தமிழக அரசுக்கு குவியும் புயல் வெள்ள நிவாரண நிதி! எந்தெந்த கார்ப்பரேட் நிறுவனங்கள் எவ்வளவு வழங்கியது?
சென்னை: புயல் மழை வெள்ளம் என கடந்த வாரம் முழுவதும் தத்தளித்த சென்னை மக்கள் இப்போது தான் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர்.
அவர்களுக்கு நிவாரண தொகையாக ரூ.6,000 அறிவித்துள்ள அரசு அதனை ஒரு வார காலத்திற்குள் வழங்குவதற்கான பணிகளில் கவனம் செலுத்தி வருகின்றன. மிக்ஜாம் புயல் இடைக்கால நிவாரண நிதியாக முதலமைச்சர் ஸ்டாலின் மத்திய அரசிடம் ரூ.5,060 கோடி கேட்ட நிலையில் 450 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது மத்திய அரசு. அதேபோல் சென்னையில் நகர்ப்புற வெள்ள மேலாண்மை திட்டத்தை நிறைவேற்ற 561.29 கோடியையும் ஒதுக்கியது.

இது மக்களுக்கு நிவாரணம் வழங்க போதாது என்பதால் கார்ப்பரேட் நிறுவனங்கள் பலவும் தாமாக முன்வந்து முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்து நிவாரண நிதியை கோடிகளில் வழங்கி வருகின்றனர். அதன் படி இன்றைய நாள் வரை முதலமைச்சரிடம் இதுவரை எந்தெந்த கார்ப்பரேட் நிறுவனங்கள் சார்பில் யார் யார் எவ்வளவு நிவாரண நிதி கொடுத்தார்கள் என்ற விவரத்தை பார்க்கலாம்.
*போத்தீஸ் நிறுவனம் -ரூ.1 கோடி
* அசோக் லேலாண்ட் குழுமம் -ரூ.3 கோடி
*லீப் கிரீன் எனர்ஜி பிரைவே லிமிடெட் - ரூ.1 கோடி
*சன் மார் குழும நிறுவனம் -ரூ.1 கோடி
*சக்தி மசாலா நிறுவனம் -ரூ.1 கோடி
*லயன் டேட்ஸ் நிறுவனம் -ரூ. 50 லட்சம்
*சன் தொலைக்காட்சி குழுமம் - ரூ.5 கோடி
*வி.ஐ.டி. பல்கலைக்கழகம் -ரூ.1.25 கோடி
*திராவிடர் கழகம் -ரூ.10 லட்சம்
*மதிமுக -ரூ.10 லட்சத்து 20 ஆயிரம்
*விசிக -ரூ.10 லட்சம்
*தமிழ்நாடு கடல்சார் வாரியம் -ரூ.2 கோடி
*புதுச்சேரி திமுக எம்.எல்.ஏ.க்கள் -ரூ.11 லட்சம்
முதலமைசரிடம் வழங்கப்பட்டதை தவிர்த்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடமும் நிவாரண நிதிக்கான காசோலையை நடிகர் சிவகார்த்தியேன் உட்பட பலரும் வழங்கியுள்ளனர். இன்னும் பல கார்ப்பரேட் நிறுவனங்கள் நிவாரண நிதி வழங்குவதற்காக முதலமைச்சரிடம் நேரம் கேட்டு வருகின்றன.












Click it and Unblock the Notifications