அமித்ஷாவிடம் இந்த 2 விஷயங்களைப் பற்றி பேசினீர்களா? ஆளுநர் ரவிக்கு சு.வெங்கடேசன் எம்பி கேள்வி

Subscribe to Oneindia Tamil

சென்னை: டெல்லி சென்ற தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசியது தொடர்பாக சிபிஎம் எம்பி சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார். டெல்லியில் நேற்று பிரதமர் மோடியை சந்தித்த ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, தர்மேந்திர பிரதான் உள்ளிட்டோரையும் சந்தித்து பேசினார்.

லோக்சபா தேர்தல் முடிவடைந்து பிரதமராக நரேந்திர மோடி 3-வது முறையாக பதவியேற்றார். தற்போது பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள், ஆளுநர்கள் டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்து பேசி வருகின்றனர்.

governor ravi venkatesan

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியும் 5 நாட்கள் பயணமாக டெல்லி சென்றார். டெல்லியில் நேற்று பிரதமர் மோடியை சந்தித்தார். இதனைத் தொடர்ந்து இன்று டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார் ஆளுநர் ரவி.

அமித்ஷாவுடனான சந்திப்பு தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ஆளுநர் ரவி, . அமித் ஷாவுடன் தமிழ்நாட்டில் நிலவும் பாதுகாப்பு, அது தொடர்புடைய சூழ்நிலைகள், மாநில மக்களின் அமைதி, முன்னேற்றம் மற்றும் பாதுகாப்பில் அவை ஏற்படுத்தும் தாக்கங்கள் குறித்து மிகவும் ஆக்கபூர்வ சந்திப்பை மேற்கொண்டேன். நமது மக்களை பாதிக்கும் பிரச்சனைகள் மீது அற்புதமான ஆழந்த பார்வையும் அவர்களின் நல்வாழ்வில் மிகுந்த அக்கறையும் அவருக்கு உள்ளது என தெரிவித்திருந்தார்.

இதேபோல மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானையும் ஆளுநர் ரவி சந்தித்துப் பேசினார். இது தொடர்பாக, மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை சந்தித்து, தமிழ்நாட்டில் உயர் கல்வியை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்வதற்கான வழிகள் மற்றும் முறைகள் பற்றி விவாதித்தேன். திறன் மற்றும் கல்வி மூலம் நமது மாநில இளைஞர்களின் நலனில் ஆழ்ந்த அக்கறை கொண்ட அவருக்கு மிகவும் நன்றி எனக் கூறியிருந்தார்.

governor ravi venkatesan

இதனிடையே சிபிஎம் எம்பி சு.வெங்கடேசன் தமது எக்ஸ் பக்கத்தில், "மதிப்பிற்குரிய ஆளுநரே! மிக குறுகிய காலத்தில் அதிகமான சமூக விரோதிகளை தனது கட்சியில் சேர்த்து "அரசியல் ஸ்நானம்" செய்யப்பட்டுள்ளதைப் பற்றி பேசினீர்களா?
தமிழ்நாட்டு சட்ட ஒழுங்கிற்கு இவ்வளவு நேரம் ஒதுக்கிய உள்துறைஅமைச்சர் மணிப்பூர் பிரச்சனை பற்றி பேச நாடாளுமன்றத்தில் இரண்டு நிமிடம் கூட ஒதுக்க முடியாததைப் பற்றி ஏதும் சொன்னாரா?
"ஆழ்ந்த" பார்வை தமிழ்நாட்டுக்கு மட்டும் தானா?" என கேள்வி எழுப்பியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+