இருக்கு.. சம்பவம் இருக்கு! தமிழ்நாட்டை நெருங்கும் புயல் சின்னம்.. வானிலை மையம் அலர்ட்!
சென்னை: வடதமிழக கடற்பகுதியை புயல் சின்னம் இன்று (டிசம்பர் 24) நெருங்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தை நோக்கி திசை திரும்பிய புயல் சின்னம் இன்று, மேற்கு-தென்மேற்கே நகர்ந்து வடதமிழகம், தென் ஆந்திரத்தை நெருங்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
தமிழகத்தில் வட கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை முடிவடைய இன்னும் ஒரு வார காலம் உள்ள நிலையில், வங்கக் கடலில் நேற்று முன்தினம் வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது வலுவிழந்த நிலையில் ஆழ்ந்த காற்றழுத்த பகுதியாக மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டுள்ளது.

இந்நிலையில், மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, மேற்கு- தென்மேற்கு திசையில் நகர்ந்து இன்று (டிசம்பர் 24) தென்மேற்கு வங்கக் கடல் பகுதியை ஒட்டிய வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளை நோக்கி நகரும். இந்த நிகழ்வின் காரணமாக நேற்று தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்தது.
அதைத்தொடர்ந்து இன்று வட தமிழக கடலோரத்தில் ஒருசில இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்கள் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். மேலும் நாளை வடதமிழகத்தில் அநேக இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் வரும் 26 ஆம் தேதி தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
27 ஆம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதைத் தொடர்ந்து வரும் 28, 29 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், சென்னையில் நேற்று வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
அதிகாலை வேளையில் ஒரு சில இடங்களில் லேசான பனி மூட்டம் காணப்பட்டது. மேலும், இன்று வட தமிழக கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 55 கி.மீ வேகத்தில் வீசும். நாளை (25 ஆம் தேதி) தமிழக கடலோரப் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 55 கி.மீ வேகத்தில் வீசும். அதனால் மேற்கண்ட பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், புதுச்சேரி பழைய துறைமுக வளாகத்தில் 3 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. அண்மையில் ஃபெஞ்சல் புயல் காரணமாக பெய்த கனமழை புதுச்சேரியை புரட்டிப் போட்ட நிலையில் தற்போது மீண்டும் புதுச்சேரியில் கனமழைக்கான வாய்ப்பு உள்ளதால் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
-
சென்னை பெருங்குடி ஹாஸ்டலில் குளித்த 29 வயது பெண்.. மறைந்திருந்த இளைஞருக்கு மறக்க முடியாத சம்பவம் -
சென்னையில் இரவு நேரங்களில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவது ஏன்? அதிகாரிகளுக்கு மட்டுமே தெரிந்த உண்மை -
கார் விற்பனையில் மாஸ் காட்டும் கொங்கு மண்டலம்.. கோவை, பொள்ளாச்சி, திருப்பூர்காரங்க வேற ரகம் பாஸ்..! -
சென்னை மக்கள் பொறுமை இழந்தனர்.. கட்டி முடிச்சு 4 மாசமாச்சு.. எப்ப தான் திறப்பீங்க! -
நடிகர் ரவி மோகனுக்கு பின்னடைவு! ஆர்த்திக்கு ஜீவனாம்சம் வழங்கும் விவகாரத்தில் உயர்நீதிமன்றம் அதிரடி! -
திமுக ஆட்சியில் போடப்பட்ட டெண்டர் ரத்து? ரூ.2,100 கோடி ECR திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்ட விஜய் -
சென்னையில் முதல்வர் விஜய் தொகுதியான பெரம்பூரில் அடிக்கடி மின் வெட்டு.. பொங்கி எழுந்த மக்கள் -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு












Click it and Unblock the Notifications