ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.. தேர்தல் தொடர்பாக முக்கிய ஆலோசனை
சென்னை: திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலிக் காட்சி வாயிலாக நாளை காலை 10 மணியளவில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாகத் தேர்தல் பணியாற்றி வருகின்றன. இந்நிலையில், ஆளுங்கட்சியான திமுக, மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை நாளை நடத்த உள்ளது. இந்தக் கூட்டத்தில் மாநகர, ஒன்றிய, நகர, பகுதி செயலாளர்களும் பங்கேற்கின்றனர்.

திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சட்டசபை தேர்தலையொட்டி 'என் வாக்குச் சாவடி - வெற்றி வாக்குச் சாவடி' என்ற தலைப்பில் காணொலி வாயிலாக திமுக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை (டிசம்பர் 8) நடைபெற உள்ளது.
அந்தந்த மாவட்டத்துக்கு உட்பட்ட மாநகர, ஒன்றிய, நகர, பகுதி செயலாளர்கள், சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்கள், தொகுதி பார்வையாளர்கள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோரை மாவட்டச் செயலாளர்கள் ஒருங்கிணைத்து, ஓரிடத்தில் அமரச் செய்து, காணொலி வாயிலாக பங்கேற்கச் செய்ய வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
3 மாதத்தில் ஆட்சி கவிழும் என்று ஸ்டாலின் எப்போ சொன்னார்? திரித்து பரப்புவதா? தங்கம் தென்னரசு டென்ஷன் -
வைத்திலிங்கம் நிம்மதி.. ரூ.28 கோடி முறைகேடு வழக்கு ஓவர் ஓவர்.. கோர்ட்டில் சொன்ன லஞ்ச ஒழிப்புத்துறை! -
வெட்கமாக இல்லையா விஜய் அரசே? ஆன்லைன் பத்திரப்பதிவு சேவை குறித்து திமுக விளக்கம் -
சென்னை பெருங்குடி ஹாஸ்டலில் குளித்த 29 வயது பெண்.. மறைந்திருந்த இளைஞருக்கு மறக்க முடியாத சம்பவம் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
திமுக தோல்வி.. "எல்லார் மீதும் தவறு இருந்தால் யார் மீது நடவடிக்கை எடுப்பது?" வைரமுத்து சொன்ன காரணம்! -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
திமுக ஆட்சியில் போடப்பட்ட டெண்டர் ரத்து? ரூ.2,100 கோடி ECR திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்ட விஜய் -
வரலாறு படைக்கும் Zoho.. டேட்டா சென்டர்களுக்கு உதவ புது சர்வர் உருவாக்கிய சென்னை நிறுவனம்! -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல! -
பாரதிராஜா முகத்தை பார்த்ததும் உடைந்து போன முன்னாள் முதல்வர் முக ஸ்டாலின்.. உருக்கமான பதிவு












Click it and Unblock the Notifications