் கூட்டமைப்பு நடத்திய கருத்தரங்கில் பேசும்போது ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானாவுடன் ஒப்பிடுகையில், தமிழகத்தில் தொழில்துறை பின்தங்கியுள்ளது என்று கருத்து தெரிவித்துள்ளார். இதுவே, பொம்மை முதலமைச்சர் ஸ்டாலினின் ஆட்சியில் தொழில்துறை பின்தங்கியுள்ளது என்பதற்கு சான்று.
இந்தக் கொடுமையை அனுபவிக்கும் தமிழக மக்கள், 2026 சட்டமன்றப் பொதுத் தேர்தலில் ஸ்டாலின் திமுக-விற்கு 'தோல்வி'யை பரிசளித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆட்சியில் அமர்த்துவார்கள்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications