என்ன ரோடையே காணோம்.. வாகன ஓட்டிகளே கவனம்! சென்னையின் முக்கிய சாலையில் இன்று திடீர் பள்ளம்!
சென்னை: சென்னை வடபழனி - கோடம்பாக்கம் பிரதான சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
சென்னை வடபழனியில் இருந்து கோடம்பாக்கம் செல்லக்கூடிய பிரதான சாலையாக இருக்கும் ஆற்காடு சாலையில் பவர் ஹவுஸ் அருகே சாலை நடுவே இன்று காலையில் திடீரென பள்ளம் ஏற்பட்டு உள்ளது. 10 அடி நீளத்தில் 3 முதல் 6 ஆடி ஆழத்திற்கு சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளது.

போக்குவரத்து மிகுந்த பிரதான சாலையில் ஏற்பட்டுள்ள இந்த திடீர் பள்ளத்தால் வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனர். தகவல் அறிந்து உடனடியாக போக்குவரத்து காவலர்கள் வந்தனர். பள்ளத்திற்கு முன்பாக தடுப்பு கம்பிகள் வைக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து காவலர்கள் போக்குவரத்தை சீர்செய்து வருகின்றனர்.
இந்தப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக இந்த பள்ளம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த திடீர் பள்ளத்தால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் சிரமம் அடைந்துள்ளனர்.
சென்னையில் பிரதான சாலையில் ஏற்பட்டுள்ள இந்தப் பள்ளத்தை உடனடியாக சரிசெய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இதையடுத்து மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் இப்பகுதியில் ஆய்வு செய்து வருகின்றனர். மெட்ரோ பணிகள் நடைபெறும் பகுதிகளில் இதுபோன்று பள்ளங்கள் ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
சென்னை கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி இடையே 26 கி.மீ தொலைவுக்கு மெட்ரோ வழித்தடம் அமைக்கப்பட்டு வருகிறது. இதில் கலங்கரை விளக்கம் முதல் கோடம்பாக்கம் வரை சுரங்கப்பாதை ஆகவும், கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் முதல் பூந்தமல்லி வரை உயர்மட்ட பாலமாகவும் இந்த மெட்ரோ வழித்தடம் அமைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த வழித்தடத்தில் 9 சுரங்க மெட்ரோ ரயில் நிலையங்களும், 18 உயர்மட்ட மெட்ரோ ரயில் நிலையங்களும் இடம்பெற உள்ளன. தற்போது, உயர்மட்ட, சுரங்கப் பாதை பணிகள், மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கும் பணி ஆகியவை பல்வேறு இடங்களில் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் தான் அப்பகுதியில் இன்று பள்ளம் ஏற்பட்டுள்ளது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications