ஏங்க EB ஆபிசர்ஸ் கரண்ட போட்டு விடுங்க! சின்ன மழைக்கே இப்படியா? புலம்பித் தவிக்கும் சென்னை வாசிகள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை : சென்னை புறநகர் பகுதியான சிங்கப்பெருமாள் கோவில் மறைமலைநகர் இரண்டு மணி நேரமாக கனமழை கொட்டி தீர்த்தது வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவினாலும் மின்வெட்டு பாதிப்பால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

தமிழகத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்கு ஒரு சில இடங்களில் கனமழையும், இன்னும் சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கனமழை

கனமழை

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தமிழகத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை செய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டிருந்தது

சென்னையில் மழை

சென்னையில் மழை

அந்த வகையில் சென்னை புறநகர் பகுதியான சிங்கப்பெருமாள் கோவில் மறைமலைநகர் காட்டாங்குளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக மழை கொட்டி தீர்த்தது. இதனால் இங்கு குளிர்ச்சியான சூழல் நிறுவியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மழை நீர் தேங்கியது

மழை நீர் தேங்கியது

அதே போல் சென்னையைய் ஒட்டியுள்ள பல்லாவரம், மீனம்பாக்கம், தாம்பரம், நெற்குன்றம், கோயம்பேடு, மதுரவாயல், ஆலப்பாக்கம், ஆழ்வார் திருநககர்,வானகரம் உள்ளிட்ட அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் தற்போது கன மழை பெய்தது. இதனால் சாலைகளில் ஆங்காங்கே மழை நீர் தேங்கி காட்சியளித்தது.

மின்வெட்டு

மின்வெட்டு

ஒருபுறம் மழை காரணமாக மக்கள் மகிழ்ச்சி அடைந்தாலும், திருக்கச்சூர், காட்டூர், சின்னசேக்காடு , பேரமனூர் , பாலூர், சாஸ்திரம் பாக்கம் என பத்துக்கும் மேற்பட்ட பகுதிகளில் மின் வெட்டு ஏற்பட்டதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

 அரசுக்கு கோரிக்கை

அரசுக்கு கோரிக்கை

இந்த சிறு மழைக்கே பல மணி நேரமாக துண்டிக்கப்படும் மின்சாரம் மழைக் காலங்களிலும் பேரிடர் காலங்களிலும் எப்படி தாங்குமோ என அச்சம் தெரிவிக்கும் மக்கள் மழைக்காலங்களில் மின்வெட்டு ஏற்பாடாமல் தடுக்க அரசும் மின்வாரியமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+