எடப்பாடி பழனிசாமி ஸ்டாலினுக்கு தந்த "62 பரிசு"? கூட்டணி கட்சிகளுக்கு வேட்டு? சிக்ஸர் அடிக்குதா திமுக
சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் முன்பை விட இப்போது அனல் பறக்கத் தொடங்கியுள்ளது.. குறிப்பாக தொகுதிப் பங்கீடு விவரங்கள் வெளியான பிறகு, அறிவாலயம் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறது.. இதற்குப் பின்னால் ஒரு பலமான காரணம் இருக்கிறது.. அதை பற்றின செய்திகள் தான் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது. அது என்ன தெரியுமா?
தமிழக அரசியல் களம் தற்போது மிக முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது.. ஆளும் கட்சியான தி.மு.க-வும், எதிர்க்கட்சியான அ.தி.மு.க-வும் தங்களது கூட்டணிகளை இறுதி செய்து தேர்தல் பணிகளில் வேகம் காட்டி வருகின்றன..

இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கியுள்ள 62 தொகுதிகள் தான்.. இந்தத் தொகுதிகளைத் தி.மு.க தலைமை தங்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட்டாகவே கருதுகிறது..
எடப்பாடி பழனிசாமி கூட்டணி கட்சி
ஏனென்றால், தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில், 172 இடங்களில் அ.தி.மு.க நேரடியாகப் போட்டியிடுகிறது.. இதில் திமுகவுக்கும், அதிமுகவுக்கும் இடையே 121 இடங்களில் நேரடிப் போட்டி நிலவுகிறது.. இந்த இடங்களில் வெற்றி பெறுவது சவாலாக இருக்கும் என்பதை உணர்ந்துள்ள முதல்வர் ஸ்டாலின், அதிமுகவின் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் 62 இடங்களை முதலில் குறிவைத்துள்ளாராம்..
அதில் குறிப்பாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 5 தொகுதிகளுமே திமுகவுக்கு மிகவும் சாதகமாக அமைந்துள்ளதாம்.. ஒட்டன்சத்திரம் தொகுதி அமைச்சர் சக்கரபாணியின் பலமான இடமாக உள்ளது.. அங்கே தமாகாவுக்கு பெரிய அளவுக்கு செல்வாக்கு இல்லையாம்.
திமுகவுக்கு பிளஸ் பாயிண்ட்
அதேபோல ஈரோடு மேற்கில் நீண்ட அனுபவம் கொண்ட அமைச்சர் முத்துசாமியை எதிர்த்து, தமாகாவின் யுவராஜாவை நிறுத்தியிருக்கிறார்கள்.. அந்தத் தொகுதி மக்களுக்குப் புதியவரான யுவராஜாவால் முத்துசாமியை எதிர்கொள்வது கடினம் என்று சொல்லப்படுகிறது.
ராணிப்பேட்டையில் இஸ்லாமிய மக்களின் வாக்குகள் தான் வெற்றியைத் தீர்மானிக்கும்.. அங்கே அமைச்சர் காந்திக்கு எதிராக பாஜகவின் தாமரைச் சின்னத்தில் போட்டியிடும் தமாகா வேட்பாளர் எப்படி வாக்குகளைப் பெறுவார் என்பது சந்தேகம்தான் என்கிறார்கள்.
62 தொகுதிகள்
காங்கிரஸ் கட்சியின் கோட்டையான கிள்ளியூர் தொகுதியை தமாகாவுக்கு எடப்பாடி பழனிசாமி ஒதுக்கியது, உண்மையில் காங்கிரஸ் கட்சிக்குச் சாதகம் செய்துவிட்டது போல உள்ளது.. கும்பகோணத்தில் தி.மு.க-வின் சாக்கோட்டை அன்பழகனை எதிர்த்து அதிமுக நேரடியாக மோதியிருந்தால் போட்டி இருந்திருக்கும்.. ஆனால் அங்கே தமாகா களம் இறக்கப்பட்டிருப்பதால் சாக்கோட்டை அன்பழகன் இப்போது நிம்மதியாக இருக்கிறாராம்..
இப்படி ஆரம்பத்திலேயே 5 தொகுதிகள் திமுக கணக்கில் சேரும் சூழல் உருவாகியுள்ளது.. எடப்பாடி பழனிசாமி தனது கூட்டணிக் கட்சிகளின் பலத்தை அறியாமல் அல்லது தெரிந்தே அவர்களுக்குச் சாதகமில்லாத தொகுதிகளைத் தலையில் கட்டியுள்ளார் என்ற பேச்சும் எழாமல் இல்லை.. அறிவாலயம் இப்போது இந்த 62 தொகுதிகளிலும் தனது முழுக் கவனத்தையும் செலுத்தி, வெற்றியை உறுதி செய்யும் பணிகளில் இறங்கியுள்ளதாம்..
அதிமுக பலே பிளான்
எனினும், அறிவாலயத்தின் வியூகத்தால் 5 தொகுதிகள் இப்போதே கைநழுவும் சூழலை உணர்ந்துள்ள எடப்பாடி பழனிசாமி, அதனைச் சமாளிக்க இரட்டை இலை சின்னத்தின் பாரம்பர்ய செல்வாக்கையும், அடிமட்டத் தொண்டர்களின் உழைப்பையும் மட்டுமே பிரதானமாக நம்பியிருக்கிறார்..
வேட்பாளர்கள் யாராக இருந்தாலும், எதிரி திமுகதான் என்கிற ஒற்றை இலக்கோடு அ.தி.மு.க நிர்வாகிகளை முடுக்கிவிட்டுள்ள அவர், அமைச்சர்கள் மீதான மக்களின் அதிருப்தியைத் தங்களுக்குச் சாதகமாக மாற்றத் திட்டமிட்டுள்ளாராம்..
குறிப்பாக, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 2,000 ரூபாய் போன்ற அதிரடி வாக்குறுதிகள் மூலம் தி.மு.க-வின் பணபலத்தை முறியடிக்க முடியும் என்று அதிமுக பலமாக கணக்கு போடுகிறது.. இப்போதைக்கு திமுக கை ஓங்கியிருப்பது போலத் தெரிந்தாலும், அதிமுகவின் இந்தத் 'திருப்பியடிக்கும்' வியூகம் தேர்தல் முடிவுகளில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்கிறார்கள்.. இவர்களில் யார் வியூகம் வெற்றி பெற போகிறது? பொறுத்திருந்து பார்ப்போம்...!!












Click it and Unblock the Notifications