“டுவிஸ்ட்”.. மோடியை சென்னையில் தனியாக சந்தித்த ஸ்டாலின்! “அது” என்ன லெட்டர்.. பின்னணி என்ன?
சென்னை: சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமான நிலையத்தில் தனியாக சந்தித்து பேசி வருகிறார். அரசு நிகழ்ச்சியில் இருவரும் ஒன்றாக கலந்துகொண்ட நிலையில் தமிழ்நாட்டிற்கான பல்வேறு கோரிக்கைகளை நேரில் தெரிவிக்க அவரை தனியாக சந்தித்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கை மனுவை வழங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தென் மாநிலங்களுக்கு 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள, பிரதமர் நரேந்திர மோடி, காலை தெலுங்கானாவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று புதிய திட்டங்களை தொடங்கி வைத்தார். அதன் பின் சென்னைக்கு வந்த அவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் விமான நிலையத்தில் அரசு மரியாதைபடி வரவேற்பு கொடுத்தனர்.

அதை தொடர்ந்து சென்னை விமான நிலைய புதிய முனையத்தை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்யா சிந்தியா மற்றும் அதிகாரிகளுடன் அதை பார்வையிட்டார். அதன் தொடர்ச்சியாக சென்னை - கோவை இடையிலான வந்தே பாரத் ரயில் சேவை திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதிலும் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துகொண்டார்.
பல்லாவரம் நிகழ்ச்சி: அதன் பின்னர் சென்னை மெரினா கடற்கரையை ஒட்டி அமைந்து உள்ள விவேகானந்தர் இல்லத்தில் நடைபெற்ற மயிலாப்பூர் ராமகிருஷ்ண மடத்தின் 125 வது ஆண்டு விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அடுத்ததாக மாலை தமிழ்நாட்டில் பல்வேறு புதிய ரயில் மற்றும் சாலை போக்குவரத்து திட்டங்களை தொடங்கி வைக்கும் நிகழ்வில் பிரதமர் மோடி, முதலமைச்சர் முக ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய அமைச்சர்கள் அஷ்விணி வைஷ்ணவ், ஜோதிர் ஆதித்ய சிந்தியா, நெஞ்சாலைத்துறை அமைச்சர் எவ வேலு, அமைச்சர் தாமொ அன்பரசன், திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டிஆர் பாலு, மாநில அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தனியாக சந்திப்பு: இதில் பிரதமர் மோடி, முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்டோர் உரையாற்றிய நிலையில், சென்னை விமான நிலையம் சென்ற மோடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனியாக சந்தித்து பேசி இருக்கிறார். இந்த சந்திப்பின்போது தமிழ்நாட்டுக்கு தேவையான பல்வேறு முக்கிய கோரிக்கைகளை அவர் வலியுறுத்தி மனு வழங்கியதாக கூறப்படுகிறது. குறிப்பாக ஆன்லைன் ரம்மி தடைக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காத நிலையில் அது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை வைத்திருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்டாலின் பேச்சு: முன்னதாக பல்லாவரம் நிகழ்வில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், "தமிழ்நாட்டின் உள்கட்டமைப்பு திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடிக்கு முதலில் நன்றி சொல்கிறேன். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு தேவையான முக்கிய திட்டங்களை தொடங்கி வைக்க வந்து உள்ளார் பிரதமர் மோடி. அந்த அடிப்படையில் தமிழ்நாட்டிற்கு தேவையான கட்டமைப்பு திட்டங்களை நிறைவேற்றுவதற்கு திராவிட மாடல் அரசும் முனைப்போடு முயன்று வருகிறது. சென்னை 2 வது கட்ட மெட்ரோ ரயில் திட்டம், கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு ஒன்றிய அரசு ஒப்புதல் வழங்க வேண்டும். மாநிலங்களுக்கு நிதி தேவையும், மாநில மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதிலும் ஒன்றிய அரசின் ஒத்துழைப்பு மிக மிக தேவை.
-
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
பரந்தூர்-க்கு சொன்ன நோ.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா?












Click it and Unblock the Notifications