Zoo வில் ஹைனாவை பார்த்ததும்.. சுப்பரமணி சுப்பரமணி என அழைத்த குழந்தைகள்.. டிரென்டாகும் வீடியோ
நடிகர் விஜய் நடித்த லியோ திரைப்படத்தில் முதலில் வரும் சீனே கழுதை புலிதான். அதாவது ஆங்கிலத்தில் Hyena என அழைப்பார்கள். இது காட்டில் வாழும் ஒரு மிருகம். இது ஒரு ஊன் உண்ணி.
இந்த கழுதை புலியின் குணாதிசயங்கள் குறித்து ஈரோடு வனச்சரகர் சதீஷ் கூறியிருப்பதாவது: உலகில் 4 வகையான கழுதை புலிகள் உள்ளன. அவை: 1. ஸ்பாட்டட் ஹைனாஸ் - உடல் முழுவதும் புள்ளி புள்ளியாக இருக்கும். 2. ஸ்ட்ரைப்டு ஹைனாஸ்- உடல் முழுவதும் வரிகள் இருக்கும் கழுதை புலிகள். 3. கிரே ஹைனாஸ்- உடலில் வரிகளோ புள்ளிகளோ இருக்காது, உடல் முழுவதும் சாம்பல் நிறத்தில் இருக்கும். 4. ஆர்டு வுல்ஃப் - இது பார்ப்பதற்கு ஓநாய் போல் இருக்கும்.

ஆனால் இது கழுதை புலி! இவை ஆப்பிரிக்க நாடுகள், மத்திய கிழக்கு நாடுகள், ஆசிய கண்டத்திலும் இருக்கின்றன. இந்த 4 வகை கழுதை புலிகளுமே இந்தியாவில் இருக்கின்றனவா என்றால் இல்லை. வரிகள் கொண்ட கழுதை புலிகள்தான் இந்தியாவில் இருக்கிறது. தமிழகத்திலும் கழுதை புலிகள் உள்ளன. இந்த கழுதை புலிகளின் முன்னங்கால்கள் நீளமாகவும் இதன் பின்னங்கால்கள் குட்டையாகவும் இருக்கும்.
இதன் தாடைகள் மிகவும் வலிமையாக இருக்கும். எலும்புகள், கொம்புகள், நகங்கள் போன்றவைகளை அரைத்து உண்ணக் கூடிய வலிமை இதன் தாடைகளுக்கு இருக்கிறது. இதன் உடல் முழுவதும் ரோமங்கள் உள்ளன. இது புலி, சிங்கம், சிறுத்தைகள் போன்ற விலங்குகள் வேட்டையாடி சாப்பிட்டுவிட்டு மிச்சம் வைத்த அழுகிய உடல்களை சாப்பிடும்.
இந்த கழுதை புலியின் ஜீரண மண்டலத்தில் அழுகிய உடல்களிலிருந்து உருவாகும் பாக்டீரியா, வைரஸ் போன்றவற்றை எதிர்கொள்ளும் சக்தி இருக்கிறது. இதனால்தான் அழுகிய உணவுகளை சாப்பிட்டாலும் அதன் உடலுக்கு எந்த உபாதைகளும் வருவதில்லை. மனிதர்களுக்கு பெயர் இருப்பதை வைத்து அடையாளம் கொள்வதை போல் இந்த கழுதை புலிகளுக்கு whooping sound இருக்கும்.

இது பதற்றத்தில் இருக்கும் போது மனிதன் சிரிப்பதை போன்று சப்தம் இருக்கும். இதை laughing hyenas என்றும் அழைப்பார்கள். லியோ படத்தில் இந்த கழுதை புலிதான் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதை விஜய் தனது வீட்டில் வைத்து வளர்ப்பதாக சொல்வார். அதற்கு என்ன பெயர் வைக்கலாம் என கேட்கும் போது விஜய்யின் மகளாக நடிக்கும் சிறுமி ஏதோ ஒரு பெயரை கூறுவார்.
ஆனால் விஜய் இதற்கு சுப்பரமணி என வைக்கலாம் என்பார். கடைசியில் அவருடைய குடும்பம் ஆபத்தில் இருக்கும் போது சுப்பரமணி என செம மாசாக அழைப்பார். அப்போது அந்த கழுதை புலி ஆக்ரோஷமாக ஓடி வந்து எதிரிகளை பந்தாடும். அது முதல் தற்போது குழந்தைகள் கூறும் இரு வார்த்தைகள் சாக்லேட் காபி, சுப்பரமணிதான்.
அந்த வகையில் ஏதோ ஒரு ஊரில் குழந்தைகளை அழைத்துக் கொண்டு வன உயிரியல் பூங்காவிற்கு அழைத்து சென்றுள்ளனர். அப்போது அங்கு ஒரு இடத்தில் கழுதை புலி இருந்தது. அதை பார்த்த குழந்தைகள் சுப்பரமணி என அழைத்து ஆரவாரம் செய்தனர்.












Click it and Unblock the Notifications