பயணிகள் கவனத்திற்கு.. சென்னையில் இன்றும் நாளையும் மின்சார ரயில்கள் நிறுத்தம்.. அலைமோதிய மக்கள்
சென்னை: சென்னையில் தாம்பரம் - கடற்கரை இடையேயான வழித்தடத்தில் இன்றும் நாளையும் மின்சார ரயில்கள் சுமார் 5 மணி நேரம் வரை நிறுத்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மின்சார ரயில்கள் நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் பரிதவிப்புக்கு உள்ளாகினர்.
சென்னையில் பயணிகளின் போக்குவரத்து தேவையை தீர்த்து வைப்பதில் புறநகர் ரயில்களுக்கு முக்கிய பங்கு உண்டு. பேருந்து, பைக்குகளில் சென்றால் டிராப்பிக்கில் சிக்கி கடும் அவஸ்தை பட வேண்டியிருக்கும். மெட்ரோ ரயில்களில் கட்டணம் அதிகமாக இருப்பதால் அன்றாடம் வேலைக்கு செல்வோர், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ மாணவியர், தொழில் நிமித்தமாக புறநகரில் இருந்து சென்னை சிட்டிக்குள் வருபவர்கள் என பல்வேறு தரப்பினரும் சென்னை புறநகர் ரயில்களை அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர்.

சென்னை செண்ட்ரலில் இருந்தும் சென்னை கடற்கரையில் இருந்தும் புறநகர் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் சென்னை தாம்பரம் - கடற்கரை இடையேயான வழித்தடத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதுவதை காண முடியும். சில நிமிடங்கள் ரயில்கள் தாமதம் ஆனாலும் பயணிகள் கூட்டம் பிளாட்பார்மில் அலைமோதும். அதிலும் பீக் நேரங்களில் சுமார் 10 நிமிடங்களுக்கு ஒரு ரயில் இயக்கப்பட்டு வருகிறது.
இருந்தாலும் பயணிகள் கூட்டம் அதிக அளவில் இருப்பதை காண முடியும். எப்போதும் பயணிகள் நிரம்பி வழியும் இந்த வழித்தடத்தில் இன்றும் நாளையும் ரயில்கள் குறிப்பிட்ட மணி நேரத்திற்கு நிறுத்தப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக இன்றும் நாளையும் ரயில் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக ரயில்வே தெரிவித்துள்ளது.
காலை 11 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை ரயில்கள் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரயில்கள் நிறுத்தப்பட்டதால் தாம்பரம், மாம்பலம், கிண்டி உள்ளிட்ட முக்கிய நகரங்களின் பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. ரயில் நிறுத்தப்பட்டுள்ள விவரம் தெரியாமல் வந்த பயணிகள் பலரும் கடும் அவஸ்தைக்கு உள்ளாகினர். ரயில்வே நிர்வாகம் முறையாக முன்னறிவிப்பு இன்றி ரயில் சேவையை நிறுத்தியுள்ளதாக பயணிகள் பலரும் குற்றம் சாட்டினார்.
ரயில் நிலையம் வரை வந்து ரயில்கள் இயக்கப்படாத விவரம் அறிந்த பயணிகள் பலரும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இதை பயன்படுத்தி ஆட்டோக்களிலும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதாக பயணிகள் ஆதங்கம் தெரிவித்ததையும் காண முடிந்தது. விடுமுறை நாள் என்றாலும் தனியார் அலுவலகங்கள் பலவும் இயங்கியதால், வேலைக்கு செல்ல வந்த பயணிகள் பலரும் பேருந்தை பிடித்து அலுவலகத்திற்கு தாமதமாகவும் சென்றதை காண முடிந்தது.
கோடம்பாக்கம், தாம்பரம் ரயில்வே நிலையங்களில் நடக்கும் பராமரிப்பு பணி காரணமாக நாளை 41 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், செங்கல்பட்டு மற்றும் தாம்பரம் இடையே இயக்கப்படும் பயணிகள் சிறப்பு மின்சார ரயில்களும் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே சென்னை கோட்டம் தெரிவித்துள்ளது.
காஞ்சிபுரம்- சென்ன கடற்கரை, தாம்பரம் - சென்னை கடற்கரை தாம்பரம் மார்க்கத்தில் நாளை 41 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாகவும் என்று ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில்கள் நிறுத்தப்படுவதால் மாநகர பேருந்து சேவைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications