அப்பதான் அவைக்கு வந்தார் சபாநாயகர் செல்வம்.. நெஞ்சுவலியால் ஐசியூவில் அனுமதி.. நலம் விசாரித்த ஆளுநர்
புதுச்சேரி சபாநாயகருக்கு நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
சென்னை: புதுச்சேரி சபாநாயகர் ஆர். செல்வத்திற்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.. அவரை ஆளுநர் தமிழிசை சவுந்தராஜன் நலன் விசாரித்துள்ளார்.
புதுச்சேரியில் என்.ஆர் காங்கிரஸ் - பாஜக கூட்டணி கடந்த மே மாதம் 7ம் தேதி பதவியேற்றது... ஜுன் 16-ம் தேதி சபாநாயகராக செல்வமும் 27ம் தேதி அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.
இதையடுத்து, புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த ஆகஸ்ட் 26ஆம் தேதி தொடங்கியது.. அன்றைய தினம் மாலையில் புதுச்சேரி பட்ஜெட்டை முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்தார்.

கூட்டம்
4-ம் நாள் பேரவை கூட்டத்தொடர் நடந்து முடிந்துள்ளது. இன்று 5வது நாள் கூட்டம்.. இதில் பங்கேற்ற சபாநாயகர் செல்வம் இன்று காலை சட்டப்பேரவைக்கு வந்தார்... ஆனால், பேரவைக்குள் வராமலேயே அவரது கார் வேகமாக வெளியேறியது.

நெஞ்சுவலி
எனவே, சட்டப்பேரவை நிகழ்வுகள் துணை சபாநாயகர் ராஜவேலு தலைமையில் தொடங்கியது... பிறகுதான் தெரிந்தது, பேரவைக்கு வந்த உடனேயே சபாநாயகர் செல்வத்துக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.. அதனால், அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.. பிறகு அங்கே ஐசியூவில் அப்போதே அனுமதிக்கப்பட்டும் உள்ளார்.. தற்போது சபாநாயகருக்கு தீவிர சிகிச்சை தரப்பட்டு வருகிறது.

சிரமம்
பேரவையில் பங்கேற்க காலை வந்தபோதே செல்வத்துக்கு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.. மூச்சுவிடுவதில் சிரமமும் ஏற்பட்டுள்ளது.. அதற்கு பிறகுதான் அருகில் இருந்தோரிடம் நெஞ்சுவலிப்பதாகவும் சொல்லி இருக்கிறார்.. இப்போது டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அவரை கண்காணித்து வருகிறார்கள்.. அதேபோல, சட்டசபை காவலர்களும், மருத்துவமனை ஐசியூ பிரிவுக்கு வெளியே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஐசியூ
பேரவைக்கு வந்த உடனேயே நெஞ்சுவலி ஏற்பட்டதால், அந்த வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது... சபாநாயகர் செல்வம் ஐசியூவில் உள்ள சூழலில் யாரையும் அங்கு அனுமதிக்கவில்லை... சபாநாயகர் செல்வத்தை துணைநிலை ஆளுநர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்கள் மற்றும் அனைத்து கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்... இதனை தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக அவர், சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications