பேரறிவாளன் உள்பட 7 தமிழர் விடுதலை செய்ய பரிந்துரைக்க வேண்டும் : ஜனாதிபதிக்கு சு. வெங்டேசன் கடிதம்
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் உள்ள பேரறிவாளன் உள்பட 7 பேரையும் விடுதலை செய்ய பரிந்துரைக்க வேண்டும் என்று குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு மதுரை எம்.பி.சு. வெங்கடேசன் கடிதம் எ
சென்னை : ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள பேரறிவாளன் உள்பட 7 பேரையும் விடுதலை செய்ய பரிந்துரைக்க வேண்டும் என்று குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு மதுரை எம்.பி.சு. வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார். இந்த பிரச்சினையில் இனியும் தாமதிக்காமல் உடனடியாக எழுவரையும் விடுதலை செய்ய வேண்டும். 7 பேரும் மிக மிக அதிகமான தண்டனையை அனுபவித்து விட்டார்கள் என்றும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் எழுதிய கடிதத்தில், "முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலையில் குற்றம் சாட்டப்பட்டு 30 வருடங்களுக்கும் மேலாக சிறையில் தங்களது வாழ்க்கையை கழித்து வரும் எழுவரின் துயர் பற்றி எடுத்துரைக்கவும், அவர்களது விடுதலைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வைக்கவே இந்த கடிதத்தை எழுதுகிறேன்.

இந்திய சட்ட அமைப்பின் படி வாழ்நாள் சிறை என்பதன் காலம் வரையறுக்கப்படவில்லை என்றாலும் பொதுவாக 14 வருடங்கள் என்பது ஒரு நியதியாக கடைபிடிக்கப்படுகிறது. அப்படிப் பார்த்தால் இந்த எழுவரும் இரண்டு வாழ்நாள் தண்டனைகளுக்கு மேலாக தொடர்ந்து சிறையில் இருக்கின்றனர். தமிழகத்தின் முக்கிய அரசியல் கட்சிகள் ,மனித உரிமை செயற்பாட்டாளர்கள் ,பல்வேறு அமைப்புகள் இந்த எழுவரின் விடுதலையை தொடர்ந்து கூறி வருகின்றனர். ஆகவே மக்கள் மத்தியிலும் இவர்கள் விடுதலைக்கான விரிந்த ஏற்பு உள்ளது என்பதையும் தங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன்.

சமீபத்தில் உச்ச நீதிமன்றம் இந்த பிரச்சினையில் ஆளுநர் முடிவெடுக்கலாம் என்று கூறியதையும் இங்கு உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன் . எனவே இந்த பிரச்சினையில் இனியும் தாமதிக்காமல் உடனடியாக எழுவரையும் விடுதலை செய்ய வேண்டும். அவர்கள் மிக மிக அதிகமான தண்டனையை அனுபவித்து விட்டார்கள் என்கின்ற அடிப்படையில் இந்த விடுதலையை வழங்க வேண்டும் என்று மிகுந்த பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications