ஸ்டாலின் பற்றி பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது.. அவருக்கு நன்றி..மாஃபா பாண்டியராஜன் பேட்டி
திமுக தலைவர் ஸ்டாலின் குறித்து நான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது, அவருக்கு நன்றி என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை: திமுக தலைவர் ஸ்டாலின் குறித்து நான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது, அவருக்கு நன்றி என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
பிரதமர் இந்திரா காந்தி ஆட்சி காலத்தில் மிசா சட்டத்தின் கீழ் திமுக தலைவர் ஸ்டாலினும் இதில் கைதானார். இந்த நிலையில் இது தொடர்பாக தமிழக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கருத்து தெரிவித்தார். மாஃபா பாண்டியராஜன் தனது பேச்சில், ஸ்டாலின் மிசாவில் கைதாகவில்லை.

மிசா இருந்த நேரத்தில் கைதானார். அவரை அடித்ததாக கூறுகிறார்கள். ஆனால் அவரை மிசாவிற்காக அடிக்கவில்லை. அவர் மோசமான வழக்கில் சிறைக்கு சென்று இருந்தார். அதனால் அடித்தார்கள்.
அவருக்கும் மிசாவிற்கும் தொடர்பு கிடையாது. அவர் மிசாவில் சென்றதாக மக்களை ஏமாற்றுகிறார். அவர் பாலியல் வழக்கில்தான் சிறை சென்றார். அதை மக்களுக்கு தெரியாமல் மறைகிறார், என்று மாஃபா பாண்டியராஜன் குறிப்பிட்டு இருந்தார்.
மாஃபா பாண்டியராஜன் அளித்த இந்த பேட்டி திமுகவினர் மத்தியில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து சென்னையில் மாஃபா பாண்டியராஜனுக்கு எதிராக திமுக கட்சியினர் போராட்டம் நடத்தி உள்ளனர். சென்னை மற்றும் திருவள்ளுவர் மாவட்ட திமுகவினர் சென்னையில் பல இடங்களில் போராட்டம் நடத்தினார்கள்.
அவரின் உருவ பொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின், மாஃபா பாண்டியராஜனுக்கு எதிராக போராட வேண்டாம் என்று கூறினார். அவர் மீது நாம் கவனம் செலுத்த கூடாது என்று ஸ்டாலின் கூறினார்.
இதற்கு மாஃபா பாண்டியராஜன் தற்போது நன்றி தெரிவித்துள்ளார். அதில், எனக்கு எதிரான போராட்டத்தை திமுகவினர் தவிர்க்க வேண்டும் எனக் கூறிய ஸ்டாலினுக்கு நன்றி. ஸ்டாலின் பற்றி நான் பேசியதில் சில தவறான புரிதல்கள் ஏற்பட்டிருக்கின்றன.
இது தொடர்பாக நான் முதல்வரிடம் பேசி இருக்கிறேன். முதல்வரிடம் என்னுடைய பேச்சு குறித்து குறிப்பிட்டேன், என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பேட்டி அளித்துள்ளார்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications