Vairamuthu: மதங்களுக்கு எதிராக மதமாற்றம் மதம் கண்டவர் கார்ல் மார்க்ஸ்.. வைரமுத்து பதிவு
சென்னை: சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் கார்ல் மார்க்ஸ் சிலையை முதல்வர் மு.க ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த நிலையில் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து கவிஞர் வைரமுத்து ட்வீட் போட்டுள்ளார்.
சென்னை எழும்பூர் அருங்காட்சியக வளாகத்தில் ரூ.85.80 லட்சம் செலவில் நிறுவப்பட்ட கார்ல் மார்க்ஸ் சிலையை முதல்வர் ஸ்டாலின் கடந்த 6 ஆம் தேதி திறந்து வைத்தார். .

காரல் மார்க்ஸ் சிலை சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் திறந்து வைக்கப்பட்டதற்காக முதல்வருக்கு நன்றி தெரிவித்து வைரமுத்து பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் வைரமுத்து பதிவிட்டுள்ளதாவது:-
கார்ல் மார்க்ஸ்
மனிதகுலச் சிந்தனைமீது
மேலதிகத் தாக்கம் செலுத்திய
மெய்யாளன்
பூகம்பம் இல்லாமல்
பூமியை அசைத்தவன்
உழைப்பால் உலகை
ஒன்றுபடுத்த நினைத்து
நாடற்றவனாய்ச்
செத்துப்போனவன்
அவன் எலும்புகளை
வறுமையின் ரம்பப் பற்கள்
அறுத்த போதும்
"தத்துவத்தின் வறுமை"
எழுதியவன்
ஆடைகளை
அடமானம் வைத்து
உழைக்கும் வர்க்கத்தின்
மானம் காத்தவன்
கார்ல் மார்க்ஸ்
— வைரமுத்து (@Vairamuthu) February 7, 2026
மனிதகுலச் சிந்தனைமீது
மேலதிகத் தாக்கம் செலுத்திய
மெய்யாளன்
பூகம்பம் இல்லாமல்
பூமியை அசைத்தவன்
உழைப்பால் உலகை
ஒன்றுபடுத்த நினைத்து
நாடற்றவனாய்ச்
செத்துப்போனவன்
அவன் எலும்புகளை
வறுமையின் ரம்பப் பற்கள்
அறுத்த போதும்
“தத்துவத்தின் வறுமை”
எழுதியவன்
ஆடைகளை… pic.twitter.com/E67IHvuGVc
குழந்தையின் காலணிகளை
அஞ்சல் செலவுக்கு
அடமானம் வைத்தவன்
மதங்களுக்கெதிராய்
மதமற்ற மதம் கண்டவன்
அறிவுக் காதல்
அவன்மீதெனக்கு
31.05.1993
லண்டன் ஹைகேட்டில்
மார்க்ஸின்
கல்லறை கண்டடைந்தேன்;
முட்புதர் களைந்து
மலர் வளையம் வைத்தேன்
கல்லறையில் உள்ளது
மார்பளவுச் சிலைதான்;
கன்னிமாராவில் நிற்பது
முழு உருவச் சிலை
நன்றி
முதலமைச்சர் அவர்களே!" என்று வைரமுத்து பதிவிட்டுள்ளார்.
-
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications