சென்னை, புறநகர்களின் பல பகுதிகளில் வெளுத்து வாங்கிய பேய் மழை.. பலத்த காற்று, இடி, மின்னலுடன்!
சென்னை: சென்னையின் பல பகுதிகளிலும் புறநகர்ப் பகுதிகளிலும் இன்று மாலை அதி பயங்கரமாக பலத்த காற்று வீசியதில் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. கருத்த வானம் பல பகுதிகளில் கன மழையைக் கொண்டு வந்தது.
நகரின் பெரும்பாலான பகுதிகளில் மிக பலத்த மழை கொட்டிக் கொண்டிருக்கிறது. புறநகர்களில் எதிரில் வருவோர் தெரியாத வகையில் மிக அடர்த்தியாக பேய் மழை கொட்டியது.
சென்னையில் கடந்த சில நாட்களாகவே சில நேரம் வெயில் அதிகமாகவும் அவ்வப்போது சின்னதாக மழையுமாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் இன்று காலை முதல் வானம் மப்பும் மந்தாரமுமாக இருந்தது. ஆனால் மழை இல்லை. அதேசமயம் மாலை 5 மணிக்கு மேல் புறநகர்கள் பலவற்றில் பயங்கர காற்று வீசத் தொடங்கியது. கிட்டத்தட்ட அரை மணி நேரமாக இந்த பலத்த காற்று நீடித்தது. இதனால் மக்கள் பீதியடைந்தனர்.
அதேபோல நகரின் பல பகுதிகளிலும் வானம் கருத்து இருட்டிக் கொண்டு வந்தது. பலத்த காற்றும் வீசியது. சேப்பாக்கம், திருவல்லிக்கேணி உள்பட பல பகுதிகளில் நல்ல மழை பெய்தது. மெரீனா கடற்கரைக்கு வந்தோர் திடீரென வானம் இருண்டு போனதாலும், கன மழை பெய்யத் தொடங்கியதாலும் ஓடும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

தென்சென்னையில்..
இதேபோல் அடையாறு, திருவான்மியூர், பாலவாக்கம் மற்றும் கிழக்கு கடற்கரை சாலை பகுதிகளிலும் பலத்த காற்றுடன் மழை கொட்டித் தீர்த்தது.
காற்றை விரட்டிய கன மழை
பல இடங்களில் பலத்த காற்று நின்று மிக பலத்த மழை பெய்து வருகிறது. காற்று இல்லாமல் போனதால் மழை கன மழையாக இருக்கிறது. விடாமல் பெய்து வரும் மழையால் நகரின் பல பகுதிகளில் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது.

வெப்பச்சலனம்
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வெப்பச்சலனம் காரணமாக இன்று ஒரு சில இடங்களில் இன்று மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. மேலும் சென்னையை பொறுத்தவரையில், மாலை நேரத்தில் ஒரு சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்திருந்தது. அதேபோல தற்போது கன மழை வந்துள்ளதால் மக்கள் குளிர்ச்சியடைந்துள்ளனர்.
மழை அளவு
கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு கோவை மாவட்டம் சின்னக்கல்லூரில் 6 செ.மீ., வால்பாறை தாலுகா அலுவலகம், வால்பாறை, காஞ்சீபுரம் மாவட்டம் தாம்பரம் ஆகிய இடங்களில் தலா 3 செ.மீ., திருவள்ளூர் மாவட்டம் சோழாவரம், நீலகிரி மாவட்டம் ஜி பஜார் ஆகிய இடங்களில் தலா 2 செ.மீ. மழைப்பொழிவு பதிவாகியுள்ளது.
-
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு!












Click it and Unblock the Notifications