சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பள்ளிகளுக்கு சென்று தற்காலிக மதிப்பெண் பட்டியலை பெறும் பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்கள்...

Google Oneindia Tamil News

Recommended Video

    பள்ளிகளில் தற்காலிக மதிப்பெண் பட்டியலை பெறும் பிளஸ் 2 மாணவர்கள்...

    சென்னை: தமிழகம் மற்றும் புதுவையில் நேற்று பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதனையடுத்து தமிழகத்தில் இன்று முதல் வரும் 26-ம் தேதி வரை மாணவர்கள் தங்களது தற்காலிக மதிப்பெண் பட்டியலை பள்ளிகளில் பெற்று கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    8,42, 512 மாணவ-மாணவிகள் பிளஸ் 2 தேர்வு எழுதியதில், 7, 69,225 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவியர்கள் 93.64 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 88.57 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் தங்களது பள்ளிகளுக்கு சென்று தற்காலிக மதிப்பெண் பட்டியலை இன்று முதல் பெற்று வருகின்றனர்.

    Students who have written plus 2 exams will receive temporary mark sheets from today

    இந்நிலையில் தனி தேர்வர்களும், பள்ளி மாணவர்களும் தங்களது மதிப்பெண் பட்டியலை இணையத்தில் பதிவிறக்கம் செய்ய அரசுத் தேர்வுத்துறை வழிவகுத்துள்ளது. வரும் 24-ம் தேதி காலை, 9:00 மணி முதல், 26-ம் தேதி வரை www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில், மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    துக்க வீடுகளுக்கு சென்று ஆறுதல் கூறி நெகிழ வைக்கும் குரங்கு.. இணையத்தில் வைரலாகும் வீடியோ துக்க வீடுகளுக்கு சென்று ஆறுதல் கூறி நெகிழ வைக்கும் குரங்கு.. இணையத்தில் வைரலாகும் வீடியோ

    மேலும் மறுகூட்டல், மறுமதிப்பீடுக்காக விடைத்தாள் நகல் பெற, நாளை மறுநாள் முதல் 24-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் அரசு தேர்வு துறை அறிவித்துள்ளது.

    English summary
    In Tamil Nadu from today till 26th it is reported that plus 2 examination written students can get their temporary amrk sheets in schools
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X