குஜராத் நிறுவனங்களுக்காக எங்களை பரிதவிக்க விடுவது எந்த விதத்தில் நியாயம்? பிரதமருக்கு ஸ்டாலின் கேள்வி

Subscribe to Oneindia Tamil

சென்னை: "குஜராத்தில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு குறைந்த விலையில் ரஷ்ய கச்சா எண்ணெய் கிடைப்பதற்காக, பல ஆயிரம் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தும் எங்கள் ஏற்றுமதியாளர்களை நீங்கள் பரிதவிக்க விடுவது எந்த விதத்தில் நியாயம்?" என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

அமெரிக்க அரசின் 50 சதவீத வரிவிதிப்பால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள திருப்பூர் உள்ளிட்ட தொழில் நகரங்களை கண்டுகொள்ளாமல் விட்டதாக மத்திய பாஜக அரசைக் கண்டித்து திமுக கூட்டணி சார்பில் திருப்பூரில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் பங்கேற்றன. வைகோ, திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள், அமெரிக்காவின் வரிவிதிப்பு ஏற்படுத்தும் பாதிப்பு குறித்தும், மத்திய அரசைக் கண்டித்தும் உரையாற்றினர்.

mk stalin narendra modi america

இதையடுத்து, 'மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் கண்டன ஆர்ப்பாட்டம் மாபெரும் வெற்றி!' என்று குறிப்பிட்டு பிரதமர் மோடி, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரை குறிப்பிட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "பிரதமர் மோடி அவர்களே... தாங்கள் ஆதரித்த ட்ரம்ப் விதித்துள்ள அமெரிக்க வரிவிதிப்பு காரணமாக, தமிழக இளைஞர்களுக்கும், இந்தியாவின் பல மாநிலத் தொழிலாளர்களுக்கும் வாழ்வளிக்கும் டாலர் சிட்டி திருப்பூர் தவிக்கிறது.

குஜராத்தில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு குறைந்த விலையில் ரஷ்ய கச்சா எண்ணெய் கிடைப்பதற்காக, பல ஆயிரம் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தும் எங்கள் ஏற்றுமதியாளர்களை நீங்கள் பரிதவிக்க விடுவது எந்த விதத்தில் நியாயம்?

நான் ஏற்கெனவே, கடிதத்தில் கூறிய நிவாரணங்களை உடனடியாக அறிவித்து, ஆவண செய்யுங்கள். அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தி, தீர்வு கண்டு, விஸ்வகுரு எனும் தங்கள் பட்டப் பெயருக்கு நியாயம் செய்யுங்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கெடுத்து உணர்வுகளைப் பதிவுசெய்த அனைத்துக் கட்சி தலைவர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் பொது மக்களுக்கும் நன்றி!" என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, திருப்பூரில் நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய மதிமுக பொதுச் செயலாளர் வைக, "இந்தியா ஏற்றுமதிப் பொருட்களுக்கு அமெரிக்க விதித்துள்ள 50 சதவீத வரிவிதிப்பு நாட்டின் பொருளாதாரத்தை நொறுக்கும் செயல். உள்நாட்டு நிறுவனங்களுக்கு ஆர்டர் கிடைக்காத நிலையில், ஏராளமான தொழிலாளர்கள் வேலை இழப்பார்கள்.

திருப்பூர், கோவை, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பின்னலாடைத் தொழிலும், வேளாண்மை, கடல் சார்ந்த உணவுப் பொருட்கள் ஏற்றுமதியும் பாதிக்கப்பட்டுள்ளன. ஏற்றுமதி கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. தமிழக முதல்வர் ஸ்டாலின், மத்திய அரசுக்கு அனுப்பிவைத்த தொழில் துறையின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்" என்றார்.

திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா எம்.பி. பேசும்போது, "மன்மோகன் சிங் ஆட்சியில் கச்சா எண்ணெய் 108 டாலர் என்ற விலையிலும், பெட்ரோல் விலை குறைவாக இருந்தது. ஆனால், தற்போது கச்சா எண்ணெய் விலை குறைவாக உள்ளபோதும் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. மோடி, அமித் ஷா ஆகிய 2 பேர் இந்தியாவை விற்கிறார்கள். அம்பானி, அதானி என்ற 2 பேர் அதை வாங்குகிறார்கள். மோடி தேசபக்தி உள்ளவராக இருந்தால், வரிக் கொள்கையை மாற்றியமைக்க வேண்டும். அதேபோல, சிறப்பு சலுகைகள் அடங்கிய திட்டத்தை கொண்டுவர வேண்டும். இல்லாவிட்டால் மோடியை வரலாறு மன்னிக்காது" என்றார்.

விசிக தலைவர் திருமாவளவன் பேசும்போது, "அதானி மற்றும் அம்பானிக்காகவே பொருளாதார கொள்கைகளை தீர்மானிக்கிறார் பிரதமர் மோடி. உலக நாடுகளுக்கு மோடி பயணம் செய்வதே, இவா்கள் இருவருக்காகவும்தான்" எனப் பேசினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+