Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பூமிக்கு வந்த சுபான்ஷு சுக்லா.. அடுத்த 1 வாரம் எதிர்கொள்ளும் சவால்கள் என்னென்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா 18 நாட்களுக்கு பிறகு விண்வெளி மையத்தில் இருந்து இன்று மாலை பூமிக்கு திரும்பினார். பூமிக்கு திரும்பினாலும் அவர் நம்மை போல் சாதாரணமாக இருக்க முடியாது. அடுத்த ஒரு வாரத்துக்கு அவர் பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

அடுத்த இரண்டு வாரங்களுக்கு பல்வேறு மருத்துவ ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட உள்ளனர். இந்த மறுவாழ்வு திட்டம் விண்வெளி வீரர்களுக்கு ரொம்பவே முக்கியமானது. ஏனெனில், சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட விண்வெளி வீரர்களுக்கு பூமிக்கு திரும்பியதும் எடை கூடும். விண்வெளியில் புவியீர்ப்பு விசை குறைவாக இருக்கும் என்பதால் அங்கு எடை குறைவாக உணர்வார்கள்.

stronaut-shubhanshu-shukla-enters-week-long-rehabilitation-post-mission

பூமி திரும்பினார் சுபான்ஷு சுக்லா

சர்வதேச விண்வெளி நிலையத்தில் இரு வாரங்களாக தங்கியிருந்து ஆய்வு மேற்கோண்ட இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட 4 விண்வெளி வீரர்கள் நேற்று விண்வெளி மையத்தில் இருந்து பூமிக்கு புறப்பட்டனர். டிரகன் விண்கலம் மூலம் 4 விண்வெளி வீரர்களும் 22 மணி பயணம் செய்து பூமிக்கு வந்தடைந்தனர்.

டிராகன் விண்​கலம் இந்திய நேரப்படி 3 மணி அளவில் பூமியை வந்​தடைந்தது. அமெரிக்காவில் உள்ள கலி​போர்​னியா மாகாணத்தில் உள்ள பசிபிக் கடலில் விண்​கலம் பத்திரமாக தரையிறங்கியது. தரையிறங்கிய டிராகன் விண்கலத்தை கப்பலில் ஏற்றி அமெரிக்க கடற்படை வீரர்கள் கரைக்கு கொண்டு சென்றனர். பின்னர் விண்கலத்தில் இருந்து வீரர்களை பத்திரமாக வெளியே வந்தனர்.

வழிகாட்டு நெறிமுறைகள் என்ன

18 நாள்கள் விண்வெளி பயணத்தை நிறைவு செய்த விண்வெளி வீரர்கள் அடுத்த இரண்டு வாரங்களுக்கு பல்வேறு மருத்துவ ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட உள்ளனர். இந்த மறுவாழ்வு திட்டம் விண்வெளி வீரர்களுக்கு ரொம்பவே முக்கியமானது. ஏனெனில், சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட விண்வெளி வீரர்களுக்கு பூமிக்கு திரும்பியதும் எடை கூடும். விண்வெளியில் புவியீர்ப்பு விசை குறைவாக இருக்கும் என்பதால் அங்கு எடை குறைவாக உணர்வார்கள்.

அடுத்தக்கட்ட ஆய்வு

பூமிக்கு திரும்பியதும், புவியீர்ப்பு விசைக்கு உடல் பழகி வருவதால் எடை அதிகரிக்கும். இதற்கு பழக விண்வெளி வீரர்களுக்கு குறைந்தபட்சம் மூன்று வாரங்கள் வரை ஆகும். விண்வெளி வீரர்களுக்கு பூமிக்கு திரும்பியதும் பின்பற்ற வேண்டிய நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் உள்ளன. இதன்படி, அனைத்து திட்டமும் வகுக்கப்பட்டு இருப்பதாக இஸ்ரோ அதிகாரிகள் தரப்பிலும் சொல்லப்படுகிறது.

சுபான்ஷு சுக்லா விண்வெளி பயண திட்டத்திற்காக சுமார் 550 கோடி ரூபாயை இஸ்ரோ செல்வு செய்துள்ளது. இந்தியாவின் கனவு திட்டங்களில் ஒன்றான விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் ககன்யான் திட்டத்தை வரும் 2027 ஆம் ஆண்டு செயல்படுத்த தயாராகி வருகிறது. இந்த திட்டத்திற்கான அனுபவங்களை பெர உதவும் வகையிலும் சுபான்ஷு சுக்லாவின் விண்வெளி பயணமானது அமைந்துள்ளது.

சுபான்ஷு சுக்லா தாயார் பேச்சு

இந்த விண்வெளிப் பயணத்தில் சுபான்ஷு சுக்லா பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டிருந்தார். குறிப்பாகச் சில குறிப்பிட்ட பயிர்களை விண்வெளியில் வளர்க்கும் ஆய்விலும் அவர் ஈடுபட்டிருந்தார். பயிர் ஆய்வில் இந்திய விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (IIST) அடுத்தகட்ட ஆய்வை ஆரம்பிக்கவுள்ளது.

சுபான்ஷு சுக்லாவின் விண்வெளி பயணம் குறித்து கடந்த சில தினங்களுக்கு முன்பாக அவரது தயார் ஆஷா கூறியதாவது:- விண்வெளியில் இருந்து பூமியையும், பிரபஞ்சத்தையும் பார்ப்பது எவ்வளவு அழகானது? என சுபான்ஷு எங்களுக்கு தெரிவித்தார். விண்வெளி நிலையத்தின் புகைப்படங்களையும் எங்களுக்கு காட்டினார். அதையெல்லாம் பார்ப்பது மனதுக்கு இதமாக இருந்தது.

அதைவிட எங்கள் மகன் மகிழ்ச்சியாகவும் நன்றாகவும் இருப்பதைப் பார்ப்பது இன்னும் சிறப்பாக இருந்தது. சுபான்ஷு சுக்லாவிற்காக என்ன வேண்டுமானாலும் சமைப்பேன். வெளிநாட்டில் இருந்ததால் கடந்த ஐந்து அல்லது ஆறு வருடங்களாக சாப்பிடாத அனைத்தையும் இந்த முறை சாப்பிட விரும்புவதாக அவர் எங்களிடம் கூறினார். தனக்குப் பிடித்தமான வீட்டில் சமைத்த உணவுகளை எல்லாம் ருசிக்க விரும்புவதாக அவர் கூறினார்' என்று சிரித்துக்கொண்டே தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+