Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

‘கேப்டன் மில்லர்’ கதை திருட்டு! தனுஷுக்கு இது தெரியுமா? வேல ராமமூர்த்தி வேதனை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தனுஷின் 'கேப்டன் மில்லர்' திரைப் படத்தின் கதை தனது நாவலிலிருந்து திருடி எடுக்கப்பட்டுள்ளதாக எழுத்தாளரும் நடிகருமான வே ராமமூர்த்தி குற்றம்சாட்டி இருக்கிறார்.

பொங்கல் பண்டிகையை ஒட்டி வெளியான திரைப்படம் 'கேப்டன் மில்லர்'. மிகப் பிரம்மாண்டமாகத் தயாரான இந்தப் படத்தின் கதை, வேல ராமமூர்த்தியின் நாவலைத் திருடி எடுக்கப்பட்டுள்ளது என சமூக வலைத் தளத்தில் பலரும் கருத்திட்டு வருகின்றனர்.

Story plagiarism complaint against Dhanushs film Captain Miller

அது குறித்து நாவலாசிரியரும் நடிகருமான வேல ராமமூர்த்தியிடம் பேசினோம். அவர், இந்தப் படமும் தனது நாவலும் எந்தளவுக்கு ஒன்றிப் போகிறது என்பதைக் குறித்து விளக்கினார்.

'பட்டத்து யானை' என்ற நாவலைத் தழுவி எடுக்கப்பட்டுள்ளது என்று குற்றஞ்சாட்டுகிறார் வேல ராமமூர்த்தி, "நான் இன்னும் படம் பார்க்கவில்லை. ஆனால், என் வாசகர் பலர் இந்தப் பிரச்சினையை சமூக ஊடகங்களில் முன்வைத்து விவாதித்து வருகிறார்கள்.

எனது வாசகர்கள் என் நாவலில் உள்ள கதைக் கருவும் 'கேப்டன் மில்லர்' படத்தின் கதையும் ஒத்துப் போகிறது என்ற கருத்தை முன்வைத்து வாதிட்டு வருகிறார்கள். அப்படியே தழுவி எடுக்காமல் சின்ன சின்ன மாற்றங்களோடு அந்தப் படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. வழக்கமாக சினிமா உலகில் அதைத்தான் செய்வார்கள். பேரை மாற்றுவார்கள். ஊரை மாற்றுவார்கள். கதையின் காலகட்டத்தை மாற்றுவார்கள்.

Story plagiarism complaint against Dhanushs film Captain Miller

ஒரு இளைஞர் எனது நாவலையும் படத்தின் கதையையும் ஒப்பிட்டுப் பேசியிருக்கிறார். அதில் அவர் சொல்லி இருக்கும் விசயங்கள் அனைத்தையும் பார்த்தபோது 'கேப்டன் மில்லர்' திரைப்படம் எனது 'பட்டத்து யானை' கதையைத் தழுவித்தான் எடுக்கப்பட்டுள்ளது என்பதை உணர்ந்தேன்.

எனது 'பட்டத்து யானை' நாவலின் நாயகன் ரணசிங்கம் சிறு வயதிலேயே பிரிட்டிஷ் ராணுவத்திற்கு வேலைக்குப் போகிறான். ராணுவ உயர் அதிகாரிகள் பிரிட்டிஷ் ஆட்களாகவும் ராணுவ வீரர்கள் இந்தியர்களாகவும் அங்கே பணிபுரிந்து வருகிறார்கள்.

அப்படியான இடத்தில் பிரிட்டிஷ் அதிகாரிகள் அனைவரும் இந்திய வீரர்களை மிகக் கேவலமாக நடத்துகிறார்கள். அதைப் பலரும் ஏற்றுக் கொள்கிறார்கள். ஆனால், எனது நாயகனால் அதை ஏற்க முடியவில்லை.

Story plagiarism complaint against Dhanushs film Captain Miller

அந்தக் கொடுமையைத் தாங்க முடியாமல், ரண சிங்கம் பிரிட்டிஷ் அதிகாரியைத் தாக்குகிறான். அதன் விளைவாக, சிறையிலடைக்கப்படுகிறார். பின்னர் ராணுவத்தைவிட்டே அவனை வெளியேற்றுகிறார்கள். வெளியே வந்த அவன், வடநாட்டில் இயங்கி வரும் பெரிய பெரிய புரட்சிக் குழுக்களுடன் சேர்ந்து போராடுகிறான். அதன்பின்னர் தமிழ்நாட்டின் தெற்குப் பகுதிக்கு வருகிறான். இராமநாத மாவட்டத்தில் ஒரு படையைத் திரட்டுகிறான்.

அதன்பின்னர் பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தை எதிர்க்கிறான். இதுதான் என் நாவலின் மையக் கதை.

இதேதான் நடிகர் தனுஷுன் கதாபாத்திரம், 'கேப்டன் மில்லர்' படத்தின் வடிவமைக்கப்பட்டுள்ளது. நான் எனது நாயகனைச் சிப்பாய் ஆக வைத்தேன். இவர்கள் படத்தில் கேப்டன் ஆக மாற்றி இருக்கிறார்கள்.

Story plagiarism complaint against Dhanushs film Captain Miller

இவை மட்டுமல்ல; என் நாவலில் வருகின்ற வெள்ளையர்களின் கைக்கூலியாக இருக்கின்ற ஒரு கதாபாத்திரம், சதிகாரனாக வரும் உடையப்பன் போன்ற கதாபாத்திரங்களில் ஜெயப்பிரகாஷ் மற்றும் காளிவெங்கட் ஆகியோர் நடித்திருப்பதாக தெரியவந்துள்ளது.

படத்தின் கதைக்களமும் அப்படியே பொருந்திப் போகிறது என்கிறார்கள். என் நாவலில் நாயகனின் நண்பர்களை கடத்திக் கொண்டு போய் வெள்ளையர்கள் கொடுமைப்படுத்துவதாக வருகிறது. அவர்களை நாயகன் மீட்பதாக வருகிறது. அதைப்போல் நடிகர் தனுஷ் கதாபாத்திரமும் காட்சியும் அமைக்கப்பட்டுள்ளது என்கிறார்கள்.

இந்த போராட்ட வீரர் 3 லாரிகளை தகர்த்து போலீஸ்காரர்களை கொல்வார்கள். இதை மாதிரியான சீன் படத்திலும் உள்ளது. வெள்ளை ராணுவத்தால் எனது நாயகன் ரண சிங்கத்திடம் போரிட்டு அவனைக் கொல்ல முடியாது. ஆகவே, சதி செய்து அவனைக் கொல்கிறார்கள்.

Story plagiarism complaint against Dhanushs film Captain Miller

அவனது தங்கையையும் அவனது மகனையும் நாடு கடத்துகிறான் வெள்ளைக்காரன். இந்த இருவரையும் தூத்துக்குடி கடல்வழியே கப்பலில் ஏற்றுவார்கள். அப்போது கடல் உள்ளே பயணத்தில் உள்ள அவள் கரையில் நிற்கும் வெள்ளை அதிகாரிகளைப் பார்த்து, 'டேய், திரும்ப வந்து என் சிங்கத்தை இறக்குறேண்டா' என்று சபதமிட்டு விட்டுச் செல்வாள்.

அந்த நாவல் அப்படித்தான் முடியும். இந்தப் படத்திலும் நாடுகடத்தும் காட்சியும் சவால் காட்சியும் வருகிறது என்று சொல்கிறார்கள் எனது வாசகர்கள்.

இதை எல்லாம் கேட்கும்போது எனது நாவலைத் திருடி எடுத்திருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியவருகிறது. நான் சினிமாவில்தான் இருக்கிறேன். ஊரில் வெறும் எழுத்தாளனாக இருந்தவன், இன்று கடந்த 10 ஆண்டுகளாக சினிமாவில்தான் இருக்கிறேன். என்னிடம் அவர்கள் கேட்டு இருக்கலாம். அப்படி அவர்கள் கேட்கவில்லை. அந்த நாணயம் தமிழ் சினிமாவில் மிகக் குறைவு.

Story plagiarism complaint against Dhanushs film Captain Miller

இந்தப் 'பட்டத்து யானை' நாவல் மட்டுமல்ல; கடந்த 2001 ஆம் ஆண்டிலிருந்தே என் படைப்புகளை இப்படித் திருடி படம் எடுத்து வருகிறார்கள். என்னுடைய பல சிறுகதைகள் களவாடப்பட்டுள்ளது. என் நாவல்களின் பல காட்சிகள் களவாடப்பட்டுள்ளது.

இது மகா தவறு. எனக்கு நியாயம் கிடைக்கவேண்டும்.

நான் தென்னிந்தியத் திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் எனது 'பட்டத்து யானை' நாவலின் கதையை 2023 ஜனவரி 6 ஆம் தேதி பதிவு செய்து வைத்துள்ளேன். நானே படம் எடுப்பதற்காக இதைப் பதிவு செய்திருந்தேன். அந்தச் சங்கத்தில் இந்தக் கதை திருட்டு பற்றி நான் முறையிடப் போகிறேன். அவர்கள் முடிவு செய்வார்கள்" என்கிறார் வேல ராமமூர்த்தி

Story plagiarism complaint against Dhanushs film Captain Miller

தனுஷிடம் இது குறித்துப் பேசினீர்களா என்றால், "அவர் என் நண்பர்தான். ஒரு அப்பாவைப் போல் என்னை மதிக்கக் கூடியவர். அவருக்கு இந்தக் கதைத் திருட்டு சமாச்சாரம் எல்லாம் தெரிந்திருக்காது" என்கிறார்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+