பெட்ரோல் விலை ஏறும்போது மட்டும் விமர்சிக்கிறோம்.. மாநிலங்களும் வரியை குறைக்கலாமே - தமிழிசை

Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்திய அரசுபோல் மாநில அரசும் பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைத்தால் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கேட்டுக்கொண்டார்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த சில நாட்களுக்கு முன்பாக முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.

அதில், நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை மீதான கலால் வரி குறைக்கப்படுவதாக அவர் அறிவித்து உள்ளார்.

கலால் வரி குறைப்பு

கலால் வரி குறைப்பு

பெட்ரோல் மீதான மத்திய கலால் வரி லிட்டருக்கு ரூ.8, டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.6 குறைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பெட்ரோல் விலை லிட்டருக்கு 9.50 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 7 ரூபாயும் குறையும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. அனைத்து மாநில அரசுகளும், குறிப்பாகக் கடந்த நவம்பர் 2021 வரி குறைக்கப்படாத மாநிலங்கள், இதேபோன்ற வரி குறைப்பை அமல்படுத்தி, சாமானிய மக்களின் சுமையைக் குறைக்க வலியுறுத்துவதாக நிர்மலா சீதாராமன் மாநில அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழிசை சவுந்திரராஜன்

தமிழிசை சவுந்திரராஜன்

இந்த நிலையில், சென்னை தாம்பரம் மெப்ஸ் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் தெலுங்கானா மாநில ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான டாக்டர் தமிழிசை செளந்தரராஜன், 2018 - 2019 ஆம் ஆண்டிற்கான ஏற்றுமதி சிறப்பு விருதுகளை SEZ நிறுவனங்களுக்கும் மற்றும் ஏற்றுமதி சார்ந்த நிறுவனங்களுக்கு வழங்கினார்.

 சென்னை விழா

சென்னை விழா


இந்த விழாவில் 7 துறைகளின் கீழ் 25 வகையான ஏற்றுமதி மற்றும் அபிவிருத்தி நிறுவனங்களுக்கு 2018-19 ஆண்டிற்கான 138 விருதுகள் சிறந்த ஏற்றுமதியாளர்களுக்கு வழங்கப்பட்டது. அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சவுந்தரராஜன், "பெட்ரோல் டீசல் விலையை மத்திய அரசு குறைத்தது போல் மாநில அரசும் குறைக்க முன்வர வேண்டும். புதுச்சேரியில் பெட்ரோல், டீசல் விலை குறைவாக உள்ளது.

 ஏறும்போது மட்டும் விமர்சிக்கிறோம்

ஏறும்போது மட்டும் விமர்சிக்கிறோம்

மத்திய அரசு அனைத்து மாநிலங்களும் வாட் வரியை குறைக்க வேண்டும் என கோரிக்கை வைத்த போதே ரூ.7 குறைக்கப்பட்டது. இன்று மத்திய அரசு குறைத்துள்ளததால் இன்னும் அதிகமாக புதுச்சேரியில் பெட்ரொல், டீசல் விலை அனைத்து மாநிலங்களை விட குறைவாக உள்ளது. மக்களுக்கான சுமையை குறைக்க வேண்டும். ஏறும் போது பல விமர்சனங்களை முன் வைக்கிறோம்.மத்திய அரசுபோல் மாநில அரசு வரியை குறைத்தால் மக்களுக்கு பயன்னுள்ளதாக இருக்கும்." என்று அவர் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+