முதல்வர் கனவிலும் என்னைப்பற்றிய சிந்தனையால் தூக்கம் இழந்து தவிக்கும் ஸ்டாலின் - இபிஎஸ் கிண்டல்

234 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும் என்று ஸ்டாலின் கூறி வருகிறார். ஸ்டாலின் எத்தனை அவதாரம் எடுத்தாலும், நிச்சயமாக வெல்ல முடியாது என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

நீலகிரி: முதல்வராவது போல பகல் கனவு காணும் மு.க ஸ்டாலின் சதா என்னைப்பற்றியே சிந்திப்பதால் தூக்கம் இழந்து தவிக்கிறார் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். ஸ்டாலின் எத்தனை அவதாரம் எடுத்தாலும், நிச்சயமாக வெல்ல முடியாது என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபை தேர்தலில் இந்த முறை 5 முனை போட்டி நிலவுகிறது. அதிமுக, திமுக, மக்கள் நீதிமய்யம், நாம் தமிழர் கட்சி, அமமுக என பலமுனை போட்டி நிலவுவதால் பங்குனி மாதத்தில் சுட்டெரிக்கும் வெயிலையும் தாண்டி தமிழக தேர்தல் பிரசார களத்தில் அனல் பறக்கிறது. ஆளும் அதிமுக மூன்றாவது முறையாக ஆட்சியை தக்கவைக்க கடுமையான பிரசாரத்தை முன்னெடுத்துள்ளது.

பத்தாண்டு காலம் ஆட்சியில் இல்லாமல் எதிர்கட்சி வரிசையில் அமர்ந்துள்ள திமுக இந்த முறை ஆட்சியை கைப்பற்றி ஆளுங்கட்சியாக அரியணையில் அமர ஓராண்டு காலமாகவே பிரசாரம் செய்து வருகிறது. விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் தொடங்கி கிராமம் கிராமமாக சென்று வந்திருக்கிறார் ஸ்டாலின்.

ஸ்டாலின் பிரசாரம்

ஸ்டாலின் பிரசாரம்

திமுக 200 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்குடன் பிரசாரத்தை தொடங்கிய ஸ்டாலின் தனது பிறந்தநாளின் போதே ஸ்டாலின் எனும் நான் என்றுதான் பேட்டி கொடுக்க ஆரம்பித்தார். 234 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற்று அதிமுகவை படுதோல்வியடையச் செய்ய வேண்டும் என்று பேசி வாக்கு சேகரித்து வருகிறார் தலைவர் மு.க ஸ்டாலின்.

எடப்பாடி பழனிச்சாமி

எடப்பாடி பழனிச்சாமி

அதே நேரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது பிரசாரத்தில் ஸ்டாலினையும் திமுகவினரை போட்டு காய்ச்சி எடுத்து வருகிறார். முதல்வராக ஸ்டாலின் பகல் கனவு காண்கிறார், அந்த கனவு பலிக்காது என்று கூறி வருகிறார் எடப்பாடி பழனிச்சாமி.

எத்தனை அவதாரம்

எத்தனை அவதாரம்

ஸ்டாலின் 234 தொகுதிகளிலும் திமுக ஜெயிப்போம் என்று கூறி வருகிறார். எத்தனை அவதாரம் எடுத்தாலும் அது நடக்காது என்று கூறி வாக்கு சேகரித்து வருகிறார். முதல்வர் கனவில் உள்ள ஸ்டாலின் தினசரியும் தூக்கமிழந்து தவிப்பதாகவும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

சதா என்னைப்பற்றி சிந்தனை

சதா என்னைப்பற்றி சிந்தனை

நான் உங்களில் ஒருவன், எப்போது வேண்டுமானால் என்னை வந்து சந்திக்கலாம். ஸ்டலின் வீட்டின் கேட்டை கூட தொட முடியாது என்று கூறிய எடப்பாடி பழனிச்சாமி, சதா என்னைப்பற்றிய சிந்தனையிலேயே ஸ்டாலின் இருக்கிறார் எங்கு போனாலும் என்னைப்பற்றியே பேசுகிறார். இந்த சிந்தனையாலும் அவருடைய தூக்கம் பறிபோய்விட்டதாகவும் எடப்பாடி பழனிச்சாமி கிண்டலடித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+