ஆச்சரியப்பட்டுப்போன ஆபீசர்ஸ்.. தமிழகத்தில் பத்திரப்பதிவு அதிரடி.. ஒரே மாசத்துல நடந்த சாதனையை பாருங்க
சென்னை: தமிழக மக்களின் நன்மைக்காகவும், வசதிக்காகவும், ஏகப்பட்ட அறிவிப்புகளையும், சலுகைகளையும் பத்திரப்பதிவு துறை வெளியிட்டு வருகிறது. அந்தவகையில், இப்போது ஒரு மகிழ்ச்சி தகவலை தெரிவித்து கொண்டுள்ளது.
தமிழக அரசின் மற்ற துறைகளை போலவே பத்திரப்பதிவு துறையும் முழுக்க முழுக்க ஆன்லைன்மயமாகிவிட்டது.. அதேபோல, ஒவ்வொரு வருடமும் வருவாய் இலக்கு நிர்ணயித்து, பத்திரப்பதிவு துறை செயல்பட்டு வருகிறது.

சிறப்பு தினங்கள்: அந்தவகையில், இந்த வருடம் இதுவரை ரூ.8,000 கோடி கூடுதல் வருவாய் பத்திரப்பதிவுத் துறையில் கிடைத்துள்ளது. ஆனால், நிர்ணயிக்கப்பட்டுள்ளதோ ரூ.25,000 கோடி வருவாய் ஆகும்.. எனவே, இந்த இலக்கை எட்டி பயணப்பட்டு வருகிறது. இதற்காகவே, பல்வேறு அதிரடிகளையும், அறிவிப்புகளையும், வெளியிட்டு வருவதுடன், பொதுமக்களுக்கான சலுகைகளையும் வாரி வழங்கி வருகிறது.
இதற்காகவே, சுபமுகூர்த்த தினங்களில் சார்பதிவாளர் அலுவலகத்தில் கூடுதல் டோக்கன்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இந்த நாட்களில் மட்டும், பத்திரப்பதிவு சற்று அதிகமாகவே நடக்கும் என்பதால், கூடுதல் வசூல் கிடைத்து வருகிறது..
விடுமுறை நாட்கள்: இதைத்தவிர, மேலும் சில விடுமுறை நாட்களிலும் கூடுதல் பத்திரப்பதிவை மேற்கொள்ள மக்கள் கோரிக்கை விடுத்து வந்ததால், அதற்கேற்றபடியும் விசேஷ டோக்கன்கள் கூடுதலாக விநியோகிக்கப்படுகின்றன.
கடந்த பொங்கல் பண்டிகைக்கு பிறகு, அதாவது ஜனவரி 31 வரை அனைத்து வேலை நாட்களிலும் பத்திரப் பதிவுக்கான டோக்கன்களை கூடுதலாக வழங்க உத்தரவிடப்பட்ட நிலையில், ஆவணப்பதிவுகள் எண்ணிக்கை அதிகரித்ததாக மகிழ்ச்சி தகவல் வெளியாகியிருந்தது. இதைத்தவிர, ஜனவரி 31-ம் தேதி வரை அனைத்து வேலை நாட்களிலும் கூடுதலான டோக்கன் வழங்க உத்தரவிடப்பட்டது. இதுபோன்ற நடவடிக்கைகள் சாதகமான முடிவை பதிவுத்துறைக்கு பெற்று தந்து வருகின்றன.
பத்திரப்பதிவு: எனவேதான், கடந்த மாதம் 22ம் தேதி மட்டும் 21,004 பத்திரங்கள் பதியப்பட்டு அதன் மூலம் அரசுக்கு ரூ.168.83 கோடி வருவாய் ஈட்டப்பட்டது. அந்தவகையில், கடந்த நிதியாண்டில், 2023 ஜனவரி வரை கணக்கிட்டால், பதிவுத்துறை அடைந்த வருவாயை விட, இந்த 2024 ஜனவரி வரை கூடுதலாக, 952.86 கோடி ரூபாய்வருவாய் ஈட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இனி வரும் காலங்களிலும், இலக்கை எட்டிப்பிடிக்க பதிவுத்துறை மும்முரமாகி வருகிறது. அதுமட்டுமல்ல, பதிவுக்கு வரும் பொதுமக்களின் பணிகளை சிறப்பாக செய்து, புகாருக்கு இடமின்றி அனைத்து அலுவலர்களும், பணியாளர்களும் பணிபுரிய வேண்டும் என்றும் அரசு நிர்ணயித்த வருவாய் இலக்கை அடைய வேண்டும் என்றும் நிர்வாகிகளுக்கு முக்கிய உத்தரவும் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications