திமுக கூட்டணியில் காங்கிரஸ் திடீர் கலகம்! ஆட்சியில் பங்கு தரணுமாம்-செல்வப்பெருந்தகை துணை முதல்வராம்!
சென்னை: அதிமுக- பாஜக கூட்டணி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் திமுக தலைமையிலான கூட்டணியில் திடீரென புயல் வீசத் தொடங்கி உள்ளது. சென்னை மாநகரின் பல பகுதிகளில் காங்கிரஸ் கட்சியினர் ஒட்டிய சுவரொட்டிகளில், ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு என்ற முழக்கமும் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை 2026-ன் துணை முதல்வர் என்ற வாசகமும் இடம் பெற்றிருப்பதால் திமுக கூட்டணியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக காங்கிரஸ் நீடித்து வருகிறது. 2014, 2019, 2024 லோக்சபா தேர்தல்கள் மற்றும் 2016, 2021 சட்டசபை தேர்தல்கள் ஆகியவற்றில் திமுக கூட்டணியில்தான் காங்கிரஸ் இடம் பெற்றிருந்தது.
திமுக கூட்டணியில் 2-வது பெரிய கட்சியாக காங்கிரஸ் இருந்து வருகிறது. இதனால் சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு கவுரவமான தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டும் வருகின்றன.
திமுகவும் காங்கிரஸும் அகில இந்திய அளவில் இந்தியா கூட்டணியின் முதன்மை கட்சிகளாக, பாஜகவுக்கு எதிரான அணியை கட்டமைத்துள்ளன. இதனால் திமுக- காங்கிரஸ் இடையேயான உறவில் விரிசல் எழுவதும் இல்லை.
தற்போது திடீரென, திமுக தலைமைக்கு நெருக்கடி தரும் வகையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகையின் ஆதரவாளர்கள், சென்னை மாநகரம் முழுவதும் போஸ்டர்களை ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளனர். செல்வப்பெருந்தகையின் பிறந்த நாளை முன்னிட்டு இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
சென்னை மாநகரில் காங்கிரஸ் கட்சியினர் ஒட்டியிருக்கும் இந்த போஸ்டரில்,
"ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு" என்ற முழக்கம் இடம் பெற்றுள்ளது. மேலும் 2026-ன் துணை முதல்வரே என செல்வப்பெருந்தகைக்கு வாழ்த்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மறைந்த கவிஞர் காமு ஷெரிப்பீன் பேரனும் காங்கிரஸ் மாநில செயலாளருமான கவி. கா.மு. AVM ஷெரிப் பெயரில் இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
தமிழகத்தில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்துவிட்டது. அதிமுக- பாஜக கூட்டணியில் அமமுக உள்ளிட்ட சில கட்சிகள் இடம் பெற உள்ளன. இதனால் திமுக கூட்டணியில் இடம் பெற்றிருக்கக் கூடிய கட்சிகளுக்கு போக்கிடம் இல்லை. ஆகையால் திமுக கூட்டணி கட்சிகள் இனி அடக்கித்தான் வாசிக்க வேண்டும் என்கிற நிலைமை இருந்து வருகிறது.
ஆனால் திடீரென திமுக கூட்டணியில் கலகத்தை ஏற்படுத்தும் வகையில் காங்கிரஸ் கட்சியினர் ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு தரக் கோரி போஸ்டர்கள் ஒட்டியிருப்பது பரபரப்பை கிளப்பிவிட்டுள்ளது.
-
இரட்டை இலையைக் கடிக்கும் தவெக..நடையை கட்டும் நிர்வாகிகள்! அடுத்த காங்கிரஸா அதிமுக? 1977 ரிட்டர்ன்ஸ்? -
தவெக - காங்கிரஸ் கூட்டணிக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.. முத்தரசன் சொன்ன வார்த்தை! -
திமுக ஆப்சென்ட்.. இந்தியா கூட்டணி கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பது உறுதி! காங். சொன்ன மேட்டர் -
சொந்த தொகுதியில் டெபாசிட் வாங்க முடியல! எங்களை விமர்சிப்பதா? ஒரே காமெடி! சீமானுக்கு காங்கிரஸ் பதிலடி -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
ஸ்டாலின் அதிரடி மாற்றம்.. இனி இவங்க யாருமே வேண்டாம்.. கொத்தாக தூக்கப்படும் பெரிய மீன்கள்! -
திமுகவில் இணைந்தார் Ex. MLA பனையூர் பாபு.. விசிகவில் இருந்து ஆயிரக்கணக்கானோருடன் ஜம்ப்! -
உள்ளாட்சி தேர்தலில் வாங்க பார்த்துக்கிறோம்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு சவால் விட்ட அனிதா ராதாகிருஷ்ணன் -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல..பெட்டியை கட்டும் செல்வப் பெருந்தகை! பதவிக்கு போட்டி போடும் பெரும் தலைகள் -
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால் -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்!












Click it and Unblock the Notifications