சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சக்ஸஸ்.. ட்விட்டரில் புரொபைல் படத்தை மாற்றி வைத்த பிரதமர் மோடி.. என்னன்னு பாருங்க..!

புரொபைல் படத்தை மாற்றி வைத்துள்ளார் பிரதமர் மோடி

Google Oneindia Tamil News

சென்னை: நூறு கோடி தடுப்பூசி செலுத்தி சாதனை படைத்ததை தொடர்ந்து, பிரதமர் தன்னுடைய சோஷியல் மீடியாவின் முகப்பு பக்கத்தை மாற்றியுள்ளார்.. அத்துடன் விழிப்புணர்வு வாசகத்தையும் அதில் பதிவிட்டுள்ளார்.

கடந்த ஜனவரி 16-ம் தேதி மத்திய அரசு கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை தொடங்கியது... முதல் 10 கோடி தடுப்பூசிகளை 85 நாட்களிலேயே செலுத்தி சுகாதாரத்துறை சாதனை படைத்தது.

பொள்ளாச்சி பலாத்கார வழக்கு.. கைதானவர்களுக்கு சாலையோரம் கொடுத்த 'சலுகை..' 7 போலீசார் அதிரடி சஸ்பெண்ட் பொள்ளாச்சி பலாத்கார வழக்கு.. கைதானவர்களுக்கு சாலையோரம் கொடுத்த 'சலுகை..' 7 போலீசார் அதிரடி சஸ்பெண்ட்

மேலும், செப்டம்பர் 17-ம் தேதி பிரதமர் மோடியின் பிறந்தநாளில் மட்டும் இரண்டரை கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன..

தடுப்பூசி

தடுப்பூசி

அதற்கு பிறகு தொடர்ச்சியாக தடுப்பூசி செலுத்தும் வேகம் அதிகரித்தது.. இப்போது, 9 மாதங்களில் 100 கோடி டோஸ் என்ற இலக்கை எட்டி புதிய வரலாறு படைத்துவிட்டது மத்திய அரசு.. இது அமெரிக்காவில் இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கையை விட 2 மடங்கு அதிகமாகும், ஜப்பானை விட 5 மடங்கும், ஜெர்மனியை விட 9 மடங்கும், பிரான்சை விட 10 மடங்கு தடுப்பூசிகள் இந்தியாவில் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு வெளியிட்டுள்ள வீடியோவிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லிஸ்ட்

லிஸ்ட்

அதாவது, இதுவரை சீனா மட்டுமே 100 கோடி டோஸ் தடுப்பூசி என்ற இலக்கை எட்டியிருந்த நிலையில், அந்த லிஸ்ட்டில் இந்தியாவும் சேர்ந்துள்ளது.. இதில் 75 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசியையும், 31 சதவீதத்துக்கும் அதிகமானோர் 2 தவணை தடுப்பூசிகளை செலுத்தி கொண்டுள்ளனா்.. இந்தியாவின் மக்கள் தொகையின் அடிப்படையில் உத்தரகண்டில் அதிகபட்சமாக முதல் தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளது...

 தமிழ்நாடு

தமிழ்நாடு

நம் தமிழ்நாட்டில் 5 கோடி மேல் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது... இதையடுத்து இந்த சாதனையை கொண்டாடும் பொருட்டு நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.. நேற்றில் இருந்து பிரதமர் மோடிக்கு பல்வேறு தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.. பிரதமர் மோடியும் இந்த சாதனை குறித்து ஒரு ட்வீட் பதிவிட்டுள்ளார்..

 பாராட்டு

பாராட்டு

அதில், "இந்தியாவின் வரலாற்று நாள் இன்று... 130 கோடி இந்தியர்களின் அறிவியல் மற்றும் தொழில் நிறுவனங்களின் கூட்டு முயற்சியின் வெற்றியை இன்று காண்கிறோம்.. 100 கோடி தடுப்பூசிகள் செலுத்திய இந்தியாவுக்கு வாழ்த்துக்கள்... நாடு, இந்த சாதனையை அடைய உழைத்த டாக்டர்கள், நர்ஸ்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி" என்று பதிவிட்டுள்ளார்.

விளக்கம்

விளக்கம்

இன்று காலை நாட்டு மக்களிடம் உரையாற்றியபோதுகூட,"நம்முடைய தடுப்பூசி திட்டம் குறித்து பலர் சந்தேகம் எழுப்பினர்.. இந்தியாவில் இது எப்படி நல்ல ஒழுங்குமுறையுடன் சாத்தியப்படுத்த முடியும் என்று கேட்டார்கள்.. நமது தடுப்பூசி திட்டத்தில் விஐபி கலாசாரம் தலையிடாது என்பதை உறுதி செய்துள்ளோம்.. எல்லாம் சமமாக நடத்தப்பட்டுள்ளனர்... இந்தியாவின் முழு தடுப்பூசி திட்டமும் அறிவியல் சார்ந்தது... அறிவியல் அடிப்படையிலானது என்ற உண்மையை அறிந்து நாம் பெருமைப்பட வேண்டும். இது முற்றிலும் அறிவியல் முறைகளை அடிப்படையாகக் கொண்டது" என்று பெருமிதம் தெரிவித்தார்.

சமூகவலைதளம்

சமூகவலைதளம்

இன்றைய தினம், பிரதமர் மோடி தன்னுடைய புரொபல் படத்தையும் மாற்றி வைத்து உள்ளார்.. நூறு கோடி தடுப்பூசி செலுத்தி சாதனை படைத்ததை தொடர்ந்து, பிரதமர் தன்னுடைய சோஷியல் மீடியாவின் முகப்பு பக்கத்தை மாற்றியுள்ளார்.. அதில், "வாழ்த்துக்கள் இந்தியா.. கொரோனாவுக்கு எதிராக 100 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டு விட்டது" என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது.

English summary
Success: PM Modi change his profile picture over 100 crore vaccine achievement
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X