6 மாதத்தில் 500% லாபம்.. இந்தியாவில் இப்படியொரு நிறுவனமா.. AI மூலம் பலன் பெற்ற முக்கிய பங்கு 'இது'!
செயற்கை நுண்ணறிவு (AI) புரட்சி இப்போது உலகின் பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு மட்டுமல்லாமல், இந்திய பங்குச்சந்தையில் இருக்கும் வேறு சில துறைகளுக்கும் பெரிய வாய்ப்புகளை உருவாக்கி வருகிறது. அதில் முக்கியமானது ஆப்டிகல் ஃபைபர் தயாரிப்பு துறை.
இந்த துறையில் முன்னோடியாக இருக்கும் ஸ்டர்லைட் டெக்னாலஜிஸ் (Sterlite Technologies) நிறுவனம் முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. 2026ஆம் ஆண்டில் மட்டும் இந்த நிறுவனத்தின் பங்கு விலை 500 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. இது இந்திய பங்குச்சந்தையில் அரிதாகக் காணப்படும் நிகழ்வாகும்.

ஸ்டெர்லைட் டெக்னாலஜிஸ்.. 500% உயர்வு
ஸ்டர்லைட் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 2026ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சுமார் 4,000 கோடி ரூபாயாக இருந்தது. ஆனால் ஆறு மாதங்களில் இது 30,000 கோடி ரூபாயை எட்டியுள்ளது.
இந்த வளர்ச்சி, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் தடாலடி வளர்ச்சியால், உலகளவில் அதிவகே வேக இணைப்புக்கான உள்கட்டமைப்பின் தேவை திடீரென அதிகரித்தது, இதனால் இந்நிறுவனத்தின் வர்த்தகம் அதிகரித்தது மூலம் சந்தை மதிப்பில் ஏற்றம் கண்டது. ஆப்டிகல் ஃபைபர், அதிவேக டேட்டா டிரான்ஸ்பர் உள்கட்டமைப்பின் முக்கிய அடிப்படையாக மாறியுள்ளது.
ஸ்டெர்லைட் டெக்னாலஜிஸ் பங்கு விலை
ஸ்டெர்லைட் டெக்னாலஜிஸ் பங்குகள் இன்று 1.94 சதவீதம் உயர்ந்து 620.60 ரூபாயாக உள்ளது, 2026ஆம் ஆண்டில் இந்த 6 மாதம் மட்டும் சுமார் 505.46 சதவீத உயர்ந்து 102 ரூபாயில் இருந்து 620 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது. கடந்த ஒரு வருடத்தில் 524.47 சதவீதம் உயர்ந்துள்ளது.
வேதாந்தா குழுமத்தின் ஆதரவு
ஸ்டர்லைட் டெக்னாலஜிஸ் நிறுவனம் வேதாந்தா குழுமத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் ஒரு நிறுவனம். இந்த நிறுவனத்தின் பெரும் பகுதி பங்குகளை ட்வின் ஸ்டார் ஓவர்சீஸ் லிமிடெட் (TSOL) வைத்துள்ளது. இந்த நிறுவனம் முழுமையாக வோல்கன் இன்வெஸ்ட்மென்ட்ஸ் லிமிடெட்-இன் கட்டுப்பாட்டில் உள்ளது.
வோல்கன் இன்வெஸ்ட்மென்ட்ஸ் லிமிடெட், அனில் அகர்வால் டிஸ்க்ரிஷனரி டிரஸ்ட்டின் முழு கட்டுப்பாட்டில் இயங்குகிறது. எனவே, ஸ்டர்லைட் டெக்னாலஜிஸ் நிறுவனம் வேதாந்தா குழுமத்தின் தொலைத்தொடர்பு பிரிவாக செயல்பட்டு வருகிறது.
ஸ்டெர்லைட் டெக்னாலஜிஸ் என்ன செய்கிறது?
ஸ்டெர்லைட் டெக்னாலஜிஸ் நிறுவனம் ஹைய் ஸ்பீட் டேட்டா நெட்வொர்க்குகளை வடிவமைத்து, உருவாக்கி, நிறுவும் பணிகளை மேற்கொள்கிறது. இதன் முக்கிய வணிகங்கள் மூன்று பிரிவுகளாக உள்ளன.
முதலாவது, ஆப்டிகல் நெட்வொர்க்கிங். இதில் உயர் தரமான ஆப்டிகல் ஃபைபர்கள், ஃபைபர் ஆப்டிக் கேபிள்கள் மற்றும் பெரிய அளவிலான நெட்வொர்க் இணைப்பு தீர்வுகள் தயாரிக்கப்படுகின்றன.
இரண்டாவது, உலகளாவிய சேவைகள். இதில் பெரிய அளவிலான நிலையான மற்றும் வயர்லெஸ் நெட்வொர்க்குகளை உருவாக்குதல், அமைப்பு ஒருங்கிணைப்பு மற்றும் ஃபைபர் நிறுவுதல் போன்ற பணிகள் அடங்கும்.
மூன்றாவது, டிஜிட்டல் மென்பொருள். இதில் தொலைத்தொடர்பு பில்லிங், செயல்பாடுகள் மற்றும் நெட்வொர்க் மேலாண்மைக்கான AI அடிப்படையிலான மென்பொருள் தீர்வுகள் வழங்கப்படுகின்றன.
இந்த நிறுவனம் தொலைத்தொடர்பு நிறுவனங்கள், கிளவுட் மற்றும் AI ஹைப்பர் ஸ்கேலர்கள் டேட்டா சென்டர்கள், அரசு திட்டங்கள் மற்றும் பெரிய நிறுவனங்கள் ஆகியவற்றை முக்கிய வர்த்தக இலக்காகக் கொண்டுள்ளது.
குறிப்பாக 5G நெட்வொர்க் விரிவாக்கம், ஃபைபர் டு தி ஹோம் (FTTH) திட்டங்கள், AI தரவு மையங்களுக்கான இணைப்பு மற்றும் கிராமப்புற பிராட்பேண்ட் திட்டங்கள் ஆகியவற்றில் இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
-
அடித்து தூக்கும் விஜய்.. நில ஒதுக்கீட்டில் ராக்கெட் வேகம்.. லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாகும் -
டிஆர்பி ராஜா எச்சரிக்கை: கிளாட் ஃபேபிள் 5 பிரச்சனை.. தமிழ்நாடு முன்கூட்டியே தயாரானது! -
வேதாந்தா டீமெர்ஜர்: 24 மணிநேரத்தில் மொத்தமாக மாறிய கதை..! 22.5% வருமானம் எங்கே போனது! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம்












Click it and Unblock the Notifications