கறார் காட்டும் ஆளுநர்.. விஜய் வாகனத்திற்கு மட்டும்தான் அனுமதி! ஆதவ் அர்ஜுனாவுக்கு நோ என்ட்ரி!
சென்னை: ஆட்சி அமைக்க உரிமை கோரியிருந்த விஜய்க்கு இப்போது வரை ஆளுநர் அழைப்பு விடுக்கவில்லை. இந்நிலையில் மீண்டும் ஆளுநரை சந்தித்திக்க ஆளுநர் மாளிகைக்கு சென்றிருக்கிறார் விஜய். அவருடன் சென்ற ஆதவ் அர்ஜுனாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. எனவே விஜய் வாகனம் மட்டும் ஆளுநர் மாளிகைக்குள் அனுமதிக்கப்பட்டிருக்கிறது.
விஜய் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருந்தாலும், அவரால் ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை கிடைக்கவில்லை. எனவே, அவர் முதலமைச்சர் ஆவதில் பெரிய இழுபறி நீடிக்கிறது.

இந்நிலையில் நேற்று ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கரை சந்தித்து விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரியிருந்தார். இருப்பினும் ஆளுநர் தரப்பில் பதில் இல்லை. வழக்கமாக பெரிய கட்சியை ஆட்சி அமைக்க ஆளுநர் அனுமதிக்க வேண்டும். அவர்களுக்கு பெரும்பான்மை இருக்கிறதா? இல்லையா? என்பதை அக்கட்சி சட்டமன்றத்தில் நிரூபித்தால் போதுமானது.
எனவே மீண்டும் இன்று ஆளுநரை சந்திக்க விஜய் சென்றிருக்கிறார். அவருடன் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட தலைவர்கள் சென்றிருந்தனர். ஆனால் அவர்களின் வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. விஜய் வாகனத்திற்கு மட்டும் ஆளுநர் மாளிகைக்குள் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.
மறுபுறம் ஆளுநரின் நடவடிக்கை ஏற்புடையதல்ல என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் தெரிவித்திருக்கின்றன. விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்க ஆளுநர் அனுமதிக்க வேண்டும் என்று இந்த கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
பெரும்பான்மை விஷயத்தில் இன்னும் விஜய்க்கு இக்கட்சிகள் ஆதரவு தெரிவிக்கவில்லை. இப்படி இருக்கையில் ஆளுநர் விஷயத்தில் விஜய் பக்கம் இக்கட்சிகள் நின்றிருப்பது விவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது.
-
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
சி.வி.சண்முகத்திற்கு ஜாக்பாட்!தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி பதவி ரெடி! தவெக பேச்சுவார்த்தை? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
குறை பிரசவத்தில் தவெக வெற்றி.. ஆட்சி நீடிக்காது.. திமுக சிவசங்கர் கணிப்பு -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications