Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரொம்ப நேரம் செல்போன் பாக்குறீங்களா.. உஷார் மக்களே! சர்க்கரை நோய் குறித்து மருத்துவர்கள் வார்னிங்

Subscribe to Oneindia Tamil

சென்னை: உலக அளவில் சர்க்கரை நோய் அதிகம் உள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று. நாடு முழுவதும் சுமார் 10.1 கோடி பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். கடந்த 4 ஆண்டுகளில் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 44% உயர்ந்து வருகிறது. இந்நிலையில் செல்போன், லேப்டாப் போன்றவற்றை அதிக நேரம் பயன்படுத்துபவர்களுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும் என்று ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.

சென்னை கிளினிக்கல்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் நடத்திய ஆய்வில், ஸ்மார்ட்போன், டிவி, கணினி போன்ற திரைகளில் அதிக நேரம் செலவிடுவது டைப் 2 நீரிழிவு நோயாளிகளின் இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டைக் கெடுக்கும் என கண்டறியப்பட்டுள்ளது. டாக்டர் வி. அஸ்வின் கருப்பன் தலைமையில் டாக்டர் ஆஃப்ரின் ஷபீர், தீபிகா கணேஷ், ஹரிஹரன் சுகுமாரன் ஆகியோர் நடத்திய இந்த ஆய்வில், வார இறுதி நாட்களில் நீண்ட திரை பயன்பாடு சர்க்கரை அளவை அதிகரித்து, ஆரோக்கியத்தைப் பாதிக்கிறது என்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

sugar mobile phone blood

அதிகரித்த சர்க்கரை அளவு

டைப் 2 நீரிழிவு நோயாளிகள் 217 பேரிடம் தினசரி ஸ்கிரீன் பார்க்கும் நேரம், உறங்கும் பழக்கம், HbA1c சர்க்கரை கட்டுப்பாடு அளவிடப்பட்டன. பின், ஸ்கிரீன் பயன்பாட்டைக் குறைத்தல், சுறுசுறுப்பு, தூக்க மேம்பாடு குறித்து பல்துறை குழுவால் ஆலோசனை வழங்கப்பட்டது. மூன்று மாதங்களுக்குப் பின், ஸ்கிரீன் டைம் குறைப்பின் சர்க்கரை அளவிலான தாக்கம் ஒப்பிடப்பட்டது. ஆய்வு முடிவுகளின்படி, வார இறுதி நாட்களில் ஸ்கிரீன் டைம் அதிகம் கொண்டிருந்தவர்களுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்திருந்தது. அதே நேரம், ஸ்கிரீன் டைம் குறைத்த பின்னர் ரத்தத்தில் சர்க்கரை அளவு 7.47% இலிருந்து 7.21% ஆகக் குறைந்தது.

சர்க்கரை அளவை குறைக்க முடியும்

வழக்கமாக மொபைல், டிவி, லேப்டாப் போன்றவற்றை பார்க்கும் நேரத்தை 30-45 நிமிடங்கள் குறைத்த பின்னர், பாதிக்கும் மேற்பட்டோருக்கு சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் வந்திருக்கிறது. நீண்ட நேரம் ஸ்கிரீனை பார்ப்பது, உடல் உழைப்பைக் குறைத்து, அதீத உணவு, தூக்கமின்மை, மன அழுத்தத்திற்கு வழிவகுக்கிறது. இவை நீரிழிவு கட்டுப்பாட்டைப் பாதிக்கின்றன.

தூங்குவதற்கு முன்பும், வார இறுதி நாட்களிலும் ஸ்கிரீன் டைமை குறைத்து, உணவுப் பழக்கம், தூக்கத்தின் தரத்தை மேம்படுத்துவதன் மூலம் இரத்த சர்க்கரை அளவை இயல்பாகவே குறைக்க உதவுகிறது என ஆய்வு தெளிவுபடுத்துகிறது.

ஆய்வின் முடிவு

ஆய்வின் முதன்மை ஆசிரியர் டாக்டர் அஸ்வின் கருப்பன் இது பற்றி கூறுகையில், "உங்கள் செல்போன், டிவி சர்க்கரை அளவை சைலன்ட்டாக பாதிக்கலாம். திரை நேரத்தைக் குறைத்து, உடல் செயல்பாடுகளை அதிகரிப்பதன் மூலம், நீரிழிவு கட்டுப்பாட்டில் முன்னேற்றத்தைக் காணலாம்" என்று கூறியுள்ளனர்.

காலை எழுந்ததும் முதல் ஒரு மணி நேரமும், இரவு தூங்குவதற்கு முந்தைய கடைசி ஒரு மணி நேரமும் கட்டாயமாக மொபைலை பார்க்காதீர்கள். '20-20-20' விதியைப் பின்பற்றி, ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும், 20 அடி தொலைவில் உள்ள ஒரு பொருளை 20 விநாடிகள் பாருங்கள். டைம் பார்க்க செல்போனை பயன்படுத்தாதீர்கள். சாதாரண கடிகாரங்களைப் பயன்படுத்துங்கள். சமூக ஊடகங்கள், ஷாப்பிங் செயலிகளிலிருந்து வரும் அத்தியாவசியமற்ற நோட்டிஃபிகேஷன்களை பிளாக் செய்யுங்கள்.

என்ன செய்ய வேண்டும்?

மொபைல் பார்க்க வேண்டும் என்று தோன்றினால் கொஞ்ச நேரம் எழுந்து நடக்கவும். உணவு மேசையிலும், படுக்கை அறையிலும் செல்போன் மற்றும் லேப்டாப்களை வைக்க வேண்டாம். இரவு தூங்குவதற்கு முன், வீடியோக்கள் பார்ப்பதற்குப் பதிலாக புத்தகம் படிக்கலாம் அல்லது இசையைக் கேட்கலாம். குடும்பத்தினர், நண்பர்களுடன் இணைந்து திரை இல்லாத இரவு உணவுகள், மாலை நடைப்பயணங்களைத் திட்டமிடலாம். இப்படி செய்வதன் மூலம் ஸ்கிரீன் டைமை குறைக்கலாம் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+