"தமிழ்நாடு உங்களை மறக்காது" ஆளுநரிடம் சொல்லி ஸ்டாலின் தந்த பரிசு பாருங்க! உடனே RN ரவியின் பரவச பதில்
சென்னை: தமிழ்நாட்டின் ஆளுநராக இருந்த ஆர்.என். ரவி, மேற்கு வங்க மாநிலத்தின் ஆளுநராக மாற்றப்பட்ட பிறகு, கேரள மாநிலத்தின் ஆளுநராக உள்ள ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கிறார். இந்நிலையில், தமிழக பொறுப்பை விட்டு செல்லும் ஆர்.என்.ரவிக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் மறக்க முடியாத பரிசு ஒன்றை தந்துள்ளார்.
தமிழக அரசியல் களத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே ஆளுநர் மாளிகைக்கும் தலைமை செயலகத்திற்கும் இடையே பல்வேறு கருத்து மோதல்கள் நிலவி வந்ததை ஒட்டுமொத்த நாடும் கவனித்து வந்தது..

ஆளுநர் ஆர்என் ரவி
நீட் தேர்வு விவகாரம், ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் மற்றும் பல்வேறு மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் நீடித்த தாமதம் என ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசுக்கும் இடையே ஒரு பனிப்போரே நடந்து வந்தது..
இத்தகைய அரசியல் சூழலில், திடீர் திருப்பமாக ஆளுநர் ரவி மேற்கு வங்க மாநிலத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டிருப்பது தேசிய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.. நாளை அவர் தமிழகத்திலிருந்து விடுபட்டு புதிய பொறுப்பை ஏற்கவிருக்கும் நிலையில், சென்னை லோக் பவனில் இன்று நடைபெற்ற ஒரு சந்திப்பு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது..
முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு
முதலமைச்சர் ஸ்டாலின் இன்று நேரடியாக லோக் பவன் சென்று ஆளுநர் ரவியை சந்தித்து உரையாடினார்.. இந்த சந்திப்பின்போது இருவருக்கும் இடையே நிலவிய பழைய கசப்புணர்வுகள் அனைத்தும் மறைந்து, ஒரு இணக்கமான சூழல் நிலவியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன..
தமிழகத்தை விட்டுப் பிரியும் ஆளுநருக்கு, தமிழ்ப் பண்பாட்டின் அடையாளமான உலகப் பொதுமறை தந்த திருவள்ளுவரின் சிலையை முதலமைச்சர் ஸ்டாலின் நினைவு பரிசாக வழங்கினார்.. இந்த சந்திப்பு மிகவும் உணர்வுப்பூர்வமாக அமைந்ததாக அங்கிருந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன..
நெகிழ்ச்சி பரிசு
"தமிழ்நாடு எப்போதும் உங்களை நினைவில் வைத்திருக்கும்" என நெகிழ்ச்சியுடன் முதலமைச்சர் சொல்ல, அதற்குப் பதிலளித்த ஆளுநர் ரவி, "தமிழக மக்களின் அன்பும் அரவணைப்பும் என்னை பரவசப்படுத்தியவை, எந்த மாநிலத்திலும் கிடைக்காத உன்னதமான அனுபவத்தை தமிழ்நாடு எனக்குக் கொடுத்திருக்கிறது; தமிழகத்தை என்னால் ஒருபோதும் மறக்க முடியாது" எனத் தனது நெஞ்சார்ந்த நன்றியைப் பகிர்ந்து கொண்டுள்ளார் ஆளுநர் ரவி.
அரசியல் ரீதியாக பல்வேறு முரண்பாடுகள் இருந்த போதிலும், பிரியும் தருணத்தில் ஆளுநரும் முதலமைச்சரும் காட்டிய இந்த பரஸ்பர மரியாதை தமிழக அரசியலின் முதிர்ச்சியைக் காட்டுவதாக அமைந்துள்ளது..
கிளியர் செய்த கோப்புகள்
குறிப்பாக, விடைபெறும் கடைசி நேரத்தில் தமிழக சட்டமன்றத்தில் இடைக்கால பட்ஜெட்டில் நிறைவேற்றப்பட்ட மிக முக்கியமான நிதி தொடர்பான மசோதாக்களுக்கு ஆளுநர் ரவி உடனடியாக ஒப்புதல் அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.. அதுமட்டுமன்றி, நீண்ட காலமாக ஆளுநர் மாளிகையில் நிலுவையில் இருந்த பல்வேறு முக்கியக் கோப்புகளையும் அவர் மொத்தமாக க்ளியர் செய்துவிட்டாராம்.. இது நிர்வாக ரீதியிலான ஒரு சுமூகமான மாற்றத்தை உறுதி செய்துள்ளது..
தமிழக அரசியலில் ஆளுநர் - முதலமைச்சர் இடையிலான மோதல் போக்கு என்பது ஒரு நீண்ட அத்தியாயமாக இருந்து வந்தது.. சட்டப்பேரவையில் ஆளுநர் உரையை வாசிக்கும்போது ஏற்பட்ட சர்ச்சை, தேசிய கீதம் தொடர்பான விவாதங்கள் என எத்தனையோ தருணங்கள் பரபரப்பை கூட்டியிருந்ததை தமிழக மக்களால் மறக்க முடியாது..
மனிதநேயம் - மரியாதை
ஆனால், இன்று லோக் பவனில் நடந்த இந்த சந்திப்பு, ஜனநாயக ரீதியிலான கருத்து வேறுபாடுகளுக்கு அப்பால் மனித நேயமும் மரியாதையும் மேலோங்கி இருப்பதை உணர்த்துகிறது..
அதிலும் முக்கியமாக, திருவள்ளுவர் சிலையை வழங்கி ஆளுநரை வழி அனுப்பி வைத்ததன் மூலம், தமிழகத்தின் பெருமையை ஆளுநர் என்றும் நினைவுகூரும் வகையில் முதல்வர் ஒரு முத்திரையை பதித்துள்ளார்.. தமிழகத்தில் தனது பணிக்காலத்தை முடித்துக்கொண்டு மேற்கு வங்கம் செல்லும் ஆர்.என். ரவி, இந்த மாநிலத்தின் அரசியல் வரலாற்றில் நீக்கமுடியாத ஒரு ஆளுமையாகவே விடைபெறுகிறார்..!!!
- சிறப்பு நிருபர் எழில்
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications