காலியான கோவை, நெல்லை மேயர் பதவிகள்.. தேர்தல் எப்போது? தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பு..!
சென்னை: காலியாக உள்ள நெல்லை மற்றும் கோவை மேயர் பதவிகளுக்கான தேர்தலை நடத்த தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்திருக்கிறது. மாமன்றத்தை கூட்டி மறைமுக தேர்தல் மூலமாக மாநகராட்சி நேயர்களை தேர்ந்தெடுக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.
கோவை மாநகராட்சியின் முதல் பெண் மேயரான கல்பனா ஆனந்த குமாரும், நெல்லை மேயராக இருந்த சரவணனும் கடந்த சில தினங்களுக்கு முன் ஒரே நாளில் தங்கள் மேயர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தனர்.

தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் தீவிர ஆதரவாளராக கருதப்படும் கோவை மாநகராட்சி மேயராக இருந்த கல்பனா ஆனந்தகுமார் பொறுப்பேற்றது தொடங்கி பதவியை விட்டு விலகும் வரை கவுன்சிலர்களுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் இருந்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து உடல் நலம் மற்றும் சொந்த காரணங்களுக்காக கோவை மாநகராட்சி மேயர் பதவியில் இருந்து விலகுவதாக அவர் கூறியிருந்தார். அதேபோல நெல்லை மேயராக இருந்த சரவணன் குடும்ப சூழல் காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்வதாக தெரிவித்து இருந்தார். குறிப்பாக சரவணன் மீது ஏற்கனவே நம்பிக்கை இல்லா தீர்மானம் தொடர்பாக கவுன்சிலர்கள் கடிதத்தை மாநகராட்சி ஆணையரிடம் வழங்கியது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து பல்வேறு பிரச்சனைகள் எழுந்து நிலையில் மாநகராட்சி கூட்டத்தை நடத்த முடியாமல் இருப்பதாக புகார்கள் எழுந்தது. இதனால் தங்கள் பகுதிகளில் பணிகள் முறையாக நடைபெறவில்லை என கவுன்சிலர்கள் குற்றம் சாட்டி வந்தனர். இந்த நிலையில் தான் கல்பனாவும், சரவணனும் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.
தொடர்ந்து மாநகராட்சி கூட்டம் நடத்தப்பட்டு அவர்களது ராஜினாமா ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து எப்போது மேயர் பதவிக்கான தேர்தல் நடத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இந்த நிலையில் காலியாக உள்ள நெல்லை மற்றும் கோவை மாநகராட்சி மேயர் தேர்தலை நடத்த தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பையும் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
அதில்," தற்போது காலியாக உள்ள திருநெல்வேலி மாநகராட்சி மேயர் மற்றும் கோயம்புத்தூர் மாநகராட்சி மேயர் பதவியிடங்களை நிரப்பிடும் பொருட்டு மறைமுக தேர்தல் நடத்துவதற்கான மாநகராட்சிகளின் கூட்டங்களை நடத்தி மேயர்களைத் தேர்ந்தெடுத்திட உரிய அறிவுரைகளை தொடர்புடைய மாவட்ட தேர்தல் அலுவலர்கள் / மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது.
மேலும், ஆணையத்திற்கு ஏறிகனவே அறிக்கைகள் மூலம் தெரிவிக்கப்பட்ட ஏனைய நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளிலுள்ள காலி பதவியிடங்களுக்கும் சேர்த்து மறைமுக தேர்தல்கள் நடத்துவதற்கான கூட்டங்களை நடத்தி அப்பதவியிடங்களை நிரப்பிட உரிய அறிவுரைகளை சம்மந்தப்பட்ட மாவட்ட தேர்தல் அலுவலர்கள் / மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது" என கூறப்பட்டுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications