வரப்போகுது புயல்! தமிழ்நாட்டில் 7 துறைமுகங்களில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு: வானிலை எச்சரிக்கை
சென்னை: தமிழ்நாட்டில் சென்னை உள்பட 7 துறைமுகங்களில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது. புதுச்சேரி, காரைக்கால் துறைமுகங்களிலும் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதை அடுத்து புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, பாம்பன், தூத்துக்குடி ஆகிய 7 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மீனவர்கள் ஆழ்கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல, புதுச்சேரி, காரைக்கால் துறைமுகங்களிலும் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புயல் காலங்களில் அதன் தீவிரத்தைப் பொறுத்து 1 முதல் 11 வரை புயல் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றப்படுவது வழக்கம். பகல் நேரங்களில் மூங்கில் தட்டைகளால் ஆன கூண்டுகள் ஏற்றப்படும். இரவு நேரங்களில் வண்ண ஒளி விளக்குகளால் ஆன புயல் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றப்பட்டு மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்படும்.
ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டால், புயல் உருவாகக்கூடிய வானிலை சூழல் ஏற்பட்டுள்ளதாக பொருள். துறைமுகங்கள் பாதிக்கப்படாமல் பலமாக காற்று வீசும். எனவே, மீனவர்கள் ஆழ்கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுவார்கள். அதன்படி தற்போது ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
குடை எடுங்க.. ஜூன் 4ல் தென்மேற்கு பருவமழை கன்பார்ம்! தமிழகத்தின் 16 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
பொதுமக்களே உஷார்! இன்று 22 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை.. மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications