இதுதான் சரியான திசை.. ஸ்டெர்லைட்டை எப்படி திறக்கிறார்கள் என்று பார்க்கிறேன்.. வைகோ நம்பிக்கை!
ஸ்டெர்லைட் வழக்கு சரியான திசையில் செல்கிறது, ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வாய்ப்பில்லை என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: ஸ்டெர்லைட் வழக்கு சரியான திசையில் செல்கிறது, ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வாய்ப்பில்லை என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
ஸ்டெர்லைட் ஆலை கடந்த மே 28-ம் தேதி தமிழக அரசால் மூடப்பட்டது. இதை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம், வழக்கு தொடுத்தது. தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் நடந்த இந்த வழக்கில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது.
கடந்த டிசம்பர் 15-ம் தேதி தேசிய பசுமை தீர்ப்பாயம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பிற்கு எதிராக தற்போது உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கு விசாரணையில் உள்ளது. இதில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும் வாதிட்டு வருகிறார்.

வைகோ 45 நிமிடம்
சென்ற முறை வைகோ செய்த வாதம்தான் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க விடாமல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. சென்ற முறை வைகோ ஸ்டெர்லைட் ஆலையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து 45 நிமிடங்கள் பேச அவகாசம் கேட்டார். இந்த நிலையில் இன்றைய விசாரணையில் அவர் 45 நிமிடங்கள் பேசினார்.

முன்பு
அதில் வைகோ, திருப்பூர் சாயப்பட்டறை வழக்கு. நொய்யல் ஆறு வழக்கு, வேலூர் தோல் தொழிற்சாலை வழக்குகளை நான் எடுத்துக்காட்டாக கூறினேன். நீர்நிலைகள் மாசாவதை அரசு கருத்தில் கொள்ளவில்லை. மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் இதுபோன்ற எதையும் கருத்தில் கொள்ளவில்லை.

கமிட்டி அதிகாரம்
கமிட்டி அமைக்க தேசிய பசுமை தீர்ப்பாயத்திற்கு அனுமதி கிடையாது. அதற்கான அனுமதியை தேசிய பசுமை தீர்ப்பாயத்திற்கு அளிக்க முடியாது. அதனால் ஆலை குறித்து விசாரணை ஆணையம் வெளியிட்ட அறிக்கையை ஏற்க கூடாது. இது ஒருதலைப்பட்சமான அறிக்கை.

ஸ்டெர்லைட் காரணம்
இத்தனை ஆண்டுகளாக ஸ்டெர்லைட் இயங்குவதற்கு தமிழக அரசுதான் காரணம். 30 விதிகளில் 29 விதிகளை ஸ்டெர்லைட் பூர்த்தி செய்துவிட்டதாக தமிழக அரசு கூறியுள்ளது. ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான பழைய வழக்குகளையும் சேர்த்து விசாரிக்க நீதிபதி சம்மதம் தெரிவித்தார்

அரசு மோசம்
என்னுடைய வாதங்களை நீதிபதிகள் ஏற்றுக்கொண்டது போல தெரிகிறது. இந்த வழக்கு நாளையோடு முடியுமா என்று தெரியவில்லை. 2013ல் அரசு ஸ்டெர்லைட்டை எதிர்த்து தமிழக அரசு வழக்கு போட்டுள்ளது. அது சுப்ரீம் கோர்ட்டில் 5 வருடமாக நிலுவையில் உள்ளது. ஆனால் இதை அரசு சுப்ரீம் கோர்ட்டில் தெரிவிக்கவில்லை.

அதிர்ச்சி
நான் சொன்னபின் நீதிபதிகள் இதை கேட்டு அதிர்ச்சி அடைந்தனர். தற்போது அந்த வழக்கையும் சேர்த்து விசாரிக்க நீதிமன்றம் முடிவு செய்துள்ளது. விசாரணை நல்ல நிலையில் செல்கிறது. ஸ்டெர்லைட் வழக்கு தொடர்பான விசாரணை நல்ல முறையில் சென்று கொண்டிருக்கிறது. ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்படும் என்ற நம்பிக்கை உள்ளது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி












Click it and Unblock the Notifications