திமுக அடிச்ச "ஸ்கோர்'.. மாணவர்கள் வயிற்றில் லிட்டர் கணக்கில் பால்.. அதிமுக மிஸ் பண்ணிருச்சே!
கல்வி கடன் ரத்து என்ற திமுகவின் அறிவிப்புக்கு வரவேற்பு கூடி வருகிறது
சென்னை: கல்விக் கடன் ரத்து.. இதுதான் திமுக எடுத்துள்ள அதிரடி அஸ்திரம்.. இது சாத்தியமா, வாய்ப்பே இல்லை என்று பலரும் பலவிதமாக கூறி வந்தாலும் இதைச் செய்ய முடியும்.. அதற்குத் தேவை சற்று தில்லான மனசுதான்.
உண்மையில் அதிமுகதான் இதை செய்திருக்க வேண்டும்.. அதாவது இந்த வாக்குறுதியை அதிமுக தானே முன் வந்து கொடுத்திருக்க வேண்டும். ஆனால் மிஸ் செய்து விட்டது என்பதே உண்மை.
கல்விக் கடன் ரத்து என்ற வாக்குறுதியை மு.க.ஸ்டாலின் தனது மக்கள் கிராம சபைக் கூட்டத்தில்தான் அளித்தார்... அதன்படி, மாணவர்களின் கல்விக் கடனை திமுக ஆட்சி வந்ததும் முழுமையாக ரத்து செய்வோம் என்று தெரிவித்துள்ளார்.

வரவேற்பு
இது வரவேற்கக் கூடிய ஒரு அறிவிப்புதான். தமிழகத்தில் அரசுத் துறை வங்கிகள் கல்விக் கடன்களை வழங்கி வருகின்றன. இதை வைத்து படித்து பட்டதாரி ஆனோர் பலர் உள்ளனர்... உண்மையில் இந்த வங்கிக் கடன்கள்தான் பலரின் கல்விக் கனவுகளுக்கு வடிகாலாக உள்ளன... இதை நம்பித்தான் பலர் கல்லூரிகளில் காலடி எடுத்து வைக்கின்றனர்.

பட்டப்படிப்பு
இந்தக் கடனை வைத்து படித்துப் பட்டம் பெற்று பின்னர் படிப்படியாக கடனை அடைக்கின்றனர். ஆனால் லோன் வாங்குவதற்குள் தாவு தீர்ந்து விடும்... அந்த அளவுக்கு வங்கிகள் கெடுபிடி காட்டுவது என்னவோ உண்மைதான். காரணம், சிலர் செய்யும் தவறால் பல அப்பாவி மாணவர்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது... ஆனால் இந்த கடன் இருக்க போய்த்தான் பல ஆயிரக்கணக்கான மாணவர்களின் பட்டதாரிக் கனவு நிறைவேறுகிறது என்பது உண்மை.

லோன்கள்
இதனால்தான் எத்தனை சிரமப்பட்டாலும் இந்த லோனை வாங்கும் நிலைக்கு மாணவர்கள் தள்ளப்படுகிறார்கள். இதைத்தான் ரத்து செய்வதாக முக ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். இது எப்படி சாத்தியமாகும் என்ற கேள்வி எழுகிறது... இரண்டு வழிகள் உள்ளன.. அதில் ஒன்றைச் செய்து இந்தக் கடன்களை இல்லாமல் போக செய்ய முடியும்.

திமுக
1. தமிழக சட்டசபைத் தேர்தலில் திமுக மிகப்பெரிய வெற்றிபெற்று ஆட்சியமைக்கும் நிலை ஏற்படும்போது, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுடன் இணைந்து செயல்படவே மத்திய அரசு முன்வரும். இது இயல்பான விஷயம்தான். மக்கள் தீர்ப்பை மதித்தாக வேண்டிய கட்டாயம் யாருக்குமே உ ண்டு. திமுகவும் கூட மத்திய அரசுடன் நிச்சயம் மோதல் போக்குடன் இருக்காது.. இணைந்தே செல்ல முன்வரும். அப்படி ஒரு நிலை ஏற்படும்போது மத்திய அரசுடன் பேசி கடன்களை ரத்து செய்ய ஏதாவது முயற்சிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

கல்விக்கடன்
2. இது மாநில அரசுடன் முடிந்து போகும் வாய்ப்பு.. அதாவது தமிழக மாணவர்களின் கல்விக் கடனை மாநில அரசே செலுத்த முயற்சிக்கலாம். அதாவது திமுக அரசே மாணவர்கள் இதுவரை வாங்கிய கடன் தொகையை தானே கட்டி கடன் தொல்லையிலிருந்து மாணவர்களை விடுவிக்க முயற்சிக்கலாம். ஆனால் இதற்கு மாநில அரசின் நிதி நிலைமை இடம் தர வேண்டும். ஆனால் வாக்குறுதி கொடுத்து விட்டால் அதைச் செய்வது திமுகவின் வழக்கமாக உள்ளது. பலமுறை இதை அது நிரூபித்துள்ளது.

ஸ்கோர்
எனவே ஸ்டாலினும் இந்த வாக்குறுதியை நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை மாணவர்களிடம் இப்போதே வந்து விட்டது. இது மிகப் பெரிய ஸ்கோர்தான் திமுகவுக்கு... இது யார் கொடுத்த ஐடியா என்று தெரியவில்லை. பிகே.வா அல்லது திமுகவே சொந்தமாக யோசித்த முடிவா என்றும் தெரியவில்லை... ஆனால் இது சூப்பர் ஐடியா என்பதில் சந்தேகமே இல்லை.. நிச்சயம் மாணவர் சமுதாயத்தினரின் வாக்குகளை மட்டுமல்லாமல் அவர்களின் பெற்றோர்களையும் கூட்டாக கவரும் என்பதில் சந்தேகம் இல்லை.
-
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம் -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ!












Click it and Unblock the Notifications