Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பத்திரப்பதிவு அதிரடி.. ரூ.20 பத்திரம் வாங்க முடியாதா? முத்திரை தாள் கட்டணத்தை உயர்த்திய பதிவுத்துறை?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் வீடு, நிலம் வாங்கும்போது, வீடு கட்டுமான ஒப்பந்தம், குத்தகை பத்திரம், கிரயம், தானம் மற்றும் செட்டில்மென்ட் என பல்வேறு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியருக்கிறது. குறிப்பிட்ட சில இனங்களுக்கான முத்திரைத்தாள் கட்டணம் கடந்த 2001ம் ஆண்டுக்குப் பின் முதல்முறையாக உயர்த்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பத்திரப்பதிவு துறையை பொறுத்தவரை, வழிகாட்டி மதிப்புகள் விவசாய நிலங்களுக்கு ஏக்கரிலும், மனை நிலங்களுக்கு சதுரடியிலும் நிர்ணயம் செய்யப்படுகிறது.

registration department

இப்படி நிர்ணயம் செய்யப்பட்ட வழிகாட்டி மதிப்புகள் பெரும்பாலான இடங்களில் வெளிச்சந்தை மதிப்பை விட மிகவும் குறைவாக உள்ளன. அதனால்தான், கடந்த வருடம் ஏப்ரல் வரை 8.06.2017 அன்றிருந்த வழிகாட்டி மதிப்பிற்கு மாற்றியமைக்கப்பட்டது.,

பத்திரங்கள்: செட்டில்மென்ட் பத்திரங்களுக்கான பதிவுக் கட்டணம் ரூ.10 ஆயிரம், முத்திரைத் தீர்வை கட்டணம் ரூ. 40 ஆயிரம், பொது அதிகார ஆவணங்களுக்கான கட்டணம் ரூ.10 ஆயிரம் என உயர்த்தி தமிழக அரசு கடந்த வருடம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

அதேபோல, ஆவணங்களுக்கு அதிகபட்ச பதிவுக் கட்டணம் ரூ. 4 ஆயிரம் என்பது ரூ.10 ஆயிரமாகவும், அதிகபட்ச முத்திரை தீர்வை ரூ.25 ஆயிரம் என்பது ரூ.40 ஆயிரம் என்றும், தனி மனை பதிவுக்கான கட்டணம் ரூ.200 என்பது ரூ.1000 என்றும், குடும்ப உறுப்பினர்கள் அல்லாத பொது அதிகார ஆவணங்களுக்கு பதிவுக் கட்டணம் ரூ.10 ஆயிரம் என்பதை, சொத்தின் சந்தை மதிப்புக்கு ஒரு சதவிகிதம் என்றும் தமிழக அரசு கடந்த வருடம் மாற்றி அமைத்திருந்தது.

கருவூலம்: இந்நிலையில், லீஸ், ரத்து ஆவணம், பவர் பத்திரம் உள்ளிட்ட சிறிய அளவிலான பண மதிப்புடைய முத்திரைத்தாள் ஆவணங்களுக்கு, கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. .

எப்போதுமே வீடு, நிலம் வாங்கும்போது, வீடு கட்டுமான ஒப்பந்தம், குத்தகை பத்திரம், கிரயம், தானம் மற்றும் செட்டில்மென்ட் ஆகியவற்றை பதிவு செய்ய மக்கள் பணம் செலுத்தி முத்திரைத்தாள் வாங்க வேண்டும்... இப்படி முத்திரைத்தாள் கட்டணம் மூலமாக அரசு கருவூலத்துக்குத் தேவையான வரியும் கிடைக்கும்

அந்தவகையில், குறிப்பிட்ட சில இனங்களுக்கான முத்திரைத்தாள் கட்டணம் கடந்த 2001ம் ஆண்டுக்குப் பின் முதல்முறையாக உயர்த்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன.. அதன்படி, இதுவரை குறைந்தபட்ச கட்டணம் ரூ.20 என இருந்த நிலையில், அந்த கட்டணம் தற்போது ரூ.100, 200, 500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. உறுதிமொழி ஆவணத்திற்கு ரூ.20 என இருந்த முத்திரைத்தாள் கட்டணம் ரூ.200 வரை அதிகரித்துள்ளது.

முத்திரைத்தாள்: இனிமேல் 20 ரூபாய்க்கு பத்திரம் வாங்க முடியாது என்பதால், அந்த பத்திரம் இனி 200 ரூபாய் ஆக உயர்ந்துள்ளது.. இதேபோலவே பல்வேறு இனங்களுக்கு முத்திரைத்தாள் கட்டணங்கள் தற்போது உயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.. இந்த தகவல் மீடியாக்களில் வெளியானதையடுத்து, பத்திரப் பதிவு முத்திரைத் தாள் கட்டணத்தை குறைக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்த துவங்கியிருக்கின்றன..

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+