டெல்டா மாவட்டங்களில்.. 25 ஆண்டுகளில் இல்லாத பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கஜா - வெதர்மேன்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    25 ஆண்டுகளில் இல்லாத பெரும் பாதிப்பு - தமிழ்நாடு வெதர்மேன்

    சென்னை: 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு டெல்டா மாவட்டத்தை கஜா புயல் தாக்கியுள்ளது என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

    கடந்த சில தினங்களாக வங்கக் கடலில் ஓய்வு எடுத்து கொண்டிருந்த கஜா புயல் நேற்று முன் தினம் இரவு கரையை கடக்க தொடங்கியது. பின்னர் நேற்று காலை கரையை கடந்தது.

    இது டெல்டா மாவட்டங்களில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் உணவு, தண்ணீர், மின்சாரம் இன்றி மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

    மாவட்டங்கள்

    மாவட்டங்கள்

    டெல்டா மாவட்டங்களில் கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடும் சீற்றத்துடன் கஜா புயல் தாக்கியுள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில் தமிழகத்தை நோக்கி வந்த கஜா புயல் டெல்டா மாவட்டங்களை உலுக்கி எடுத்து, மத்திய மாவட்டங்கள் வழியாகக் கேரளா நோக்கிச் செல்கிறது.

    கஜா புயல்

    கஜா புயல்

    கேரள மாநிலம், எர்ணாகுளம் மற்றும் கோட்டயம் மாவட்டங்களைக் கடந்து அரபிக் கடலுக்குள் செல்லும் போது வலுவிழந்த ஆழ்ந்த புயலாகச் செல்லும். தமிழகத்தைத் தாக்கி சேதப்படுத்திய வர்தா புயலுக்கு அடுத்தார்போல், கஜா புயலைக் கூறலாம்.

    மிக வேகமாக நகர்ந்து

    மிக வேகமாக நகர்ந்து

    அதுமட்டுமல்லாமல், கடந்த 1993-ம் ஆண்டுக்குப்பின் டெல்டா மாவட்டங்களை உலுக்கி எடுத்த கடுமையான சேதங்களை விளைவித்தது கஜா புயலாகும். டெல்டா மாவட்டங்களுக்குள் நுழைந்ததில் இருந்து கஜா புயல் மிகவேகமாக நகர்ந்து சென்றது.

    நம்ப வேண்டாம்

    நம்ப வேண்டாம்

    நிலப்பகுதியைக் கடந்து, மேற்குத் தொடர்ச்சி மலை வழியாக, அரபிக்கடலில் சென்று கஜா புயல் வலுவிழந்து, ஏறக்குறையத் தமிழகத்தை கடந்து விட்டதால், கஜாபுயல் குறித்த வதந்திகளையும், மீண்டும் கஜா வருகிறது என்பது போன்ற வீடியோக்களையும் நம்ப வேண்டாம் என்றார் அவர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+