சென்னையின் முக்கிய சாலையில் 10 அடி ஆழத்தில் திடீர் பள்ளம்! 'பீக்' நேரத்தில் தவித்த வாகன ஓட்டிகள்
சென்னை: சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் 10 அடி ஆழத்தில் திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ளது. திடீரென சாலையில் ஏற்பட்ட பள்ளத்தால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. உடனடியாக அங்கு வந்த போக்குவரத்து போலீசார் பள்ளத்தின் அருகே தடுப்புகளை அமைத்து போக்குவரத்தை சீர் செய்து வருகிறார்கள். சாலை அருகே கழிவு நீர் கால்வாய் அமைக்கும் பணி நடப்பதால் திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலை எப்போதும் பரபரப்பாக காணப்படும். குறிப்பாக பீக் நேரங்களில் வாகனங்கள் அணிவகுத்து செல்லும். மிகவும் பரபரப்பான இந்த சாலையில் இன்று மாலை திடீரென 10 அடி ஆழத்தில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.

நல் வாய்ப்பாக அந்த பள்ளத்தில் வாகனங்கள் சிக்கவில்லை. இதனால் பெரும் அசாம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. எனினும் திடீரென சாலையில் 10 அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். இதையடுத்து உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சென்னை ஆயிரம் விளக்கு போலீசார் அங்கு வந்தனர்.
இதையடுத்து பள்ளம் ஏற்பட்ட பகுதியை சுற்றி தடுப்புகள் அமைத்த போலீசார் வாகனங்களை திருப்பி விட்டனர். யாரும் அந்த பள்ளத்தில் சிக்கிவிடாதவாறு தடுப்புகளை அமைத்துள்ளனர். இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து 10க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு வரவழைக்கப்பட்டனர். அவர்கள் போக்குவரத்தை சீர்படுத்தி வருகின்றனர்.
அப்பகுதியில் கழிவுநீர் சாலை அகற்றும் பணிகள் நடந்ததன் காரணமாக இந்த திடீர் பள்ளம் ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். பீக் நேரத்தில் சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் ஏற்பட்ட பள்ளத்தால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமமடைந்துள்ளனர். 10க்கும் மேற்பட்ட போலீசார் அப்பகுதியில் போக்குவரத்தை சீர்படுத்தும் பணியில் ஈடுபடுத்தபட்டுள்ளனர்.
-
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு!












Click it and Unblock the Notifications