சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சுஜித் பெற்றோருக்கு எப்படி ஆறுதல் சொல்வேன்... மு.க.ஸ்டாலின் உருக்கம்

Google Oneindia Tamil News

Recommended Video

    சுஜித் பெற்றோருக்கு எப்படி ஆறுதல் சொல்வேன்.. ஸ்டாலின் உருக்கம்-வீடியோ

    சென்னை: ஆள்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்த குழந்தை சுஜித்தின் பெற்றோருக்கு எப்படி ஆறுதல் கூறி அவர்களை தேற்றுவது என தெரியாமல் தவிப்பதாக மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக தனது ட்வீட்டர் பக்கத்தில் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ள அவர்,

    Stalins condolence message for sujith demise

    சுஜித்தின் இழப்பு அவனது தனிப்பட்ட குடும்பத்துக்கு ஏற்பட்ட இழப்பல்ல என்றும், அது நாட்டுக்கே ஏற்பட்ட இழப்பு எனவும் கூறியுள்ளார். மேலும், குழந்தை சுஜித் நம் நினைவில் இருந்து நிச்சயம் நீங்கமாட்டான் என்றும், காலங்கள் கடந்தாலும் அவனது மறைவு நினைவில் இருந்துகொண்டே இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

    நாங்கள் துயரக் குழியில் விழுந்து விட்டோம் சுஜித்.. விவேக் கண்ணீர் #RIPSujithநாங்கள் துயரக் குழியில் விழுந்து விட்டோம் சுஜித்.. விவேக் கண்ணீர் #RIPSujith

    கடந்த நான்கு நாட்களாக நாட்டையே ஏக்கத்தில் தவிக்கவிட்ட பாலகன் சுஜித், இப்போது அனைவருக்கும் நிரந்தர சோகத்தை கொடுத்துவிட்டு போய்விட்டான் என உருக்கமுடன் பதிவிட்டுள்ளார். ஆழ்துளைக் கிணற்றுக்குள் இனி ஒரு உயிர் கூட பலியாகிவிடக்கூடாது என்றும், அதுவே சுஜித்துக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலி எனவும் தெரிவித்துள்ளார்.

    ஆழ்துளை கிணற்றுக்குள் எத்தனையோ உயிர்கள் பலியாகிவிட்டதாகவும், இனி மேல் அதுபோன்ற ஒரு நிகழ்வு எந்த இடத்திலும் நடைபெறக்கூடாது எனவும் மு.க.ஸ்டாலின் தனது ட்வீட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

    Stalins condolence message for sujith demise

    இதனிடையே, நேற்று மாலை சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின், சிறுவன் சுஜித் மீண்டுவந்துவிடுவான் என காத்துக்கொண்டு இருப்பதாகவும், அவன் மீண்டு வந்துவிட வேண்டும் என்றும் கூறியது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Stalin's condolence message for sujith demise
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X