மாணவிக்கு பாலியல் தொல்லை.. போராட்டத்தில் குதித்த மாணவர்கள்.. எஸ்.ஆர்.எம் பல்கலை.யில் பரபரப்பு!
எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதை எதிர்த்து மாணவர்கள் நேற்று இரவில் இருந்து போராடி வருகிறார்கள்.
Recommended Video

சென்னை: எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதை எதிர்த்து மாணவர்கள் நேற்று இரவில் இருந்து போராடி வருகிறார்கள்.
சென்னையில் காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கல்லூரியில் உள்ள பெண்கள் விடுதியின் லிப்டில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
லிப்டில் இருந்த பணியாளர் அந்த பெண்ணிடம் தன்னுடைய ஆடைகளை அவிழ்த்து தவறாக நடந்து கொள்ள முயன்று இருக்கிறார். இதனால் கத்தி கூச்சலிட்ட பின் லிப்டை நிறுத்தி வேகமாக வெளியே ஓடியுள்ளார்.

இல்லை
இந்த சம்பவம் நேற்று நடந்துள்ளது. ஆனால் கல்லூரி நிர்வாகம் இந்த புகார் மீது நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. மாணவி புகார் அளித்து 24 மணி நேரத்திற்கும் மேலாகிவிட்டது. ஆனாலும் இன்னும் கல்லூரி நிர்வாகம் அந்த பணியாளரை வேலையை விட்டு நீக்கவில்லை.

மாணவர்கள் போராட்டம்
இந்த நிலையில் கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்று மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். போலீஸ் நிலையத்திலும் புகார் அளித்தனர். அந்த பணியாளரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கூறி கல்லூரியில் போராட்டம் நடத்தினார்கள்.

தொடர்கிறது
நேற்று தொடங்கிய போராட்டம் இன்று உச்சம் அடைந்தது. நேற்று இரவு மாணவிகள் மட்டுமே போராடி வந்தனர். இந்த நிலையில் இன்று காலையில் இருந்து மாணவர்களும், மாணவிகளுடன் சேர்ந்து கல்லூரி நிர்வாகத்திற்கு எதிராக போராடி வருகிறார்கள்.

என்ன நடவடிக்கை
இந்த நிலையில் அந்த பணியாளர் மீது போலீஸ் நடவடிக்கை எடுத்து இருப்பதாக தகவல் வருகிறது. அவரை போலீஸ் விசாரித்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால் அவர் கைது செய்யப்பட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications