Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குழந்தைகளிடையே திடீரென அதிகரிக்கும் மாறுகண்....இதுதான் காரணம்...எச்சரிக்கும் கண் மருத்துவர்

Subscribe to Oneindia Tamil

சென்னை : மொபைல், கணினித் திரையை தொடர்ந்துப் பார்ப்பதன் அபாயத்தால், குழந்தைகள் மத்தியில் 'மாறுகண் மற்றும் கிட்டப்பார்வை' பாதிப்புகள் அச்சுறுத்தும் அளவிற்கு அதிகரிப்பதாகவும், சென்னையில் சமீப காலமாக 5% அளவு அதிகரித்துள்ளதாக எச்சரித்துள்ளார் கண் மருத்துவர்.

கோவிட்-19 பெருந்தொற்றினால் கடந்த 2 ஆண்டுகளில் மாறுகண் நிகழ்வுகள் திடீர் என, எதிர்பாராத வகையில் அதிகரிப்பதாக சென்னையிலுள்ள டாக்டர். அகர்வால்ஸ் மருத்துவமனை மருத்துவர் தெரிவித்துள்ளார்.

இந்நோய் பாதிப்புடன் வரும் நோயாளிகளின் எண்ணிக்கை, முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் 5 மடங்கு உயர்ந்திருக்கிறது எனவும், குழந்தைகள் மத்தியில் கிட்டப்பார்வை (மையோப்பியா) பாதிப்பு சுமார் 25% வரை அதிகரித்து வந்திருக்கிறது. வருடாந்திர அளவில் கிட்டப்பார்வை நேர்வுகளின் வளர்ச்சி, இயல்புக்கு மாறாக 100% அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார் .

Sudden increase in cyclophoria in children .... This is the reason ... The ophthalmologist warns

கடந்த இரண்டு ஆண்டுகளில் சென்னை மாநகரைச் சேர்ந்த குழந்தைகள் மத்தியில் 'மாறுகண்' பாதிப்புகளின் எண்ணிக்கை திடீரென, எதிர்பார்க்காதவாறு பன்மடங்கு உயர்ந்திருக்கிறது. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில், 5 மடங்குகள் அதிகரித்திருப்பது எச்சரிக்கை மணியை ஒலிக்கச் செய்திருக்கிறது.

அதைப்போலவே, கிட்டப்பார்வை வளர்ச்சி 100% உயர்ந்திருப்பதும் கடந்த இரண்டு ஆண்டுகளில் இது 25% அதிகரித்திருப்பதும் கவலையை உருவாக்கியிருக்கிறது என்கிறார் சென்னை - டாக்டர். அகர்வால்ஸ் மருத்துவமனையின், குழந்தைகளுக்கான முதுநிலை கண் மருத்துவர் மஞ்சுளா ஜெயக்குமார்.

வீட்டிற்கு வெளியே சூரியஒளி படுமாறு இல்லாததும் மற்றும் விளையாட்டு, உடற்பயிற்சி போன்ற நடவடிக்கை செயல்பாடுகள் மிகவும் குறைந்திருப்பதும் மற்றும் அதே நேரத்தில் குழந்தைகளின் வாழ்க்கை முறையில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களும், மொபைல், கணினி, டிவி ஆகியவற்றின் திரைகளைப் பார்க்கும் நேரம் பன்மடங்கு அதிகரித்திருப்பதும் இதற்கான முக்கிய காரணங்களாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு ஆகஸ்ட் மாதமும் அனுசரிக்கப்படுகின்ற "குழந்தைகளின் கண் நலம் மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு மாதம்" என்பதையொட்டி கண் பராமரிப்பு மையங்களில் மிகப்பெரிய வலையமைப்புகள் ஒன்றாகத் திகழும் டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனையால் ஏற்பாடு செய்யப்பட்ட செய்தியாளர் சந்திப்பின்போது பேசிய டாக்டர். மஞ்சுளா ஜெயக்குமார் கூறியதாவது.

கோவிட் காலம் பாதிக்கப்படும் குழந்தைகள் கல்வி

"பெருந்தொற்று நிலவும் அண்மை ஆண்டுகளின்போது குழந்தைகள் / சிறார்கள் மத்தியில் மாறுகண் பாதிப்பு நிகழ்வுகளின் எண்ணிக்கை இதற்கு முன்பு ஒருபோதும் காணப்படாத அளவிற்கு அதிகரித்திருக்கிறது.

சென்னையில், கோவிட்-19 தொற்றுக்கு முன்பு ஒரு ஆண்டில் ஒன்று அல்லது இரண்டு பாதிப்பு நேர்வுகளையே நாங்கள் பார்த்திருக்கிறோம்; ஆனால், இன்றைக்கு பத்துக்கும் அதிகமான குழந்தைகள் இப்பாதிப்பினால் சிகிச்சைக்கு வந்திருக்கின்றனர். கவலையளிக்கும் மற்றொரு அம்சமாக கிட்டப்பார்வையின் வளர்ச்சி நிலை இருக்கிறது. குழந்தைகள் மத்தியில் ஏறக்குறைய 100% வளர்ச்சியை நாங்கள் பார்க்கிறோம். கிட்டப்பார்வை பாதிப்பு தோன்றுவதும் 25% அளவிற்கு அதிகரித்திருக்கிறது.

தூரம் குறைவாக வைத்து பார்ப்பதால் பாதிப்பு

இப்பாதிப்பிற்கான முக்கிய இடர்க்காரணிகளுள் கண்களுக்கும் மற்றும் நமது பார்வை செல்கின்ற பொருளுக்கும் இடைப்பட்ட தூரம் 33 செ.மீட்டருக்கும் குறைவாக இருக்கின்ற நிலையில், வாசிப்பது மற்றும் எழுதுவது போன்ற செயல்பாடுகளைத் தொடர்ந்து நீண்டநேரம் செய்வதும் ஒன்றாகும். WSPOS என்ற குழந்தைகளுக்கான கண் மருத்துவ சங்கத்தின்படி மிக அருகில் இவ்வாறு பார்வையை செலுத்துவது கிட்டப்பார்வையை ஏற்படுத்தும் மற்றும் மாறுகண் போன்ற நிலைகளுக்கு இட்டுச்செல்லும்.

பொதுமுடக்க காலத்தின்போது, "மிக அருகில் பார்வை செயல்பாடு" என்பதில் கல்வி சார்ந்த அல்லது பிற நோக்கங்களுக்காக கணினி, மடிக்கணினி, கைபேசி அல்லது டேப்லெட்களின் திரையை, அடிக்கடி இடைவேளையின்றி நீண்டநேரம், வைத்த கண் வாங்காமல் பார்ப்பது பொதுவான ஒரு நிகழ்வாகும். இதனால் கண்ணுக்கு ஏற்படும் அழுத்தம், கண்ணை சுருக்கிப் பார்ப்பதற்கு வழிவகுக்கும்; கிட்டப்பார்வை பாதிப்பு வளர்ச்சியடைவதை துரிதமாக்கும் விளைவை இது ஏற்படுத்தும்.

வெளிச்சத்தை உமிழும் டிஜிட்டல் திரைகள்

புத்தகங்கள், தாள் வடிவிலான பிற பொருட்கள் மட்டுமின்றி, வெளிச்சத்தை உமிழ்கின்ற டிஜிட்டல் சாதனங்களும், கிட்டப்பார்வை வளர்ச்சியடைவதற்கு சமஅளவில் இடர்வாய்ப்பைக் கொண்டிருக்கின்றன. ஆனால், வெளிச்சத்தை உமிழும் டிஜிட்டல் சாதனங்கள், உலர்கண் மற்றும் வெளிச்சத்தைப் பார்க்க இயலாத நிலை போன்ற பிற பிரச்சனைகளையும் கூடுதலாக ஏற்படுத்துகின்றன.

அடிக்கடி இடைவெளி விட்டு செல்போனை பயன்படுத்துக

அடிக்கடி இடைவேளைகள் விட்டு, மிக அருகில் பார்வை செயல்பாடுகளை மேற்கொள்கின்ற அதிக மணி நேரங்களைவிட, இடைவேளையின்றி தொடர்ந்து இவ்வாறு செய்வது கிட்டப்பார்வை வளர்ச்சி வேகமாக நடைபெறுவதற்கு உதவுகிறது. கணினி திரைக்கு முன்பாக அல்லது மொபைல் போனுக்கு முன்பாக இடைவேளையின்றி ஒரு குழந்தை ஒரு மணி நேரம் செலவிடுமானால், அடிக்கடி இடைவேளைகளை எடுத்துக்கொண்டு, 3 மணி நேரம் இதே செயல்பாட்டை மேற்கொள்ளும் ஒரு குழந்தையை விட, கண் தொடர்பான சிக்கல்களும், பாதிப்புகளும் ஏற்படுவதற்கு அதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றன என்பதே இதன் அர்த்தமாகும்.

ஆன்லைன் முறையிலான வகுப்புகளைத் தவிர்க்க இயலாதபோது, மொபைல் போன்களுக்குப் பதிலாக, மடிக்கணினி / கணினி போன்றவற்றை குழந்தைகள் பயன்படுத்துமாறு பெற்றோர்கள் செய்யவேண்டும். ஏனெனில், மொபைல் போன் திரையோடு ஒப்பிடுகையில், இந்த டிஜிட்டல் சாதனங்களிலிருந்து கண்களுக்கு இடைப்பட்ட தூரம் அதிகமாக இருக்கும்.

சூரிய ஒளி விளையாட்டு முக்கியம்

சாத்தியமானால், வீட்டிற்கு வெளியே ஒரு நாளில், 1 முதல் 2 மணி நேரங்கள் விளையாடுவதன் மூலம், சூரியஒளி உடலில் படுவதை உறுதிசெய்வது முக்கியம். ஆரோக்கியமான, சமச்சீரான உணவும் குழந்தைகளின் ஒட்டுமொத்த வளர்ச்சியை ஊக்குவிக்கும்.

கிட்டப்பார்வை பாதிப்பு வளர்ச்சியைத் தடுப்பதற்கான தீர்வுகளுள், குறைந்த மருந்தளிப்பு அளவுள்ள அட்ரோப்பின் கண் சொட்டுமருந்து, புராக்ரசிஸ் சேர்க்கை லென்ஸ்கள், பல்குவிய கண்ணாடிகள், ஆர்த்தோகெரட்டாலஜி மற்றும் ஆர்ஜிபி கான்டாக்ட் லென்ஸ்கள் போன்ற சிறப்பு கான்டாக்ட் லென்ஸ்கள் ஆகியவை இருக்கின்றன.

மாறுகண் பாதிப்பு

ஆனால், தீவிரமான மாறுகண் பாதிப்பு ஏற்படுமானால், அதை முந்தைய இயல்பு நிலைக்கு மாற்ற இயலாது. ஆகவே, பைனாக்குலர் விஷன் என அழைக்கப்படும் நிலையை மீண்டும் கொண்டு வருவதற்கு மாறுகண் பார்வைக்கான (ஸ்ட்ராபிஸ்மஸ்) அறுவைசிகிச்சை செய்யப்பட வேண்டும்.

கிட்டப்பார்வை பாதிப்பு

தீவிர கிட்டப்பார்வை பாதிப்பானது, வேறுபல சிக்கல்களையும் கொண்டிருக்கிறது. சீக்கிரமாகவே கண்புரை உருவாவது, திறந்த - கோண கண் அழுத்தநோய், கருவிழி விடுபடல், அட்ரோபிக் மையோபிக் மக்குளோபதி எனப்படும் என்ற கடுமையான, சரிசெய்ய இயலாத பார்வைத்திறனை பாதிக்கின்ற நிலை மற்றும் மையோபிக் ஸ்ட்ராபிஸ்மஸ் ஃபிக்ஸஸ் என்ற ஒரு அரிதான மாறுகண் தீவிர பாதிப்புநிலை ஆகியவை இவற்றுள் அடங்கும்.

கிட்டப்பார்வை வளர்ச்சி என்பது, பாதிப்பிற்கு ஆளாகும் நபருக்கும், நாட்டுக்கும் ஒரு பொருளாதார சுமையாகவும் இருக்கிறது. சூழல் மாற்றங்களை செய்வதன் மூலம் கிட்டப்பார்வை வளர்ச்சியைக் குறைக்க கண் மருத்துவர்கள் தீவிரமாக முயற்சிக்கின்றனர்"

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா காலம் பள்ளிகள் இல்லாமல் வீட்டில் செல்போனுடன் மல்லுக்கட்டும் குழந்தைகள் கண் பார்வையை பாதுகாக்க பெற்றோர் அவசியம் மருத்துவரின் எச்சரிக்கையை கவனிக்கவேண்டும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+