சென்னையில் காலை முதல் மழை.. காரணம் கஜா..!
Recommended Video

சென்னை: சென்னை நகர் மற்றும் புறநகர்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. சில இடங்களில் கன மழையாகவும், சில இடங்களில் மிதமானதாகவும் மழை பெய்து வருகிறது.
கஜா புயலால் கடும் பாதிப்பை சந்தித்த திருவாரூர் மாவட்டத்திலும் பல இடங்களில் கன மழை பெய்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன.

கஜா புயலால் சென்னைக்குப் பாதிப்பு இல்லை. மழையும் கூட பெரிய அளவில் கிடைக்கவில்லை. இந்தப் புயல் சென்னைக்கானது அல்ல என்றும் வானிலை நிபுணர்கள் கூறியிருந்தனர். இந்த நிலையில் இன்று காலை முதல் சென்னையிலும், புறநகர்களிலும் விட்டு விட்டு மிதமான மழை பெய்து வருகிறது.
இந்த மழையால் மக்கள் உற்சாகமடைந்துள்ளனர். காற்றே இல்லாமல் மழை மட்டும் பெய்து வருகிறது. அரபிக் கடலில் தற்போது நிலை கொண்டுள்ள கஜா புயலின் காரணமாக இந்த மழை பெய்து வருவதாக தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார். இந்த மழையானது சென்னையின் தென் பகுதியில் அதிகம் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

கஜா புயல் காரணமாக கிடைத்து வரும் மழையின் ஒரு பகுதியே இது. இந்த மழையானது நாளை காலை எட்டரை மணி வரை இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார் தமிழ்நாடு வெதர்மேன்.
[டெல்டா மாவட்டங்களில்.. 25 ஆண்டுகளில் இல்லாத பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கஜா - வெதர்மேன்]
திருவாரூர்:
இதேபோல திருவாரூர் மாவட்டத்திலும் பல இடங்களில் கன மழை பெய்து வருகிறது. கஜா புயல் இங்கும் கோர தாண்டவமாடியிருந்தது. இந்த நிலையில் புயல் விலகிப் போனாலும் மழை தொடர்கிறது.
படங்கள், தகவல்: https://www.facebook.com/tamilnaduweatherman/posts/2400906276803309












Click it and Unblock the Notifications