காலையிலேயே அதிர்ந்த சென்னை.. 20 இடங்களில் வருமானவரித்துறை சோதனை..திடீர் ஐடி ரெய்டு பின்னணியில் யார்
சென்னை : சென்னையில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினரின் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.. சௌகார்பேட்டையில் மருந்து ஏற்றுமதி இறக்குமதி செய்யும் நிறுவனத்தில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டு வருகிறது.. சவுகார்பேட்டை ஸ்டார்ட்டன் முத்தையா முதலி தெருவில் தொழில் அதிபர் ஒருவர் வீட்டில் ஐ.டி. அதிகாரிகள் இந்த சோதனையை நடத்தி வருகிறார்கள்.
தமிழகத்தில் வரி ஏய்ப்பு தொடர்பாக அவ்வப்போது வருமான வரித்துறை அதிகாரிகள், தொழில் நிறுவனங்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தி வருகிறார்கள்.

தனியார் நிறுவனம்: அந்தவகையில், சென்னையில் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான 20-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை வேப்பேரி, பூக்கடை, வில்லிவாக்கம், மாதவரம் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட இடங்களில், வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. அந்தவகையில், சவுகார்பேட்டை ஸ்டார்ட்டன் முத்தையா முதலி தெருவில் தொழில் அதிபர் ஒருவர் வீட்டில் ஐ.டி. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
வருமானவரித்துறை: மாதவரம் நடராஜன் நகரில் உள்ள தனியார் குடோனில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். தாம்பரம், குன்றத்தூர், எழும்பூர், மண்ணடி, தாம்பரம், வேப்பேரி, பூக்கடை, வேப்பேரி, வில்லிவாக்கம், ஆயிரம் விளக்கு, உள்ளிட்ட இடங்களில் வருமான வரி சோதனை நடந்துவருவதால் சென்னையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வடசென்னையின் பிற பகுதிகளிலும் வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக இந்த சோதனை நடக்கிறது. அந்தவகையில், சென்னையின் புறநகர்ப்பகுதிகளுக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் பறந்துள்ளனர்.. இன்று அதிகாலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெரும் பரபரப்பு: சென்னையில் ஸ்டீல் தயாரிப்பு நிறுவனங்கள், அந்த நிறுவனம் தொடர்பான இடங்களிலும் வருமானவரி சோதனை நடக்கிறது.. இந்த சோதனைக்கு பின்னணியில் அரசியல் காரணங்கள் ஏதாவது இருக்கிறதா என்று தெரியவில்லை. இந்த சோதனையின் முடிவில்தான் அரசியல் காரணம் குறித்து தெரியவரும்.
அதேபோல, இந்த சோதனையும், விசாரணையும் முழுமையாக முடிவடைந்த பிறகே, கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், பணம் குறித்த தகவல்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என தெரிகிறது. என்றாலும், விடிகாலையிலேயே ரெய்டு நடத்தப்பட்டுள்ளது, பெரும் பரபரப்பை சென்னையில் ஏற்படுத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications