"கிங் மேக்கர்".. ஸ்டாலின் கையில் எடுத்த பிரம்மாஸ்திரம்.. அப்போ கிங் யாரு? அவரா? என்ன நடக்குது!
சென்னை: ராகுல் காந்தியை பிரதமராக முன்மொழிய வேண்டும் என்று ஸ்டாலின் நினைக்கிறார். அதாவது கிங் மேக்கர் ஆக வேண்டும் என்று நினைக்கிறார். ஆனால் மோடிதான் வடக்கில் ஜெயிப்பார் என்று மூத்த அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தல் பிரச்சாரம் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. மொத்தம் ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறும் நிலையில் தமிழ்நாட்டில் முதல் கட்டத்திலேயே தேர்தல் நடக்கிறது. வாக்குப்பதிவு அனைத்தும் முடிந்து வரும் ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. ஏப்ரல் 19ம் தேதி தமிழ்நாட்டில் தேர்தல் நடக்கிறது.

இந்த தேர்தல் தொடர்பாக மூத்த அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி ஒன்இந்தியாவிற்கு பேட்டி அளித்துள்ளார். அதில், அதிமுக ஐடியாலஜி இல்லாத கட்சி. தமிழிசை பாஜக தலைவராக இருந்தால் அதிமுகவிற்கு சிக்கல் இல்லை. அண்ணாமலை இருப்பதால்தான் அதிமுக பாதிக்கிறது. சீமான் வலுவாக இருக்கிறார். பாஜக வாக்குகள் அதிமுகவிற்கு சென்றுள்ளன. எடப்பாடி பழனிசாமி இதை உணரவில்லை. அதிமுக வாக்கு நாம் தமிழருக்கும் செல்கிறது. பறையர்கள், வண்ணார் , குயவர்கள், போன்றவர்கள் நாம் தமிழருக்கு செல்கின்றனர். நாயுடு, பிற மொழியாளர்கள், பிராமணர்கள் அதிமுகவில் இருந்து பாஜகவிற்கு செல்கின்றனர். தமிழ் தேசியம், இந்துத்துவா இரண்டும் அதிமுகவை அடிக்கிறது.
இரண்டு பேரும் சேர்ந்து அதிமுகவை வீழ்த்தி வருகின்றனர். இவர்கள் வலுவான தலைவர்கள். அதனால் எடப்பாடி பழனிசாமி வலிமை இழந்து கொண்டு இருக்கிறார். எடப்பாடி பழனிசாமி தேவ கவுடா அளவிற்கு சுருங்கி போவார். ஆனால் அதற்கும் கீழ் போக மாட்டார். எடப்பாடி உடன் யாரும் கூட்டணிக்கு வர மாட்டார்கள். தெற்கு மண்டலத்தில் எடப்பாடி பழனிசாமி ரொம்ப மோசமாக தோற்க போகிறார்.
தென் மண்டலத்தில் அந்த கட்சி கடுமையான தோல்வியை சந்திக்க வாய்ப்புகள் உள்ளன. திமுக கூட்டணிக்கு வலிமை இருக்கிறது. சீமான் வாக்குகளை பிரிப்பார். இப்படி இருக்கும் நிலையில் அது எடப்பாடிக்கு சிக்கலாக மாறும். புதிய தமிழகம் கூட எதிர்காலத்தில் திமுக கூட்டணிக்கு செல்லலாம்.
இன்னொரு பக்கம் தமிழ்நாட்டில் ராகுல் காந்திக்கு பலம் இருக்கிறது. அது திமுகவிற்கு மட்டுமான வாக்குகள் இல்லை. அது காங்கிரசுக்கான வாக்குகள். இந்திரா காலத்தில் இருந்தே தமிழ்நாட்டில் காங்கிரசுக்கு பலம் இருக்கிறது. தமிழ்நாட்டில் காங்கிரசை தூக்கி ஏறிய பாஜகவிற்கு வாய்ப்பு இல்லை.
வன்னியர்கள், கிறிஸ்துவர்கள், இஸ்லாமியர்கள் போன்றவர்கள் ராகுல் காந்தி பிரதமர் ஆக வேண்டும் என்று நினைக்கின்றனர். நாடார்களில் சிலரும் கூட ராகுல் காந்திக்கு ஆதரவாக இருக்கின்றனர். சோனியா காந்திக்கும் ஆதரவாக சூழ்நிலை உள்ளது. வடஇந்தியாவில் ராகுல் காந்தி குடும்பம் வீழ்ந்துவிட்டது. அங்கே காங்கிரஸ் நிற்கவே முடியாது என்று மோடி செய்துவிட்டார்.

இங்கே சூழ்நிலை அப்படி இல்லை. தமிழ்நாட்டில் இப்போதும் இந்திரா காந்தி அலை இருக்கிறது. இப்போதும் காங்கிரசுக்கு ஆதரவான சூழ்நிலை இருக்கிறது. ராகுலை விடியல் தருக என்று ஸ்டாலின் அழைக்கிறார். முதலில் தன்னை நம்பியே கொண்டு செல்லலாம் என்று ஸ்டாலின் நினைத்தார். அதன்பின் ராகுலை ஆதரிக்க முடிவு செய்துவிட்டார்.
ராகுலை விட இந்துக்கள் இடையே மோடிக்கு வாய்ப்புதான் அதிகம் உள்ளது. இந்த முறையும் பாஜகதான் மீண்டும் ஜெயிக்கும். கர்நாடகாவில் மீண்டும் பாஜக வெல்லும். ஆந்திராவிலும் பாஜக வெல்லும். பாஜகவிற்கே வெற்றிக்கான வாய்ப்பு லோக்சபா தேர்தலில் உள்ளது. தமிழ்நாட்டில், கேரளாவில் மட்டுமே காங்கிரஸ் வெற்றி உறுதியாக உள்ளது.
ராகுல் காந்தியை பிரதமராக முன்மொழிய வேண்டும் என்று ஸ்டாலின் நினைக்கிறார். அதாவது கிங் மேக்கர் ஆக வேண்டும் என்று நினைக்கிறார். ஆனால் மோடிதான் வடக்கில் ஜெயிப்பார். ஸ்டாலின் கிங் ஆக விரும்பவில்லை. கிங் மேக்கராக நினைக்கிறார், என்று மூத்த அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.
-
அதிமுக கூட்டணியில் தாமரையின் '32'.. 2021 புள்ளி விவரம் என்ன.. பாஜகவினர் அறிய வேண்டியவை -
18 தொகுதிகளில் பாஜக வெல்வது கடினம்? திமுகவிடம் கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிச்சாமி! தாமரைக்கு ‘செக்’ -
Election Exclusive: சிரிச்சுக்கிட்டே சமாளித்த எடப்பாடி..டஃப் தொகுதிகளை தள்ளி விட்டுட்டாரே! கொங்கில் போட்ட மெகா ஸ்கெட்ச்! -
"தமிழகத்தில் பாஜக வளரவில்லை".. அதிமுக தான் எங்கள் பலம்.. மேடையிலேயே தோல்வியை ஒப்புக்கொண்ட அமித்ஷா! -
ஷாக்கில் சரவணன்! எடப்பாடிக்காக விழுந்து விழுந்து வேலை பார்ப்பாரே அவரா? பாஜக விஐபிகள் மெகா ஸ்கெட்ச் -
நயினாரை விடவே கூடாது.. சாத்தூரில் வீழ்த்த ஸ்டாலின் ‘ஸ்கெட்ச்’.. இறங்கும் திமுகவின் ‘பெரிய தலை’ -
அண்ணாமலை சட்டமன்றம் செல்ல வேண்டும்.. அதுவே என் விருப்பம்.. வானதி சீனிவாசன் சொன்ன வார்த்தை! -
கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் தொண்டர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.. பரபரப்பு -
"சிதமுக-விற்கு லக்".. அதிமுக கூட்டணியில் புதிய கட்சி.. ஒரு தொகுதியை ஒதுக்கிய எடப்பாடி பழனிச்சாமி! -
ஜோதிடர் சொன்ன வார்த்தை? நயினார் நாகேந்திரன் நெல்லை தொகுதியில் போட்டியிடாதது ஏன்? பரபரப்பு தகவல் -
அதிமுக வேட்பாளர்கள் யார்? 146 வேட்பாளர்களை எப்போது அறிவிப்பார் எடப்பாடி! உச்சகட்ட டென்ஷனில் ர.ர.கள்! -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி.. வெயிட்டான தொகுதிகளை வச்சுகிட்டாரே! எந்தெந்த தொகுதிகளில் போட்டி?












Click it and Unblock the Notifications