சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எல்லாவற்றிலும் ஏடாகூடம்.. மு.க.ஸ்டாலினிடம் டோஸ் வாங்கிய எ.வ.வேலு

Google Oneindia Tamil News

Recommended Video

    பரமக்குடி தோல்வி!.. ராமநாதபுர திமுகவில் கூடிய விரைவில் களையெடுப்பு- வீடியோ

    சென்னை: முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மீது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் டென்ஷனாக இருக்கிறாராம். இதை அவரிடமே காட்டியதாகவும் சொல்கிறது அறிவாலயம் வட்டாரம்.

    ஸ்டாலின் அதிக நம்பிக்கை வைத்துள்ள சிலரின் வேலுவும் ஒருவர். ஸ்டாலின் குடும்பத்துக்கும் வேலு ரொம்ப நெருக்கமானவர். இந்த லாபியால் வேலு சொல்லும் பல யோசனைகளை, ஸ்டாலின் தட்டாமல் கேட்பாராம். அத்தனை நம்பிக்கை.

    இந்த அடிப்படையில்தான் லோக்சபா தேர்தலிலும், சட்டசபை இடைத் தேர்தலிலும் வேலு சொன்ன பல பரிந்துரைகளை தட்டாமல் ஏற்றார் ஸ்டாலின் என்கிறார்கள். ஆனால் வேலு மீது சரமாரியாக வந்து குவிந்த புகார்களால் கடுப்பாகி விட்டாராம்.

    ஜெயிச்சிட்டீங்க.. இதை வெச்சு என்ன செய்ய போறீங்க?.. 37 பேரை வச்சு ஒன்னும் செய்ய முடியாது.. சீமான் ஜெயிச்சிட்டீங்க.. இதை வெச்சு என்ன செய்ய போறீங்க?.. 37 பேரை வச்சு ஒன்னும் செய்ய முடியாது.. சீமான்

    முன்னணி தலைவர்

    முன்னணி தலைவர்

    திமுகவின் முன்னணி மற்றும் முக்கிய நிர்வாகிகளில் ஒருவராக திகழ்பவர் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு. தேர்தல் முடிவுக்கு பின்பு இவர் மீது கட்சியினர் சரமாரி புகார்களை முன்வைத்தார்களாம். இதனால் கொதிப்படைந்த ஸ்டாலின் எ.வ.வேலு மீது கோபத்தில் உள்ளாராம்.

    நடந்தது இதுதான்

    நடந்தது இதுதான்


    இது தொடர்பாக நாம் அறிவாலய உள்வட்டாரத்தில் விசாரித்த போது, இடைத்தேர்தலில் சூலூர் தொகுதி பொறுப்பாளராக இருந்த எ.வ.வேலு, அந்தத் தொகுதியை கைப்பற்றுவதற்கான வியூகத்தை முறையாக அமைக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

    காற்றில் பிறந்த வாக்குறுதி

    காற்றில் பிறந்த வாக்குறுதி

    சூலூர் தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்தபோது வெற்றி பெறுவாரா பொங்கலூர் பழனிச்சாமி என்று ஸ்டாலின் கேட்டாராம். அப்போது அவரது வெற்றிக்கு நான் உத்தரவாதம். எல்லாம் சிறப்பாக போய்க் கொண்டிருக்கிறது. நிச்சயம் வெல்வார் என்று அடித்துக் கூறியிருந்தாராம் வேலு. ஆனால் அது நடக்காமல் போய் விட்டது.

    ஓவர் மிதப்பு

    ஓவர் மிதப்பு

    வெற்றி பெற்றுவிடுவோம் என்ற அதீத நம்பிக்கையில் மிதக்கமான மனநிலையில் அவர் தேர்தல் பணியாற்றியதாக நிர்வாகிகள் ஸ்டாலினிடம் புகார் கூறினார்களாம். அதிலும் வேலு மரியாதைக்குறைவாக நிர்வாகிகளைப் பேசியதாகவே புகார்கள் குவிந்துள்ளன.

    போய்யா போய்யா

    போய்யா போய்யா

    கொங்கு மண்டல நிர்வாகிகளை ஸ்டாலினே வாங்க..போங்க..என மரியாதையாக அழைக்கும் நிலையில், எ.வ.வேலு வாய்யா போய்யா..வா..போ..எனப் பேசி அவர்களை வேலை வாங்கியதால் பெரும்பாலோனோர் தேர்தல் பணியில் தலைகாட்டவில்லை என தோல்விக்கான காரணம் பற்றிய விசாரணையில் தகவல் கிடைத்ததாம்.

    ஆர்.மணி

    ஆர்.மணி

    இதேபோல், பாப்பிரெட்டிபட்டி இடைத்தேர்தலில் திமுக சார்பாக போட்டியிட்ட ஆர்.மணி என்பவர் எ.வ.வேலு சாய்ஸ் தானாம். வேட்பாளருக்கு கட்சியினர் அப்போதே அதிருப்தி தெரிவித்த நிலையில், அதெல்லாம் ஒன்றும் பிரச்சனை இல்லை, ஆர்.மணி வெற்றி பெற்றுவிடுவார் என எ.வ.வேலு தான் ஸ்டாலினிடம் கூறினாராம்.

    இப்படி எ.வ.வேலு சொல்லியது எதுவும் நடக்காததாலும், சூலூரில் அவரின் நடவடிக்கைகள் பற்றிய புகாரும் ஸ்டாலினுக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளதாம். இதனால்தான் வேலுவிடம் தனது அதிருப்தியைக் காட்டினாராம் ஸ்டாலின் என்று சொல்கிறது அறிவாலயம் வட்டாரம்.

    English summary
    DMK president MK Stalin is not happy with former Minister AV Velu.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X