ரேஷன் கடைகளுக்கு பறந்த பரபர உத்தரவு.. ஆஹா பொதுமக்கள் செம ஹேப்பி! இது முக்கியம் ஆச்சே.. என்ன மேட்டர்
சென்னை: ரேஷன் கடைகளில் நேரத்தை முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் நேரத்தை முறையாகக் கடைப்பிடிக்காத பணியாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூட்டுறவுத் துறை அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
தமிழ்நாட்டில் மிகவும் விரிவான ஒரு பொது விநியோக முறை இருக்கிறது. அரிசி, சர்க்கரை என பல்வேறு பொருட்கள் ரேஷன் கடைகள் மூலமாகவே வழங்கப்பட்டு வருகிறது.

அதேநேரம் ரேஷன் கடை ஊழியர்கள் உரிய நேரத்தைக் கடைப்பிடிப்பதில்லை என்றும் செயல்பட வேண்டிய நேரங்களிலும் ரேஷன் கடைகளைப் பூட்டி வைத்திருப்பதாகப் பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.. இதனால் ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்க முடியாமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாகிறார்கள்.
உத்தரவு: இதற்கிடையே ரேஷன் கடைகளின் நேரத்தை முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் கடைப்பிடிக்காத பணியாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூட்டுறவுத்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.. ரேஷன் கடைகளை உரிய நேரத்தில் திறக்க பணியாளர்களுக்கு ஏற்கனவே அரசு உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், இப்போது இந்த புதிய அறிவிப்பு வந்துள்ளது.
சில ரேஷன் கடைகள் உரிய நேரத்தில் திறப்பதில்லை எனப் புகார்கள் எழுந்துள்ள நிலையில், கூட்டுறவுத்துறை இந்த முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.. சென்னை மற்றும் புறநகரில் காலை 8:30 மணி முதல் பகல் 12:30 மணி வரையும்; பிற்பகல், 3:00 மணி முதல் இரவு 7:00 மணி வரையும் செயல்பட உத்தரவிடப்பட்டுள்ளது.
நேரம்: அதேபோல மற்ற மாவட்டங்களில் காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரையும் செயல்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்களுக்கு உரிய முறையில் பொருட்கள் வழங்க வேண்டும் என்றும் இதனைக் கடைப்பிடிக்காத பணியாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நேரம் மாறறம்: இதற்கிடையே தமிழகத்தில் ரேஷன் கடைகள் செயல்படும் நேரத்தை மாற்ற அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதாவது மதியம் ஒரு மணி நேரம் வரை கடைகள் மூட அனுமதி தரப்படும் நிலையில், அந்த நேரத்தில் தான முறைகேடுகள் நடப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் மதியம் ரேஷன் கடைகள் மூடப்படும் நேரத்தைக் குறைக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications