அப்பவே சொன்னேன்.. இதுதான் நடக்கும்னு.. ஸ்டெர்லைட் விவகாரம் குறித்து ராமதாஸ்!
Recommended Video

சென்னை : ஸ்டெர்லைட் விவகாரத்தில் என்ன நடக்கும் என்று நினைத்தோமோ, அது தான் நடந்திருக்கிறது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்து உள்ளார்.
பல்வேறு தரப்பினர் போராட்டம் நடத்தியதை அடுத்து, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடி தமிழக அரசு சீல் வைத்தது. இதை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த மேல்முறையீட்டை விசாரித்த தேசிய பசுமைத் தீர்ப்பாயம், ஆலையின் சாதக, பாதகங்கள் குறித்து ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான மூவர் குழுவை நியமித்தது.

இந்நிலையில் இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, ஸ்டெர்லைட் ஆலையை மூடி, தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை நியாயப் படுத்த முடியாது என்று கூறிய தேசிய பசுமைத் தீர்ப்பாயம், ஆலையை மீண்டும் திறக்க அனுமதி வழங்கியது.
ஆலை மீண்டும் இயங்குவதற்கான உரிமத்தை தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் புதுப்பித்து வழங்க உத்தரவிட்டதுடன், துண்டிக்கப்பட்ட மின் சாரத்தையும் உடனடியாக வழங்கவும் ஆணையிட்டது.
இது குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்குழுவினரும் கடும் கண்டனங்களையும், விமர்சனங்களையும் முன் வைத்து வருகின்றனர்.
இந் நிலையில், ஸ்டெர்லைட் விவகாரத்தில் என்ன நடக்கும் என்று நினைத்தோமோ, அது தான் நடந்திருக்கிறது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ட்விட்டரில் கருத்து தெரிவித்து உள்ளார்.
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயம் ஆணை: செய்தி - என்ன நடக்கும் என்று நினைத்தோமோ, அது தான் நடந்திருக்கிறது. உலக நீதிமன்றத்துக்கு சென்றாலும் திறக்க முடியாது என்றவர்கள் இப்போது என்ன செய்யப்போகிறார்கள்? இனியாவது சட்டம் இயற்ற வேண்டும்!
— Dr S RAMADOSS (@drramadoss) December 15, 2018
அதில் அவர் மேலும் கூறியிருப்பதாவது :
என்ன நடக்கும் என்று நினைத்தோமோ, அது தான் நடந்திருக்கிறது. உலக நீதி மன்றத்துக்கு சென்றாலும் திறக்க முடியாது என்றவர்கள் இப்போது என்ன செய்யப்போகிறார்கள்? இனியாவது சட்டம் இயற்ற வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications